பக்கம் எண் :

374சத்திய சோதனை

Untitled Document
தவறி விட்டது,       அவர்களுக்கும்      எனக்கும் கூடத் துயரம்
தருவதாயிற்று. என் மூத்த மகன், தனது வருத்தத்தைத்   தனிமையில்
என்னிடத்திலும் பகிரங்கமாகப்         பத்திரிகைகளிலும் அடிக்கடி
தெரிவித்து வந்திருக்கிறான். ஆனால்    என் மற்ற புதல்வர்கள், என்
தவறு தவிர்க்கமுடியாதது என்று   எண்ணித் தாராளத்துடன் என்னை
மன்னித்து விட்டனர்.              இதற்காக நான் மனம் உடைந்து
போய் விடவில்லை. இதில் எனக்கு  ஏதாவது வருத்தமிருந்தால், அது
ஒரு தந்தை எப்படி இருக்கவேண்டுமோ அப்படி,     நான் இல்லாது
போய் விட்டேனே என்பதற்காகத்தான். சமூகத்திற்குச்  சேவை என்று
நான் எதை நம்பினேனோ           அது தவறானதாகவும் இருந்து
இருக்கக்கூடும்.    என்றாலும், நான் உண்மையாகவே நம்பிய அந்தச்
சேவையில் என் புதல்வர்களின் இலக்கியப் பயிற்சியை நான் தியாகம்
செய்துவிட்டேன் என்றே கருதுகிறேன்.  அவர்களுடைய ஒழுக்கத்தை
வளர்ப்பதற்கு       அவசியமானவை எவையோ  அவைகளை நான்
அலட்சியம் செய்துவிட்டதில்லை என்பது நிச்சயம். இதற்குச் சரியான
ஏற்பாடு   செய்யவேண்டியதே ஒவ்வொரு பெற்றோரின் முக்கியமான
கடமையும்       என்று நம்புகிறேன்.       இதில் நான் எவ்வளவு
முயன்றிருந்தும், என் புதல்வர்களிடம் குறைபாடுகள்      தோன்றும்
போதெல்லாம், அவற்றைக் குறித்து   எனக்கு நிச்சயமாகத் தோன்றும்
முடிவு ஒன்று உண்டு. அவர்களுடைய  குறைபாடுகளுக்குக் காரணம்.
நான் போதிய கவனம்        செலுத்தத் தவறியது அல்ல. ஆனால்,
அவர்களுடைய பெற்றோர் இருவரிடமும்    இருக்கும் குறைகள்தான்
என்பதே என் உறுதியான முடிவு.

     குழந்தைகள், பெற்றோரின்      உடற்கூற்றை மாத்திரமேயன்றி
அவர்களுடைய குணத்தின்      தன்மைகளையும் பிதுரார்ஜி தமாகப்
பெறுகின்றனர். சுற்றுச் சார்பிலுள்ள   நிலைமைகளும் குழந்தைகளின்
குணங்கள் அமைவதில்   முக்கியமான காரணங்களாக இருக்கின்றன.
என்றாலும், குழந்தைகள், மூதாதையர்களிடமிருந்து   அடைந்ததையே
ஆரம்ப    மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையை ஆரம்பிக்கின்றன.
மூதாதையர்களிடமிருந்து பெறும்   தீய தன்மைகளை வெற்றிகரமாகத்
தள்ளிவிட்டு வளரும்          குழந்தைகளையும் பார்த்திருக்கிறேன்.
ஆன்மாவுக்குத் தூய்மையே   இயற்கையான குணமாக இருப்பதனால்
இது சாத்தியமாகிறது.

     குழந்தைகளுக்கு ஆங்கிலக்       கல்வி அளிப்பது விரும்பத்
தக்கதா         என்பதைக் குறித்துப் போலக்கும் நானும் அடிக்கடி
கடுமையான விவாதம் செய்திருக்கிறோம்.        ஆங்கிலத்திலேயே
சிந்தித்து, ஆங்கிலத்திலேயே பேசுமாறு    தங்கள் குழந்தைகளுக்குப்
பயிற்சியளிக்கும் இந்தியப் பெற்றோர்,     தங்கள் குழந்தைகளுக்கும்
நாட்டுக்கும்           துரோகம் செய்தவர்கள் ஆவார்கள் என்பது