பக்கம் எண் :

420சத்திய சோதனை

Untitled Document
அறிந்தோ, அறியாமலோ    செய்யாமல் ஒரு கணமும் வாழமுடியாது.
வாழ்வது என்ற ஒன்றிலேயே,       உண்பது, குடிப்பது, நடமாடுவது
ஆகியவைகளில், என்ன தான் மிகச்    சிறியதாயிருப்பினும் ஏதாவது
இம்சை அல்லது உயிரைக் கொல்லுவது    அவசியமாக இருந்துதான்
தீருகிறது. ஆகையால், அகிம்சை       விரதம் கொண்டவர், அந்தத்
தருமப்படி      உண்மையோடு நடப்பதாயின், அவருடைய ஒவ்வோர்
செயலும் கருணையிலிருந்தே எழுவதாக இருக்க வேண்டும். மிக மிகச்
சிறிய உயிரையும் கூடக் கொல்லாமல் தம்மால்     முடிந்த வரையில்
அதை அவர் காப்பாற்றவேண்டும். இவ்விதம்    இம்சையின் மரணப்
பிடியிலிருந்து விடுபடவும் இடை விடாது     முயன்று வரவேண்டும்,
புலனடக்கத்திலும்     கருணையிலும் அவர் இடை விடாது வளர்ந்து
கொண்டும் இருப்பார். ஆனாலும்,     புற இம்சையிலிருந்து மாத்திரம்
அவர் என்றுமே பூரணமாக விடுபட்டு விட முடியாது.

     மேலும், எல்லா ஜீவராசிகளின்   ஒருமைப்பாடே அகிம்சையின்
அடிப்படையாகையால்,         ஒன்றின் தவறு மற்றெல்லாவற்றையும்
பாதிக்காமல் இருக்க முடியாது. ஆகவே,   மனிதன் இம்சையிலிருந்து
முற்றும் விடுபட்டு விட இயலாது.     ஒரு சமூகத்தைச் சேர்ந்தவராக
ஒருவர் இருந்து            கொண்டிருக்கும் வரையில், அச் சமூகத்
தொடக்கத்திலிருந்தே     ஏற்படுவதான இம்சையில் அவரும் கலந்து
கொண்டு விடாமல் இருப்பதற்கில்லை.      இரு நாட்டினர் போராடிக்
கொண்டிருக்கும்போது, யுத்தத்தை    நிறுத்துவதே அகிம்சைவாதியின்
பொறுப்பு. அப் பொறுப்பை      நிறைவேற்ற இயலாதவர், யுத்தத்தை
எதிர்ப்பதற்கான சக்தி இல்லாதவர்;         யுத்தத்தை எதிர்ப்பதற்கு
வேண்டிய தகுதியை அடையாதவர் இவர்களும் அப்போரில் ஈடுபடக்
கூடும். அப்படிப் போரில் ஈடுபட்டாலும் தம்மையும்   தம் நாட்டையும்
உலகத்தையும் போரிலிருந்து        மீட்க முழு மனத்துடன் முயற்சி
செய்யவேண்டும்.

     பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மூலமே என்  அந்தஸ்தையும், என்
நாட்டு மக்களின் அந்தஸ்தையும் உயர்த்திக்கொள்ளலாம் என்று நான்
நம்பியிருந்தேன்.      இங்கிலாந்தில் நான் இருந்த போது பிரிட்டிஷ்
கடற்படையின் பாதுகாப்பை நான் அனுபவித்து வந்தேன். பிரிட்டனின்
ஆயுத பலத்தின் கீழ் நான்   பத்திரமாகவும் இருந்து வந்தேன். நான்
இவ்விதம் இருந்ததன் மூலம் அதனுடைய   பலாத்கார சக்தியில் நான்
நேரடியாகப்               பங்குகொண்டு வருகிறேன். ஆகையால்,
சாம்ராஜ்யத்துடன் எனக்கு இருக்கும்   தொடர்பை வைத்துக்கொண்டு
அதன் கொடியின்            கீழ் வாழ நான் விரும்பினால், நான்கு
காரியங்களில் ஏதாவது ஒன்றின்படியே      நான் நடக்க வேண்டும்:
யுத்தத்திற்கு என்னுடைய பகிரங்கமான   எதிர்ப்பைத் தெரிவிக்கலாம்.
சத்தியாக்கிரக விதிகளின்படி சாம்ராஜ்யம் அதன்