பக்கம் எண் :

376சத்திய சோதனை

Untitled Document
விரோதமும் இல்லை. அவர்கள்   இந்தியருக்கு தீமை செய்துவிடவும்
இல்லை. ‘கலகம்’ என்று      சொல்லப்பட்டதைக் குறித்து எனக்குச்
சந்தேகம் இருந்தது.     ஆனால், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உலகத்தின்
நன்மைக்காகவே இருக்கிறது என்று நான்   அப்பொழுது நம்பினேன்.
எனக்கு இருந்த உண்மையான விசுவாசம், அந்தச்   சாம்ராஜ்யத்திற்கு
ஒரு கெடுதலைக்கூட      எண்ண முடியாதபடி என்னைத் தடுத்தது.
ஆகையால், ‘கலகம்’        நியாயமானதுதானா,   நியாயமில்லாததா
என்பதும் கூட என்னுடைய    தீர்மானத்தைப் பாதித்து விடவில்லை.
நேட்டாலில் தொண்டர் பாதுகாப்புப் படை   ஒன்று இருந்தது. அதில்
அதிகம் பேரைச்          சேர்த்துக் கொள்ளுவதற்கு இடமிருந்தது.
‘கலகத்தை’ அடக்குவதற்காக இப்படை பயன்படுத்தப்பட்டு வருகிறது
என்றும் பத்திரிகைகளில் படித்தேன்.

     நேட்டாலுடன் நான் நெருங்கிய       தொடர்பு கொண்டவன்.
ஆகையால், என்னை அதன்   பிரஜையாகவே கருதினேன். எனவே,
அவசியமானால், இந்திய வைத்தியப் படை  ஒன்றை அமைக்க நான்
தயாராக இருக்கிறேன் என்று அறிவித்துக் கவர்னருக்கு எழுதினேன்.
என் யோசனையை         ஏற்றுக்கொண்டு  அவர் உடனே பதில்
எழுதினார்.

     இவ்வளவு சீக்கிரமே       என் யோசனை ஏற்றுக்கொள்ளப்
பட்டுவிடும் என்று    நான் எதிர்பார்க்கவில்லை. அதிர்ஷ்டவசமாக,
கடிதம் எழுதுவதற்கு முன்னாலேயே,         அவசியமான எல்லா
ஏற்பாடுகளையும்         செய்து வைத்திருந்தேன். என் யோசனை
ஏற்கப்பட்டுவிடுமானால்,              ஜோகன்னஸ்பர்க் ஜாகையை
எடுத்துவிடுவது, வேறு ஒரு சிறு          வீட்டுக்குப் போலக் குடி
போய்விடுவது, என் மனைவி   போனிக்ஸு க்குப் போய் அங்கேயே
இருப்பது என்று நான் தீர்மானித்தேன்.     இம் முடிவு குறித்து என்
மனைவி பூரண சம்மதம் அளித்தாள். இதுபோன்ற காரியங்களில் என்
தீர்மானத்திற்கு அவள் என்றாவது       ஒரு சமயமேனும் குறுக்கே
நின்றதாக எனக்கு ஞாபகமே இல்லை. ஆகையால், கவர்னரிடமிருந்து
பதில் வந்ததுமே,             வீட்டைக் காலி செய்வதற்கு வீட்டுச்
சொந்தக்காரருக்கு வழக்கமான           ஒரு மாத முன்னறிவிப்புக்
கொடுத்தேன். வீட்டிலிருந்த             சாமான்களில் சிலவற்றைப்
போனிக்ஸு க்கு அனுப்பிவிட்டு மீதியைப்      போலக்கிடம் விட்டுச்
சென்றேன்.

     டர்பனுக்குச் சென்று,       ஆள் தேவை என்று கோரிக்கை
வெளியிட்டேன்.        பெரிய படை எதுவும் தேவைப்படவில்லை.
இருபத்து நான்கு பேரைக் கொண்ட ஒரு குழு எங்கள் படை இதில்
என்னைத் தவிர மற்றும்          நான்கு குஜராத்திகள் இருந்தனர்.
சுயேச்சையான ஒரு பட்டாணியரைத்      தவிர மற்றவர்களெல்லாம்
தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்;           முன்னால் ஒப்பந்தத்