பக்கம் எண் :

ஜூலுக் கலகம் 377

Untitled Document
தொழிலாளராக இருந்தவர்கள்.

     எனக்கு ஓர் அந்தஸ்தை அளிப்பதற்காகவும்,  வேலை எளிதாக
நடப்பதற்காகவும், அப்பொழுது இருந்த சம்பிரதாயத்தை அனுசரித்தும், பிரதம வைத்திய அதிகாரி  என்னைத் தற்காலிக சார்ஜண்டு மேஜராக
நியமித்தார். நான்       தேர்ந்தெடுத்த மூவரை சார்ஜண்டுகளாகவும்,
ஒருவரைக்        கார்ப்பொரலாகவும் நியமித்தார்.    இவற்றிற்குரிய
ஆடைகளையும் அரசாங்கத்தினர்   எங்களுக்கு அளித்தனர். எங்கள்
படை ஆறு வாரம்         சேவை செய்தது. ‘கலக’ப் பிரதேசத்தை
அடைந்ததும், ‘கலகம்’     என்ற பெயர் அதற்குச் சரி என்பதற்கான
நியாயம் எதையும் நான்          அங்கே காணவில்லை. கண்ணால்
பார்க்கக்கூடிய வகையில்  எதிர்ப்பு என்பதே இல்லை. சிறு கலவரம்,
பெறும் புரட்சியாக      மிகைப்படுத்தப்பட்டதன் காரணம் இதுதான்:
ஜூலுக்கள் மீது         புது வரி விதித்தார்கள். அதைக் கொடுக்க
வேண்டாம் என்று ஒரு ஜூலுத்  தலைவர் தம் மக்களுக்கு கூறினார்.
வரி வசூலிக்கப் போன               ஒரு சார்ஜண்டை ஈட்டியால்
குத்திவிட்டனராம். விஷயம்    எப்படி இருந்தாலும், என் அனுதாபம்
ஜூலுக்கள்   பக்கமே இருந்தது. எங்களுடைய முக்கியமான வேலை,
காயமடைந்த ஜூலுக்களுக்குப்        பணிவிடை செய்வதே என்று,
தலைமைக்            காரியாலயத்திற்குப் போனதும் நான் அறிந்து
ஆனந்தமடைந்தேன். அங்கிருந்த      வைத்திய அதிகாரி எங்களை
வரவேற்றார்.     காய மடைந்த ஜூலுக்களுக்கு வெள்ளைக்காரர்கள்
மனமாரப் பணிவிடைகள் செய்வதில்லை என்றும், அவர்கள் புண்கள்
அழுகிக்கொண்டு வருகின்றன என்றும்,       என்ன செய்வதென்று
தெரியாமல் தாம் திகைத்துக் கொண்டிருந்ததாகவும்   அந்த அதிகாரி
கூறினார். நாங்கள் வந்தது, ஒரு பாவமும் அறியாத ஜூலுக்களுக்குத்
தெய்வ சகாயம்போல் ஆயிற்று என்று அவர் ஆனந்தம் அடைந்தார்.
புண்களுக்கு மருந்து வைத்துக்  கட்டுவதற்கு வேண்டியவைகளையும்,
கிருமி ஒழிப்பு மருந்துகளையும் எங்களுக்குக் கொடுத்தார். தாற்காலிக
ஆஸ்பத்திரிக்கும் எங்களை     அழைத்துச் சென்றார்.  எங்களைப்
பார்த்ததும் ஜூலுக்கள்         மகிழ்ச்சியடைந்தனர். எங்களுக்கும்
வெள்ளைக்காரச் சிப்பாய்கள் இருந்த இடத்திற்கும் மத்தியில் கம்பிக்
கிராதி போட்டிருந்தனர்.          அதன் வழியே வெள்ளைக்காரச்
சிப்பாய்கள் எங்களை எட்டிப் பார்த்து,   ஜூலுக்களுக்குச் சிகிச்சை
செய்ய வேண்டாம் என்று எங்களைத் தூண்ட முயன்றனர். அவர்கள்
சொல்லுவதை         நாங்கள் கேட்காது போகவே ஜூலுக்களைச்
சொல்லொணாத கேவலமான பாஷையில் திட்டினார்கள்.

     நாளாவட்டத்தில் இந்தச் சிப்பாய்களுடன்     நான் நெருங்கிப்
பழகலானேன். பிறகு எங்கள் வேலையில் தலையிடுவதை   அவர்கள்