பக்கம் எண் :

44சத்திய சோதனை

Untitled Document
கூறியிருக்கிறேன்.  இங்கிலாந்துக்குப்போகவேண்டும்  என்ற ஆசையே
என்னை முற்றும்  அப்பொழுது       ஆட்கொண்டிருந்ததால் அதன்
முன்னால் என்       பயங்காளித்தனமெல்லாம் ஓடி மறைந்துவிட்டது.
தோராஜி வரைக்கும்   ஒரு மாட்டு வண்டியை அமர்த்திக்கொண்டேன்.
போர் பந்தருக்கு       ஒரு நாள் முன்னாடியே போய்விட வேண்டும்
என்பதற்காகத்    தோராஜியில் ஓர்     ஒட்டகத்தை அமர்த்தினேன்.
ஒட்டகத்தில் நான்     சவாரி செய்தது      அதுதான் முதல் முறை.

     கடைசியாகப்    போர்பந்தர் போய்ச் சேர்ந்தேன்.  என் சிறிய
தகப்பனாரை சாஷ்டாங்கமாய் வணங்கி   எல்லாவற்றையும் அவரிடம்
சொன்னேன். அதைப்பற்றி     அவர் யோசித்துவிட்டுப் பின்வருமாறு
கூறினார் : “ மத தருமம் கெடாமல்  ஒருவர் இங்கிலாந்தில்  இருப்பது
சாத்தியம்      என்பது      எனக்கு          நிச்சயமில்லை.நான்
கேள்விப்பட்டிருப்பவைகளைக்       கொண்டு  பார்த்தால் எனக்குச்
சந்தேகமாகத்தான் இருக்கிறது. இந்தப் பெரிய பாரிஸ்டர்களை   நான்
பார்க்கும்போது, இவர்கள்    வாழ்க்கைக்கும்          ஐரோப்பியர்
வாழ்க்கைக்கும் எந்த        வித்தியாசத்தையும் நான் காணவில்லை.
இவர்கள் எந்த    உணவையும் சாப்பிடுகிறார்கள். இவர்கள்  வாயில்
சுருட்டு இல்லாமல்     இருப்பதே      இல்லை.   வெட்கமில்லாமல்
ஆங்கிலேயரைப் போலவே உடை உடுத்துகிறார்கள்.  இவையெல்லாம்
நம் குடும்ப பாரம்பரியத்திற்குப்  பொருந்தாதவை.   சீக்கிரத்தில் நான்
க்ஷேத்திர யாத்திரைக்குப்       புறப்படப் போகிறேன். இன்னும் பல
வருடங்களுக்கு நான் உயிரோடிருக்கப் போவதில்லை.    மரணத்தின்
தருவாயில் இருக்கும் நான்,       இங்கிலாந்துக்குப் போகவும், கடல்
கடக்கவும் உனக்கு    அனுமதி கொடுக்க     எப்படித் துணிவேன்?
ஆனால், உன் வழியில்     குறுக்கிடமாட்டேன். இதற்கு  முக்கியமாக
வேண்டியது       உன்   தாயாரின்     அனுமதி. அவர்  அனுமதி
கொடுத்துவிட்டால்,              சுகமாகப் போய் வா. இதில்  நான்
குறுக்கிடமாட்டேன் என்று அவருக்குத்  தெவிரி. என் ஆசி  உனக்கு
எப்பொழுதும் இருக்கும்.”

     “இதைவிட    அதிகமாக  எதையும் நான்    உங்களிடமிருந்து
எதிர்பார்க்க முடியாது” என்றேன்,  “என் தாயாரின்    சம்மதத்தைப்
பெற முயல்கிறேன். ஸ்ரீ லேலிக்கு     என்னைப்பற்றி நீங்கள் சிபாரிசு
செய்கிறீர்களா?” என்று கேட்டேன்.

     “அதை நான் எப்படிச்      செய்ய முடியும்?” என்றார் அவர்.
“ஆனால், அவர் நல்லவர்.     உனது உறவு முறையைத் தெரிவித்து,
அவரை நீ பார்க்க விரும்புவதாகக் கேள்;    நிச்சயமாகப் பார்ப்பார்.
உனக்கு உதவி செய்யவும் கூடும்” என்றார்.

     என் சிறிய   தகப்பனார்    எனக்கு ஏன்    சிபாரிசுக் கடிதம்
கொடுக்கவில்லை    என்பதைப்பற்றி என்னால்   கூறமுடியாது. நான் இங்கிலாந்துக்குப் போவது மத விரோதமான   காரியம் என்ற கருத்து