பக்கம் எண் :

கஸ்தூரிபாயின் தீரம்387

Untitled Document
செய்ய வேண்டியிருந்தது. கிசிச்சை  வெற்றிகரமானதாயிற்று. ஆனால்,
அவள் அதிக நோவை              அனுபவிக்க நேர்ந்தது. நானே
அதிசயிக்கத்தக்க தீரத்துடன்     அதை அவள் சகித்துக்கொண்டாள்.
டாக்டரும்,         அவருக்குத் தாதியாக இருந்து பணிவிடை செய்த
அவருடைய மனைவியும்          அதிகக் கவனத்துடன் அவளைப்
பார்த்துக்கொண்டார்கள்.        இது டர்பனில் நடந்தது. பிறகு நான்
ஜோகன்னஸ்பர்க் போக டாக்டர் அனுமதித்தார். அவளைக்  குறித்துக்
கவலைப்பட வேண்டாம் என்றும் சொன்னார்.

     ஆனால், அவளுடைய உடல்நிலை அதிக  மோசமாகி விட்டது
என்று சில         தினங்களுக்கெல்லாம் எனக்குக் கடிதம் வந்தது.
படுக்கையில் உட்காருவதற்குக் கூட அவளுக்குப்பலமில்லை என்றும்
ஒரு சமயம் பிரக்ஞை இல்லாமல்    இருந்தாள் என்றும் அறிந்தேன்.
என்னுடைய சம்மதமில்லாமல் அவளுக்கு மதுவாவது,   மாமிசமாவது
கொடுக்கக்கூடாது         என்பது டாக்டருக்குத் தெரியும். எனவே,
ஜோகன்னஸ்பர்க்கில் இருக்கும் என்னுடன்     டெலிபோனில் பேசி,
அவளுக்கு மாட்டு மாமிச சூப் கொடுக்க  அவர் அனுமதி கேட்டார்.
இதற்கு நான் அனுமதி கொடுக்க முடியாது என்று  அவருக்கு பதில்
சொல்லிவிட்டேன். ஆயினும்,        இது விஷயமாக அபிப்பிராயம்
கூறக்கூடிய நிலையில் அவள்       இருந்ததால், அவளைக் கலந்து
ஆலோசிக்கலாம் என்றும், அவள்           இஷ்டம்போல் செய்து
கொள்ளலாம்           என்றும் சொன்னேன். ஆனால், டாக்டரோ,
“இவ்விஷயத்தில்        நோயாளியின் விருப்பத்தைக் கேட்க நான்
மறுக்கிறேன். நீங்கள் தான் இதில் அபிப்பிராயம் கூறவேண்டும். நான்
கொடுக்க விரும்பும் ஆகாரத்தைக் கொடுக்கும் சுதந்திரத்தை எனக்கு
அளிக்க நீங்கள் மறுப்பதானால், உங்கள்    மனைவியின் உயிருக்கு
நான் பொறுப்பாளியாகமாட்டேன்” என்றார்.

     அன்றே ரெயிலில்       டர்பனுக்குப் புறப்பட்டேன். அங்கே
போனதும் டாக்டரைச் சந்தித்தேன்.          அவர் நிதானத்துடன்
சமாசாரத்தை என்னிடம் கூறினார்.    “தங்களுடன் டெலி போனில்
பேசுவதற்கு முன்னாலேயே ஸ்ரீமதி காந்திக்கு    மாட்டு மாமிச சூப்
கொடுத்துவிட்டேன்” என்றார்.

     “டாக்டர், நீங்கள் செய்தது பெரும் மோசம்” என்றேன்.

     “ஒரு      நோயாளிக்கு மருந்தோ,     ஆகாரமோ இன்னது
கொடுப்பதென முடிவு செய்வதில், மோசம்  என்பதற்கே இடமில்லை.
நோயுற்றிருப்போரையோ, அவர்கள்      உறவினரையோ இவ்விதம்
ஏமாற்றிவிடுவதன் மூலம் நோயாளியின்        உயிரைக் காப்பாற்ற
முடிவதாயின், டாக்டர்களாகிய           நாங்கள் ஏமாற்றுவதையே
புண்ணியமாகக் கருதுகிறோம்” என்றார். டாக்டர்.

     இதைக் கேட்டதும் நான் பெரிதும் மனவேதனை அடைந்தேன்.
என்றாலும், அமைதியுடன் இருந்தேன்.       டாக்டர் நல்லவர்; என்