பக்கம் எண் :

42சத்திய சோதனை

Untitled Document
யாரும் உங்கள்  தந்தையின் பதவிக்கு    வர முடியாது. இப்பொழுது
இப்பையன்  இன்னும்       தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பதால்,
அப்பதவிக்கு       இவனைத் தயார் செய்வதில்   கவனம் செலுத்த
வேண்டும். இவன்   பி. ஏ. பட்டத்தைப் பெறுவதற்கு நான்கு அல்லது
ஐந்து    ஆண்டுகளாவது ஆகும். அப்படிப் பெறும் பட்டம், இவனை
ஓர் அறுபது ரூபாய்ப் பதவிக்குத்தான் தகுதியுடையவனாக்குமேயின்றித்
திவான் பதவிக்குத்    தகுதியுடையவனாக்காது. என் மகனைப் போல்
இவனும் சட்டம் படித்துத்       தேர்ச்சி பெறவும் அதிக காலமாகும்.
அதற்குள் திவான் பதவியைப் பெற   முயலும் வக்கீல்கள் ஏராளமாகி
விடுவார்கள்.இதையெல்லாம்விட இவனை இங்கிலாந்துக்கு அனுப்புவது
எவ்வளவோ மேல் என்று எனக்குத் தோன்றுகிறது.    பாரிஸ்டராவது
மிக எளிது என்று என்  மகன் கேவல்ராம்       கூறுகிறான். மூன்று
வருடங்களில் இவன்  திரும்பிவிடலாம், செலவும்      நான்கு முதல்
ஐயாயிரத்திற்கு மேல்   ஆகாது. இங்கிலாந்திலிருந்து இப்பொழுதுதான்
வந்திருக்கும் அந்தப் பாரிஸ்டரைப் பாருங்கள். எவ்வளவு நாகரிகமாக
அவன் வாழ்க்கை நடத்துகிறான் !  கேட்டால் போதும்,  அவனுக்குத்
திவான் பதவி       கிடைத்துவிடும்.   இவ்வருடமே மோகன்தாஸை
இங்கிலாந்துக்குக் கட்டாயம் நீங்கள்   அனுப்பிவிடவேண்டும் என்றே
நான் கூறுவேன். இங்கிலாந்தில்   கேவல்ராமுக்கு அநேக நண்பர்கள்
இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அவன்   அறிமுகக் கடிதங்கள்
கொடுப்பான். மோகன்தாஸ் அங்கே சுகமாக  இருந்துவிட்டு வரலாம்!.

     மாவ்ஜி தவேயை, ஜோஷிஜி     என்று சொல்லுவது வழக்கம்.
அவர் என்னைத் திரும்பிப்        பார்த்து, “இங்கே படிப்பதைவிட
இங்கிலாந்துக்குப் போகவே நீ   விரும்புகிறாயல்லவா?” என்று முழு
நம்பிக்கையுடன் கேட்டார். இதைவிட எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது
வேறு எதுவும் இருக்க முடியாது.   கஷ்டமான கல்லூரிப் படிப்புடன்
நான் தொல்லைப்பட்டுக்      கொண்டிருந்தேன். ஆகையால், இந்த
யோசனையை உடனே    ஏற்றுக்கொண்டு,   “ என்னை எவ்வளவு
சீக்கிரத்தில் அனுப்புகிறீர்களோ அவ்வளவுக்கு நல்லது ” என்றேன்.
“ சீக்கிரத்தில் பரீட்சைகளில்      தேறிவிடுவது என்பது எளிதான
வேலையே அல்ல.      எனவே, என்னை    வைத்தியத் தொழில்
பயிற்சிக்கு அனுப்பக் கூடாதா?” என்று கேட்டேன்.

     என் சகோதரர் உடனே குறுக்கிட்டு இவ்வாறு கூறினார்: “அது
தந்தைக்குப் பிடிப்பதேயில்லை.  அவர் உன்னை மனத்தில் வைத்துக்
கொண்டே, ‘பிணங்களை அறுத்துச் சோதிப்பது வைஷ்ணவர்களாகிய
நமக்குத் தகாது ’    என்று சொன்னார்.  நீ வக்கீல் ஆக வேண்டும்
என்றுதான் அவர் விரும்பினார்.”