பக்கம் எண் :

போனிக்ஸ் குடியிருப்பு 361

Untitled Document
எடுத்த பழைய இரும்புத் தகடுகளையும்,  வீடு கட்டுவதற்கான மற்றச்
சாமான்களையும் அவர் எனக்குக் கொடுத்தார். அவற்றைக் கொண்டு
வேலையை  ஆரம்பித்தோம். போயர் யுத்தத்தில் என்னோடு வேலை
செய்தவர்களான        சில        இந்தியத் தச்சர்களும், கொத்து
வேலைக்காரர்களும் அச்சகத்திற்கு ஒரு கொட்டகை   போட எனக்கு
உதவி செய்தனர்.       75 அடி நீளமும் 50 அடி அகலமும் உள்ள
இக் கொட்டகை       ஒரு           மாதத்திற்குள்ளேயே  கட்டி
முடிக்கப்பட்டுவிட்டது. ஸ்ரீ வெஸ்டும்      மற்றவர்களும் தங்களுக்கு
ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல் தச்சர்களுடனும்
கொத்து வேலைக்காரர்களுடனும் தங்கினர்.     அந்த இடம், இதற்கு
முன்பு   மனித சஞ்சாரமே இல்லாமல் இருந்த இடம். புல்லும் காடாக
மண்டிப் போயிருந்தது. அங்கே பாம்புகள்     ஏராளமாக இருந்ததால்
வசிப்பதற்கு ஆபத்தான இடம். முதலில்   எல்லோரும் கூடாரங்களில்
வசித்து வந்தோம். ஒரு வாரத்தில் எங்கள்    சாமான்களையெல்லாம்
வண்டிகளில் ஏற்றிப் போனிக்ஸூக்குக்    கொண்டு வந்துவிட்டோம்.
அந்த இடம் டர்பனிலிருந்து பதினான்கு  மைல் தூரத்தில் இருக்கிறது.
போனிக்ஸ் ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து   இரண்டரை மைல் தூரம்.

     ‘இந்தியன் ஒப்பீனியனின் ஓர் இதழை   மாத்திரமே வெளியில்
மெர்க்குரி அச்சகத்தில் அச்சிடவேண்டியிருந்தது.

     சம்பாதிக்கும் நோக்கத்தோடு    இந்தியாவிலிருந்து என்னுடன்
தென்னாப்பிரிக்காவுக்கு      வந்திருந்த    என் உறவினர்களையும்
நண்பர்களையும் போனிக்ஸு க்கு         இழுத்துவிட இப்பொழுது
முயன்றேன். அவர்கள்           பல வகையான வியாபாரங்களில்
ஈடுபட்டிருந்தவர்கள்.                 அவர்கள் செல்வம் திரட்ட
வந்தவர்களாகையால் அவர்களை   இங்கே வந்துவிடும்படி செய்வது
மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால்,   சிலர் ஒப்புக்கொண்டார்கள்.
அப்படி ஒப்புக்கொண்டவர்களில் மகன்லால் காந்தியின்     பெயரை
மாத்திரம் நான் முக்கியமாகக் கூறுவேன்.    மற்றவர்கள் திரும்பவும்
வியாபாரம் செய்யப் போய்விட்டனர்.      மகன்லால் காந்தி மட்டும்
வியாபாரத்திற்கு முழுக்குப் போட்டுவிட்டு என்னோடு வந்து சேர்ந்து
கொண்டார். தார்மிகத்துறையில் நான் செய்த    சோதனைகளில் என்
ஆரம்ப சக ஊழியர்களாக            இருந்தவர்கள் சிலர் உண்டு.
அவர்களுள், திறமையிலும் தியாகத்திலும் பக்தியிலும்    தலைசிறந்து
விளங்கியவர் இவரே.             கைத்தொழில்களை இவர் தாமே
கற்றுக்கொண்டார். அதனால்,      கைத்தொழிலாளிகளிடையே இவர்
வகித்த ஸ்தானம் இணையில்லாதது.

     இவ்விதம் போனிக்ஸ் குடியிருப்பு 1904-இல்   ஆரம்பமாயிற்று.
எவ்வளவோ கஷ்டங்களெல்லாம்      ஏற்பட்டபோதிலும் ‘இந்தியன்
ஒப்பீனியன்’ அங்கிருந்தே பிரசுரிக்கப்பட்டு வருகிறது.