பக்கம் எண் :

380சத்திய சோதனை

Untitled Document
நான் தெளிவாகக் கண்டேன். பிரம்மச்சரியத்தை அனுசரித்தால், நான்
செய்து வருவதைப் போன்ற தொண்டுக்கு,          மேலும் மேலும்
சந்தர்ப்பங்கள்       ஏற்படும் என்பதையும், குடும்ப வாழ்க்கையின்
இன்பத்திலும்             பிள்ளைகளைப் பெறுவதிலும் அவற்றை
வளர்ப்பதிலுமே நான் ஈடுபட்டிருந்தேனாயின் என் வேலைக்கு நான்
தகுதியுடையவனாகமாட்டேன்           என்பதையும் உணர்ந்தேன்.

     சுருங்கச் சொன்னால், உடலை நாடுவது அல்லது  ஆன்மாவை
நாடுவது இந்த இரண்டில்       ஏதாவது ஒன்றிற்காகவே நாம் வாழ
முடியும். உதாரணமாக, இச் சமயம் என் மனைவி  பிள்ளைப்பேற்றை
எதிர்பார்க்கும்        நிலையில் இருந்திருப்பாளாயின், இப் போரின்
சேவையில் நான்         குதித்திருக்க முடியாது. பிரம்மச்சரியத்தை
அனுசரிக்காத                 குடும்ப சேவை, சமூக சேவைக்குப்
பொருந்தாகதாகவே இருக்கும். பிரம்மச்சரியத்தை அனுசரித்தால் அது
முற்றும் பொருந்துவதாக இருக்கும்.

     இவ்வாறு சிந்தித்ததனால், முடிவான    விரதம் கொண்டு விட
வேண்டும் என்று ஒருவகையில்  அவசரப்பட்டுக் கொண்டிருந்தேன்.
இவ்விரதத்தை மேற்கொள்ளப்   போகிறோம் என்ற எண்ணமே ஒரு
வகையான        ஆனந்தத்தை உண்டாக்கியது. கற்பனா சக்தியும்
சுதந்திரமாக வேலை செய்ய ஆரம்பித்தது.     சேவை செய்வதற்கு
எல்லையற்ற துறைகள் தோன்றலாயின.

     இவ்வாறு கடுமையான       உடலுழைப்பின் நடுவிலும், மன
உழைப்பின் நடுவிலும் இருந்த சமயத்தில்,    ‘கலகத்தை’ அடக்கும்
வேலை அநேகமாக முடிந்துவிட்டது என்றும்,  நாங்கள் சீக்கிரத்தில்
திருப்பி    அனுப்பப்பட்டு விடுவோம் என்றும் ஒரு செய்தி வந்தது.
இரண்டொரு நாட்களுக்குப் பிறகு    நாங்கள் விடுவிக்கப்பட்டோம்
பிறகு சில தினங்களில் எங்கள்       வீடுகளுக்குத் திரும்பினோம்.

     கொஞ்ச நாட்கள் கழித்துக் கவர்னரிடமிருந்து  எனக்கு வந்த
கடிதத்தில், எங்கள்           வைத்தியப் படையின் சேவைக்குப்
பிரத்தியேகமாக நன்றி கூறியிருந்தார்.

     போனிக்ஸ் போய்ச் சேர்ந்ததும்,  பிரம்மச்சரிய விஷயத்தைக்
குறித்து சகன்லால், மகன்லால்,        வெஸ்ட் முதலியவர்களிடம்
பேசினேன். இந்த யோசனை       அவர்களுக்கும் பிடித்திருந்தது.
இவ் விரதத்தை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை  ஒப்புக்
கொண்டார்கள். ஆனால், அதிலிருக்கும் கஷ்டங்களையும் எடுத்துக்
கூறினர். சிலர், இதை அனுசரிக்கத்    தைரியமாக முன்வந்தார்கள்.
இதில் சிலர் வெற்றி பெற்றார்கள்         என்பதையும் அறிவேன்.

     நானும் துணிந்து இறங்கினேன்.        வாழ்நாள் முழுவதும்
பிரம்மச்சரியத்தை அனுசரிப்பது என்று விரதம் பூண்டேன். ஆனால்
நான் மேற்கொண்ட இக் காரியம்          எவ்வளவு மகத்தானது,
கடுமையானது என்பதை        அப்பொழுது நான் உணரவில்லை.