பக்கம் எண் :

இங்கிலாந்து போக ஆயத்தம்43

Untitled Document
     ஜோஷிஜி இடைமறித்துத் கூறியதாவது :   “காந்திஜியைப் போல்
வைத்தியத் தொழில் கூடாது              என்பவனல்ல நான். நமது
சாத்திரங்களும் அதற்கு விரோதமாகக்     கூறவில்லை. ஆனால், ஒரு
வைத்தியப் பட்டம் உன்னைத் திவான்    ஆக்கிவிடாது. நீ திவானாக
வேண்டும்; சாத்தியமானால் இன்னும்       பெரிய பதவியையும் பெற
வேண்டும் என்று       நான்  விரும்புகிறேன். அப்படி ஆனால்தான்
உன்னுடைய பெரிய குடும்பத்தை       நீ காப்பாற்ற  முடியும். காலம்
வேகமாக மாறிக்கொண்டே போகிறது.  நாளுக்கு நாள்    கஷ்டமாகிக்
கொண்டும் வருகிறது. ஆகையால், மிகப் புத்திசாலித்தனமான  காரியம்
பாரிஸ்டராகி      விடுவதுதுான்!”    என் தாயாரைப் பார்த்து அவர்
கூறியதாவது: “இப்பொழுது நான் புறப்பட வேண்டும். நான்  கூறியதை
நன்றாக யோசிக்கும்படி       கேட்டுக்கொள்ளுகிறேன். நான் திரும்ப
இங்கே     வரும்போது,     இங்கிலாந்துக்குப்    புறப்படுவதற்கான
ஏற்பாடுகளைக் குறித்து நான் அறியலாம் என்று   எதிர் பார்க்கிறேன்.
ஏதாவது ஒருவகையில் நான் உதவி செய்ய முடியுமென்றால்
நிச்சயமாக எனக்குத் தெரிவியுங்கள்.”

     ஜோஷிஜி     போய்விட்டார் :  நானும்    மனக்கோட்டைகள்
கட்டலானேன்.

     என் மூத்த சகோதரரின்  மனம் மிகப் பரபரப்படைந்து விட்டது.
என்னை அனுப்புவதற்கு  வேண்டிய பணத்திற்கெல்லாம்  என்ன வழி
செய்வது?           என்னைப் போன்ற ஓர்   இளைஞனை நம்பித்
தன்னந்தனியாக வெளிநாடுகளுக்கு அனுப்புவது சரியா?

     என் தாயாருக்கும் ஒரே மனக்குழப்பம்  ஆகிவிட்டது. என்னை
விட்டுப் பிரிய அவர் விரும்பவில்லை. ஆகவே,    எனக்குச் சாக்குப்
போக்குச்             சொல்லிவிட முயன்றார். “ இப்பொழுது சிறிய
தகப்பனார்தான் நம் குடும்பத்தில் பெரியவர். அவரை முதலில் கலந்து
ஆலோசிக்க வேண்டும். அவர் ஒப்புக்கொண்டால்  இவ்விஷயத்தைப்
பற்றி யோசிப்போம்” என்றார்.

     என் சகோதரருக்கு இன்னும்      ஒரு யோசனை தோன்றிற்று.
அவர்    என்னிடம்    பின்வருமாறு    கூறினார் :   “போர்பந்தர்
சமஸ்தானத்தினிடம்        உதவியை  எதிர்பார்க்க நமக்கு உரிமை
இருக்கிறது.  ஸ்ரீ லேலி            அதற்கு  நிர்வாக அதிகாரி. நம்
குடும்பத்தினிடம் அவருக்கு நல்ல       மதிப்பு உணடு. நமது சிறிய
தகப்பனாரிடம் அவர் பிரியமாக   இருக்கிறார்.     இங்கிலாந்தில் நீ
படிப்பதற்காக உனக்கு ஏதாவது   சமஸ்தான உதவி  அளிக்க அவர்
சிபாரிசு செய்வது சாத்தியமாகலாம்.”

     இந்த யோசனை எனக்கும்        பிடித்தமானதாக இருந்தது.
போர்பந்தருக்கு உடனே புறப்படுவதற்குத்     தயாரானேன். அந்தக்
காலத்தில் ரயில்     கிடையாது. மாட்டு  வண்டியில் ஐந்து நாட்கள்
போகவேண்டும். நான் பயங்காளி என்பதை முன்னாலேயே