பக்கம் எண் :

390சத்திய சோதனை

Untitled Document
அதில் வைத்துக் கொண்டு புறப்பட்டேன்.

     கஸ்தூரிபாயை          உற்சாகப்படுத்த வேண்டிய அவசியம்
ஏற்படவில்லை. அதற்குப் பதிலாக அவள் எனக்கு ஆறுதல் கூறினாள்.
“எனக்கு ஒன்றும் நேர்ந்துவிடாது.      நீங்கள் கவலைப்படாதீர்கள்”
என்றாள்.

     பல நாட்களாக ஆகாரமே இல்லாததனால்    அவள் எலும்பும்
தோலுமாக இருந்தாள். ஸ்டேஷன்      பிளாட்பாரம் மிகப் பெரியது.
ரிக்ஷாவைப் பிளாட்பாரத்திற்குள்    கொண்டு போக முடியாததனால்
கொஞ்ச தூரம் நடந்துதான் ரெயில் நிற்கும்     இடத்திற்குச் செல்ல
வேண்டும் ஆகையால், அவளை       என் கைகளிலேயே தூக்கிக்
கொண்டுபோய் ரெயில்          வண்டியில் ஏற்றினேன். போனிக்ஸ்
ஸ்டேஷனிலிருந்து       ஏணையில் வைத்துக் கொண்டு போனோம்.
அங்கே நீர்ச் சிகிச்சை செய்ததில்    கொஞ்சம் கொஞ்சமாகப் பலம்
பெற்று வந்தாள்.

     நான் போனிக்ஸ்           போய்ச் சேர்ந்த இரண்டு மூன்று
நாட்களுக்கெல்லாம் ஒரு சாமியார் அங்கே வந்து சேர்ந்தார். டாக்டர்
கூறிய யோசனையை ஏற்றுக்கொள்ள           நாங்கள் எவ்விதம்
பிடிவாதமாக         மறுத்துவிட்டோம் என்பதை அவர் அறிந்தார்.
கஸ்தூரிபாயின் நிலைக்காக      அனுதாபம் கொண்டு, எங்களுடன்
வாதாடி எங்களைத்        திருப்பிவிடுவதற்காகவே அவர் வந்தார்.
சாமியார் அங்கே வந்தபோது என் இரண்டாவது மகன்  மணிலாலும்,
மூன்றாவது மகன் ராமதாஸு ம் அங்கே இருந்ததாக எனக்கு ஞாபகம்.
மாமிசம் சாப்பிடுவது மத விரோதமாகாது என்று   அவர் வாதித்தார்.
இதற்கு மனுஸ்மிருதியிலிருந்து ஆதாரங்களையும் எடுத்துக் கூறினார்.
என் மனைவியின் முன்னிலையில் அவர்       இவ்வாறு விவாதம்
செய்தது எனக்குப்   பிடிக்கவே இல்லை. ஆனால், மரியாதைக்காக
நான் அவரைத்          தடுக்காமல் இருந்தேன். மனுஸ்மிருதியின்
சுலோகங்கள் எனக்குத் தெரியும்.     என்னுடைய நம்பிக்கையைப்
பொறுத்தவரையில்           அவை தேவையும் இல்லை. அந்தச்
சுலோகங்களெல்லாம்     இடைச் செருகல்கள் என்று கருதும் ஒரு
சாராரும் இருக்கிறார்கள். அப்படி     இவை இடைச்  செருகல்கள்
அல்ல என்றே வைத்துக்கொண்டாலும் என்னுடைய  சைவ உணவுக்
கொள்கை சமய நூல்களை           ஆதாரமாகக்  கொள்ளாமல்
சுயேச்சையாகக் கைக்கொள்ளப்பட்டதாகும்.    கஸ்தூரிபாயின் மன
உறுதியும் அசைக்க முடியாதது.      சாத்திரங்களைப்பற்றி  அவள்
எதுவும் அறியாள். தன்னுடைய மூதாதையரின் பாரம்பரிய  தருமமே
அவளுக்குப் போதுமானதாக இருந்தது. குழந்தைகளும்  தந்தையின்
கொள்கையில் உறுதி கொண்டிருந்தன. ஆகையால்,      அவர்கள்
சாமியாரின் வாதங்களை அலட்சியமாகக் கருதி எதிர்த்துப் பேசினர்.
இந்தச் சம்பாஷணைக்குக் கஸ்தூரிபாய்