பக்கம் எண் :

இங்கிலாந்து போக ஆயத்தம்45

அவருக்கு இருந்ததால் நான் போவதில் நேரடியாக ஒத்துழைக்க அவர்
தயங்கினார் என்று ஏதோ கொஞ்சம் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

     ஸ்ரீ லேலிக்கு எழுதினேன். தமது வீட்டில் வந்து   பார்க்கும்படி
அவர் அறிவித்தார்.மாடிப் படிக்கட்டு ஏறிக்கொண்டிருந்தபோதே அவர்
என்னைப் பார்த்தார்.    “ முதலில் நீ பி.ஏ. பாஸ் செய். பிறகு வந்து
என்னைப்          பார்.   இப்பொழுது   உனக்கு எந்த உதவியும்
செய்வதற்கில்லை” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு     வேகமாகப்
படியேறிப் போய்விட்டார்.  அவரைச் சந்திப்பதற்காக    எவ்வளவோ
விரிவான முன்னேற்பாடுகளை எல்லாம்    செய்திருந்தேன். அவரிடம்
பேசச் சில     வாக்கியங்களைக் கவனமாகக் கற்று வைத்திருந்தேன்.
தாழ்ந்து தலை வணங்கி,      இரு கரங்களாலும் சலாம் போட்டேன்.
ஆனால், அவையெல்லாம் ஒன்றுக்கும் பயன்படவில்லை.

     பிறகு என் மனைவியின்     நகைகளைப் பற்றி நினைத்தேன்.
என்  மூத்த அண்ணன் நினைவும்  வந்தது. அவரிடம் எனக்கு முழு
நம்பிக்கையும் உண்டு. அவர் தாராளமான மனமுடையவர். என்னைத்
தம் மகன் போலவே கருதி அன்பு கொண்டிருந்தார்.

     போர்பந்தரிலிருந்து    ராஜ்கோட்டுக்குத்    திரும்பி, அங்கே
நடந்ததையெல்லாம்         தெரிவித்தேன். ஜோஷிஜியைக் கலந்து
ஆலோசித்தேன். அவரோ,  அவசியமானால் கடன் வாங்கும் படியும்
யோசனை கூறினார். என்        மனைவியின் நகைகளை விற்றால்
இரண்டாயிரம் அல்லது   மூவாயிரம் ரூபாய் கிடைக்கும்.  அவற்றை
விற்றுவிடும்     யோசனையையும் கூறினேன். எப்படியும்    பணம்
தேடிவிடுவதாக என் சகோதரர் வாக்களித்தார்.

     என் தாயார் மாத்திரம் இன்னும்     என்னை இங்கிலாந்துக்கு
அனுப்ப   விரும்பாமலேயே      இருந்தார்.   நுட்பமாக   எல்லா
விவரங்களையும்      விசாரித்துக்   கொண்டிருந்தார்.  வாலிபர்கள்
இங்கிலாந்துக்குப் போய்க்    கெட்டு விடுகிறார்கள் என்று   யாரோ
ஒருவர் அவருக்குச்     சொல்லிவிட்டார். இன்னும்  யாரோ ஒருவர்,
‘அவர்கள் மாமிசம் சாப்பிட       ஆரம்பித்து விடுகிறார்கள் என்று
சொல்லிவிட்டார். ‘ குடிக்காமல் அங்கே     அவர்களால் இருக்கவே
முடியாது’ என்று             இன்னும் ஒருவர்  சொல்லியிருந்தார்.
“இவைகளுக்கெல்லாம் நீ என்ன சொல்லுகிறாய்?” என்று என் தாயார்
என்னைக் கேட்டார். நான்,     “என்னை நீங்கள் நம்பமாட்டீர்களா?
உங்களிடம் பொய்  சொல்லமாட்டேன்.      ‘ அவைகளில் எதையும்
தீண்டுவதில்லை ’          என்று உங்களுக்குச்   சத்தியம் செய்து
கொடுக்கிறேன்.  அங்கே அப்படிப்பட்ட அபாயம் ஏதாவது இருந்தால்
ஜோஷிஜி என்னைப் போக விடுவாரா?” என்றேன்.

     “உன்னை நானே நம்பலாம். ஆனால், நீ தொலைவான நாட்டில்