பக்கம் எண் :

குடும்பக் காட்சி373

Untitled Document
தயங்கியதாகவோ, களைப்பாயிருப்பதாகச்  சொன்னதாகவோ எனக்கு
நினைவு இல்லை.

     வீட்டு வேலையைக்        கவனித்துக்கொள்ளுவதற்காக ஒரு
வேலைக்காரரை நியமித்திருந்தோம். குடும்பத்தில்  ஒருவராக அவரும்
எங்களுடன் வசித்தார். அவருடைய    வேலைகளில் குழந்தைகளும்
அவருக்கு உதவியாக இருப்பார்கள்.    முனிசிபல் தோட்டி மலத்தை
அப்புறப்படுத்திவிடுவார். ஆனால், கக்கூசுகளை அலம்பும் வேலையை
வேலைக்காரர் செய்யும்படி விடாமல், அவர் செய்வதை எதிர்பார்த்துக்
கொண்டிராமல் நாங்களே செய்து வந்தோம்.    குழந்தைகளுக்கு இது
நல்ல பயிற்சியாயிற்று.            இதன் பலனாக, என் புதல்வர்கள்
எல்லோருக்கும்        தோட்டி வேலையில் அருவருப்பு ஏற்படாமல்
இருந்தது. சுகாதார           விதிகள் சம்பந்தமாகவும் நல்ல பயிற்சி
பெற்றார்கள். ஜோகன்னஸ்பர்க் வீட்டில்   யாருக்கும் நோய் என்பதே
இல்லை. யாருக்காவது நோய் வந்தால்,   குழந்தைகள் மனம் உவந்து
பணிவிடை செய்வார்கள்.           குழந்தைகளின் புத்தகப் படிப்பு
விஷயத்தில் நான்             அசிரத்தையாக இருந்தேன் என்றும்
சொல்லமாட்டேன். என்றாலும், அதைத்         தியாகம் செய்துவிட
நிச்சயமாக  நான் தயங்கவில்லை. ஆகையால், என் புதல்வர்கள் என்
மீது குறை சொல்லுவதற்குக்   கொஞ்சம் காரணமும் இருக்கிறது. சில
சமயங்களில் இதை அவர்கள்    தெரிவித்தும் இருக்கிறார்கள். இதில்
ஓரளவுக்கு என் குற்றத்தையும் நான்   ஒப்புக்கொள்ளவே வேண்டும்.
அவர்களுக்கு         இலக்கியக் கல்வி அளிக்க வேண்டும் என்ற
ஆசை எனக்கு இருந்தது. நானே    அதைச் சொல்லிக் கொடுக்கவும்
முயன்றேன். ஆனால், ஒவ்வொரு சமயமும்     இதற்கு ஏதாவது ஓர்
இடையூறு       வந்துகொண்டே இருந்தது. வீட்டில் அவர்களுக்குப்
போதிக்க நான் வேறு எந்த    ஏற்பாடும் செய்யவில்லை. என்றாலும்,
தினமும்            என் அலுவலகத்திற்குப் போகும் போதும், வீடு
திரும்பும்போதும்,            அவர்கள் என்னுடன் நடந்துவரும்படி
செய்துவந்தேன். இப்படி நடக்கும் தூரம் மொத்தம்  ஐந்து மைல்கள்.
இது எனக்கும் அவர்களுக்கும்         நல்ல தேகாப்பியாசமாயிற்று.
இவ்விதம் நடந்து போகும்போது, வேறு யாரும்    என் கவனத்தைக்
கவராது போனால்,             பேசிக்கொண்டே போவதன் மூலம்
அவர்களுக்குக் கல்வி         போதிக்க முயல்வேன். இந்தியாவில்
தங்கியிருந்த மூத்த மகன் ஹரிலாலைத் தவிர மற்ற என் புதல்வர்கள்
எல்லோரும்        ஜோகன்னஸ்பர்க்கில்         இந்த வகையில்
வளர்ந்தவர்கள்தான்.         தினமும் ஒரு மணி நேரம் ஒழுங்காக
அவர்களுடைய        இலக்கியப் படிப்புக்குச் செலவிட என்னால்
முடிந்திருக்குமானால், மிகச்சிறந்த படிப்பை     நான் அவர்களுக்கு
அளித்திருப்பேன் என்பது என் கருத்து. அவர்களுக்குப் போதுமான
இலக்கியப் பயிற்சியை அளிக்க நான்