பக்கம் எண் :

388சத்திய சோதனை

Untitled Document
சொந்த நண்பர். அவருக்கும்,      அவருடைய மனைவிக்கும் நான்
எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறேன்.     என்றாலும், அவருடைய
வைத்திய தருமத்தைச்      சகித்துக் கொள்ள நான் தயாராயில்லை.

     “டாக்டர், இப்பொழுது          என்ன செய்வதாக உத்தேசம்
என்பதைச் சொல்லுங்கள்.   என் மனைவி சாப்பிட விரும்பினாலன்றி,
என் மனைவிக்கு     ஆட்டிறைச்சி அல்லது      மாட்டு இறைச்சி
கொடுப்பதை நான்     அனுமதிக்கவே மாட்டேன். இதனால், அவள்
இறந்துவிட நேர்ந்தாலும் சரிதான்” என்றேன்.

     “உங்களுடைய தத்துவத்தை     நீங்கள் தாராளமாக வைத்துக்
கொள்ளுங்கள். உங்களுடைய மனைவி      என்னிடம் சிகிச்சையில்
இருக்கும் வரையில் நான் விரும்பும்          எதையும் அவருக்குக்
கொடுக்கும் உரிமை எனக்கு இருக்க வேண்டும்.   இது உங்களுக்குப்
பிடிக்கவில்லையானால்,              அவரை அழைத்துக்கொண்டு
போய்விடும்படியே  வருத்தத்துடன் நான் கூற வேண்டியிருக்கும். என்
வீட்டில் அவர் சாக நான் பார்த்துக்கொண்டிருக்க முடியாது” என்றார்,
டாக்டர்.

     “அப்படியானால், அவளை      உடனே அழைத்துக்கொண்டு
போய்விட வேண்டும் என்கிறீர்களா?”

     “அவரை அழைத்துக்கொண்டு     போய்விடவேண்டும் என்று
நான் எப்பொழுது சொன்னேன்? இதில் எனக்குப்  பூரண உரிமையை
நீங்கள் கொடுக்க வேண்டும்         என்றே கூறுகிறேன். அப்படிக்
கொடுத்தால் நானும் என் மனைவியும் அவருக்காக  எங்களாலானதை
எல்லாம் செய்யத் தயாராக இருக்கிறோம்.   அவரைப்பற்றி நீங்களும்
கொஞ்சம்கூடக் கவலைப்படாமல் திரும்பிப் போகலாம்.   இந்தச் சிறு
விஷயத்தை நீங்கள்        புரிந்து கொள்ளவில்லை என்றால், என்
இடத்திலிருந்து அவரை      அழைத்துக் கொண்டு போய்விடுங்கள்
என்று சொல்ல என்னைக்       கட்டாயப்படுத்தியவர்களாவீர்கள்”.

     என் புதல்வர்களில் ஒருவனும்   என்னுடன் இருந்தான் என்று
நினைக்கிறேன். என் கருத்தை அவனும் முற்றும்  ஆதரித்தான். தன்
தாயாருக்கு மாட்டு மாமிச சூப்  கொடுக்கக் கூடாது என்றான். பிறகு
நான் கஸ்தூரிபாயிடமே இதைக் குறித்துப் பேசினேன்.  உண்மையில்
அவள் அதிகப் பலவீனமாக இருந்தாள்.         இதுபற்றிக் கலந்து
ஆலோசிக்கும் நிலையிலும் அவள் இல்லை. என்றாலும், அவளுடன்
ஆலோசிக்க வேண்டியது என்        வருந்தத்தக்க கடமை என்று
எண்ணினேன். டாக்டரும் நானும்  பேசிக்கொண்டிருந்த  விவரத்தை
அவளிடம் கூறினேன். அவள்               தீர்மானமாகப் பதில்
சொல்லி விட்டாள்.    “நான் மாட்டு மாமிச சூப் சாப்பிடமாட்டேன்.
இவ்வுலகில்        மானிடராய்ப் பிறப்பதே அரிது. அப்படியிருக்க
இத்தகைய பாதகங்களினால்         இவ்வுடலை அசுத்தப்படுத்திக்