பக்கம் எண் :

370சத்திய சோதனை

Untitled Document
குறித்து நான் இரு முறை விவாதிக்க வேண்டி வந்ததே இல்லை. என்
வாதத்திலுள்ள நியாயத்தை     அவர் ஒப்புக்கொண்டார். அச்சமயம்
இங்கிலாந்தில்  இருந்த ஸ்ரீமதி போலக்குக்கு இதைக் குறித்து உடனே
கடிதம் எழுதினார். அவரும்    இந்த யோசனையைச் சந்தோஷமாக
ஏற்றுக்கொண்டார். சில மாதங்களில்        ஜோகன்னஸ்பர்க் வந்து
சேர்ந்தார். கல்யாணத்திற்குச்    செலவு செய்யும் எண்ணம் இல்லை.
விசேட ஆடைகள்      அவசியம் என்றும் கருதப்படவில்லை தமது
பந்தத்திற்கு முத்திரையிட இவர்களுக்கு எந்த மதச் சடங்குகளுங்கூட
அவசியப்படவில்லை.       ஸ்ரீமதி போலக் பிறப்பினால் கிறிஸ்தவர்;
போலக், யூதர். நீதியின் தருமமே இவர்கள் இருவருக்கும் பொதுவான
மதம்.

     இந்த விவாக சம்பந்தமாக நடந்த        ஒரு வேடிக்கையான
சம்பவத்தைக் குறித்துச் சிறிது கூற விரும்புகிறேன்.  டிரான்ஸ்வாலில்
இருக்கும்        ஐரோப்பியரின்   கல்யாணங்களைப் பதிவு செய்து
கொள்ளும் அதிகாரி,           கறுப்பு அல்லது மற்ற நிறத்தினரின்
விவாகங்களைப் பதிவு செய்யக்கூடாது. இந்தக்  கல்யாணத்தில் நான்
மாப்பிள்ளைத்தோழனாக இருந்தேன்.      இதற்கு ஓர் ஐரோப்பியர்
எங்களுக்குக்        கிடைக்கமாட்டார் என்பதல்ல. ஆனால், அந்த
யோசனையைப் போல ஒப்புக்கொள்ளவில்லை. ஆகையால், நாங்கள்
மூவரும்        கல்யாணப் பதிவு அதிகாரியிடம் சென்றோம். நான்
மாப்பிள்ளைத் தோழனாக இருந்த ஒரு விவாகத்தில்,     தம்பதிகள்
வெள்ளக்காரர்கள்தான் என்று அவர்     எப்படி நிச்சயமாக நம்பி
விடமுடியும்? தம்பதிகள்            வெள்ளையர்தானா என்பதை
விசாரிப்பதற்காக        விவாகப் பதிவை ஒத்தி வைப்பதாக அந்த
அதிகாரி கூறினார். மறுநாளோ, ஞாயிற்றுக்கிழமை. அதற்கு  அடுத்த
நாள் புது வருடப் பிறப்பு நாளாதலால் விடுமுறை நாள்.  பக்தியுடன்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த        ஒரு திருமணத்துக்கு இத்தகைய
அற்பமான சாக்குப்போக்குக் கூறித் தேதியை ஒத்திவைப்பதென்றால்,
அதை யாரும்  சகித்துக்கொண்டிருக்க முடியாது. பதிவு இலாகாவின்
தலைவரான          பிரதம மாஜிஸ்டிரேட்டை எனக்குத் தெரியும்.
தம்பதிகளுடன் அவர் முன்பு சென்றேன். அவர்    சிரித்தார். பதிவு
அதிகாரிக்கு ஒரு குறிப்பும் கொடுத்தார்.   அதன் பேரில் முறைப்படி
திருமணம் பதிவாயிற்று.

     இதுவரையில் எங்களுடன்     வசித்து வந்த ஐரோப்பியர்கள்,
அநேகமாக எனக்கு       ஏற்கனவே தெரிந்தவர்கள்தான். ஆனால்
இப்பொழுதோ எங்களுக்கு      முற்றும் புதியவரான ஓர் ஆங்கிலப்
பெண் எங்கள் குடும்பத்தில் பிரவேசித்தாள்.      புதிதாக மணமான
இத் தம்பதிகளுக்கும் எங்களுக்கும் எப்பொழுதேனும்   அபிப்பிராய
பேதம் ஏற்பட்டதாக             எனக்கு ஞாபகம் இல்லை. ஸ்ரீமதி