பக்கம் எண் :

360சத்திய சோதனை

Untitled Document
ஒரு யோசனை செய்தோம்        புதிய திட்டத்தை ஒப்புக்கொள்ள
முடியாதவர்கள், இப்பொழுது பெறும்     சம்பளத்தையே தொடர்ந்து
வாங்கிக்கொள்ளுவது, நாளா           வட்டத்தில் குடியேற்றத்தின்
உறுப்பினராகும் லட்சியத்தை     அடைய முடிவு செய்வது என்பதே
அந்த யோசனை.

     இந்தத் திட்டத்தையொட்டி    ஊழியர்களிடம் பேசினேன். ஸ்ரீ
மதன்ஜித்திற்கு இந்த    யோசனை பிடிக்கவே இல்லை. என் திட்டம்
பைத்தியக்காரத்தனமானது  என்றார். தமக்குள்ள சகலத்தையும், நான்
ஈடுபட்டிருக்கும் இந்த           முயற்சி நாசமாக்கிவிடும் என்றார்.
ஊழியர்களெல்லோரும்         ஓடிப் போய் விடுவார்கள் என்றும்,
‘இந்தியன் ஒப்பீனியன்’      நின்று விடும் என்றும், அச்சகத்தையும்
மூடிவிடவேண்டியதாகிவிடும் என்றும் கூறினார்.

     அச்சகத்தில் வேலை செய்து வந்தவர்களில்    என் சிற்றப்பா
பிள்ளையான மதன்லால் காந்தியும் ஒருவர்.  என் யோசனையை ஸ்ரீ
வெஸ்ட்டிடம் கூறியபோதே    அவரிடமும் சொன்னேன். அவருக்கு
மனைவியும், குழந்தைகளும் இருந்தனர். ஆனால் அவர், குழந்தைப்
பருவத்திலிருந்தே என்னிடம் பயிற்சி பெற்று     என்னிடம் வேலை
செய்ய விரும்பி வந்தவர். என்னிடம்       அவருக்குப் பூரணமான
நம்பிக்கை உண்டு. ஆகவே,    எந்தவித வாதமும் செய்யாமல் என்
திட்டத்தை ஒப்புக்கொண்டார்.         அது முதல் என்னுடனேயே
இருக்கிறார். இயந்திரத்தை     ஓட்டுபவரான கோவிந்தசாமியும் என்
திட்டத்திற்குச் சம்மதித்தார்.           மற்றவர்கள் இத் திட்டத்தில்
சேர்ந்து கொள்ளவில்லை. ஆனால், அச்சகத்தை      எங்கே நான்
கொண்டு போனாலும்               அங்கே வருவதாக அவர்கள்
ஒப்புக்கொண்டார்கள்.

     இந்த விஷயங்களையெல்லாம்        ஆட்களுடன் இரண்டு
நாட்களில் பேசி முடித்துவிட்டேன்   என்று நினைக்கிறேன். அதன்
பிறகு, டர்பனுக்குப் பக்கத்தில் ஒரு     ரெயில்வே ஸ்டேஷனுக்குப்
பக்கமாக இருக்கக்கூடிய நிலம்         விலைக்குத் தேவை என்று
பத்திரிகைகளில்   விளம்பரம் செய்தேன். போனிக்ஸ் சம்பந்தமாகப்
பதில் வந்தது.  அந்தப் பண்ணையைப் பார்த்து வர ஸ்ரீ வெஸ்ட்டும்,
நானும் போனோம். ஒரு வாரத்திற்குள்        இருபது ஏக்கர் நிலம்
வாங்கினோம். அதில் இனிய     சிறிய நீர் ஊற்று ஒன்றும் ஆரஞ்சு
செடிகளும் மாமரங்களும் இருந்தன.    அந்த நிலத்திற்கு அடுத்தாற்
போல எண்பது ஏக்கர் நிலப்பகுதி ஒன்றும் இருந்தது. அதில் மேலும்
பல பழ மரங்களும், இடிந்துபோன        ஒரு பழைய குடிசையும்
இருந்தன. அந்த நிலத்தையும் வாங்கிவிட்டோம்.   எல்லாம் சேர்ந்து
ஆயிரம் பவுன் விலையாயிற்று.

     இது போன்ற என் முயற்சிகளிலெல்லாம்    காலஞ்சென்ற ஸ்ரீ
ருஸ்தம்ஜி எப்பொழுதும் எனக்கு ஆதரவு அளித்து வந்தார். இந்தத்
திட்டம் அவருக்குப்     பிடித்திருந்தது. ஒரு பெரிய கிடங்கிலிருந்து