பக்கம் எண் :

கஸ்தூரிபாயின் தீரம்389

Untitled Document
கொள்ளுவதைவிட உங்கள் மடியிலேயே    இறந்து போய்விட நான்
தயார்” என்றாள்.

     அவளுக்குச் சொல்லிப் பார்த்தேன். என்னைப் பின்பற்றித் தான்
நடக்கவேண்டும் என்ற கட்டாயம்        எதுவும் இல்லை என்றேன்.
மதுவையும் மாமிசத்தையும்          மருந்தாகச் சாப்பிடுவதில் தவறு
இருப்பதாக நினைக்காமல்          நண்பர்களான ஹிந்துக்கள் சிலர்
சாப்பிட்டிருக்கும் உதாரணங்களையும் அவளுக்கு எடுத்துக் கூறினேன்.
அவள் பிடிவாதமாக இருந்தாள். “தயவு செய்து  என்னை இங்கிருந்து
அழைத்துச் சென்று விடுங்கள்” என்றாள்.

     நான் மிகுந்த ஆனந்தமடைந்தேன்.       எனக்குக் கொஞ்சம்
மனக்கலக்கமும் ஏற்பட்டது. என்றாலும், அவளை எடுத்துக் கொண்டு
போய்விடத் தீர்மானித்தேன்.        நான் செய்துவிட்ட இம்முடிவை
டாக்டருக்கு அறிவித்தேன். அவருக்கு ஒரே கோபம்  வந்து விட்டது.
அவர் சொன்னதாவது:         “எவ்வளவு ஈவிரக்கமில்லாத மனிதர்
நீங்கள்! இப்பொழுது அவருக்கு இருக்கும்     தேக நிலையில் இந்த
விஷயத்தை அவரிடம் சொல்லவே       நீங்கள் வெட்கப்பட்டிருக்க
வேண்டும். இங்கிருந்து  எடுத்துக்கொண்டு  போகக் கூடிய நிலையில்
உங்கள் மனைவி இல்லை என்பதை     உங்களுக்குச் சொல்கிறேன்.
கொஞ்சம் உடம்பு அசங்கினாலும்         அவரால் தாங்க முடியாது.
வழியிலேயே அவர்             இறந்துவிட நேர்ந்தாலும்கூட நான்
ஆச்சரியப்படமாட்டேன்.        அப்படியிருந்தும் நீங்கள் பிடிவாதம்
செய்வதானால், உங்கள்       இஷ்டம்போல் செய்து கொள்ளுங்கள்.
அவருக்கு மாட்டு  மாமிச சூப் கொடுக்கக் கூடாது என்றால், அவரை
ஒருநாள் கூட என் இடத்தில் வைத்துக்கொண்டு அந்த   ஆபத்துக்கு
உடன்பட நான் தயாராக இல்லை.”

     ஆகவே, அந்த இடத்தைவிட்டு உடனே  புறப்பட்டுவிட முடிவு
செய்தோம். மழை தூறிக்கொண்டிருந்தது.  ரெயில்வே ஸ்டேஷனுக்குக்
கொஞ்ச தூரம் போக வேண்டும்.     டர்பனிலிருந்து போனிக்ஸு க்கு
ரெயிலில் போய் அங்கிருந்து     எங்கள் குடியிருப்புக்கு இரண்டரை
மைல் போகவேண்டும். நான் பெரும்   அபாயகரமான காரியத்தையே
மேற்கொண்டேன் என்பதில்       சிறிதும் சந்தேகமில்லை. ஆனால்,
கடவுளிடம் நம்பிக்கை வைத்து   இவ்வேலையில் இறங்கினேன். முன்
கூட்டிப் போனிக்ஸு க்கு ஓர்  ஆள் அனுப்பினேன். ஓர் ஏணை, ஒரு
புட்டி சூடான பால்,        ஒரு சுடு நீர்ப் புட்டி ஆகியவைகளுடன்
ஸ்டேஷனுக்கு வந்து       எங்களைச் சந்திக்குமாறு வெஸ்ட்டுக்குச்
சொல்லியனுப்பினேன். ஏணையில் வைத்துக்  கஸ்தூரிபாயைத் தூக்கி
செல்ல ஆறு ஆட்களும் வேண்டும்   என்று அறிவித்தேன். அடுத்த
ரெயிலில்            கஸ்தூரிபாயை அழைத்துச் செல்ல ரெயில்வே
ஸ்டேஷனுக்குப் போக      ஒரு ரிக்ஷாவை அமர்த்தினேன். அபாய
நிலையிலிருந்த அவளை