பக்கம் எண் :

இதய சோதனை 381

Untitled Document
அதிலுள்ள கஷ்டங்கள் இன்றும்கூட         என் எதிரே மிரட்டிக்
கொண்டிருக்கின்றன. இந்த விரதத்தின்   முக்கியத்துவமும் நாளுக்கு
நாள் எனக்கு             நன்றாகப் புலனாகிக்கொண்டு வருகிறது.
பிரம்மச்சரியம்           இல்லாத வாழ்க்கை,     சாரமற்றதாகவும்
மிருகத்தனமாகவும்           எனக்குத் தோன்றுகிறது. மிருகத்திற்கு
இயற்கையிலேயே   புலனடக்கம் என்பது இன்னதென்பது தெரியாது.
இதற்குரிய சக்தி இருப்பதனால்       புலனடக்கத்தை அனுசரிக்கும்
வரையிலும், மனிதன் மனிதனாக இருக்கிறான்.    பிரம்மச்சரியத்தின்
பெருமையைக் குறித்து நமது மத நூல்களில்        புகழ்ந்து கூறப்
பட்டிருப்பதெல்லாம்       மிகைப்படுத்திக்     கூறப்பட்டிருப்பதாக
முன்பெல்லாம்            நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால்,
பிரம்மச் சரியத்தைக் குறித்து நாளுக்கு நாள்   நான் தெளிவடைந்து
வருவதால்          சமய நூல்கள் கூறுவதெல்லாம் சரியானவையே
என்பதையும்,         அனுபவத்தில் கண்டு கூறப்பட்ட உண்மைகள்
என்பதையும் இன்று காண்கிறேன்.

     எவ்வளவோ அற்புதமான சக்தியையுடையதான பிரம்மச்சரியம்,
எளிதான காரியமும் அன்று         என்பதையும் கண்டேன். அது
நிச்சயமாக உடலைப்பற்றிய விஷயம்     மாத்திரம் அல்ல. உடலின்
அடக்கத்தோடு அது      ஆரம்பமாகிறது. ஆனால், அதோடு அது
முடிந்துவிடுவதில்லை. பூரணமான       பிரம்மச்சரியம், அசுத்தமான
எண்ணத்திற்கே இடம் தராது.      உண்மையான பிரம்மச்சாரி, சரீர
இச்சைகளைப் பூர்த்தி               செய்து கொள்ளக் கனவிலும்
எண்ணமாட்டான். அந்த நிலையை அவன் எய்திவிட்டால்  அன்றிப்
பிரம்மச்சரியத்தை அடைவதற்கு அவன் வெகுதூரம் கடக்கவேண்டி
இருக்கும்.

     எனக்கோ சரீர அளவில் பிரம்மச்சரியத்தை  அனுசரிப்பதிலும்
கூடக் கஷ்டங்கள் அதிகம் இருந்தன.          அநேகமாக அபாய
எல்லையைத் தாண்டிவிட்டேன் என்று நான்    இன்று சொல்லலாம்.
ஆயினும், இதில் மிகவும்         அத்தியாவசியமான - சிந்தையை
வசப்படுத்துவதில் - நான் இன்னும்   முழு வெற்றியையும் அடைந்து
விடவில்லை. இதில் உறுதியோ,        முயற்சியோ இல்லாமலில்லை.
ஆனால், விரும்பத்தகாத         எண்ணங்கள் எங்கிருந்து எழுந்து
வஞ்சகமாகப் படையெடுக்கின்றன என்பதை    அறிந்துகொள்ளுவது
இன்னும் எனக்கு           ஒரு பிரச்னையாகவே இருந்துவருகிறது.
விரும்பத்தகாத      எண்ணங்களைத் தடுத்து மனக் கதவைப் பூட்டி
விடுவதற்கு ஒருசாவி இருக்கிறது என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
ஆனால் ஒவ்வொருவரும் அதை அவரவரே  தேடிக் கண்டுபிடித்துக்
கொள்ள வேண்டியிருக்கிறது.    மகான்களும் முனிவர்களும் தங்கள்
அனுபவங்களை நமக்குச்    சொல்லிப் போயிருக்கிறார்கள். ஆனால்,
எல்லோருக்கும் ஏற்றதாகவும்,      தவறாமல் பலிக்கக் கூடியதாகவும்