பக்கம் எண் :

ஓர் ஆன்மிகக் குழப்பம்421

Untitled Document
ராணுவக்     கொள்கையை      மாற்றிக் கொள்ளும்வரை அதைப்
பகிஷ்கரித்து விடலாம்;    அல்லது மீறுவதற்கு ஏற்றவையான அதன்
சட்டங்களை மீறுவதன் மூலம் சட்ட  மறுப்பைச் செய்து சிறைப் பட
முற்படலாம்; இல்லாவிட்டால், சாம்ராஜ்யத்தின்    சார்பில் யுத்தத்தில்
ஈடுபட்டு அதன் மூலம் யுத்த         பலாத்காரத்தை எதிர்ப்பதற்கு
வேண்டிய பலத்தையும் தகுதியையும் பெறலாம். இத்தகைய ஆற்றலும்
தகுதியும் எனக்கு இல்லை. ஆகவே,        அவற்றை அடைவதற்கு
யுத்தத்தில் ஈடுபடுவதைத்          தவிர வேறு வழி இல்லை என்று
எண்ணினேன்.

     அகிம்சை நோக்குடன் கவனித்தால்,       போர்ச் சேவையில்
ஈடுபட்டிருக்கிறவர்களில் போர்க்களத்தில் போராடும் சிப்பாய்களுக்கும்
மற்றவர்களுக்கும்              வேற்றுமையை நான் காணவில்லை.
கொள்ளைக்காரர்களுக்கு            மூட்டை தூக்கவோ, அவர்கள்
கொள்ளையடித்துக்       கொண்டிருக்கும்போது காவல் இருக்கவோ,
அவர்கள் காயமடையும்போது          அவர்களுக்குப் பணி விடை
செய்யவோ ஒப்புக்கொள்ளுகிறவனும், கொள்ளைக்காரர்களைப் போல்
கொள்ளைக்குற்றம் செய்தவனேயாவான். அதே     போலப் போரில்
காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை செய்வதோடு   மாத்திரம் இருந்து
விடுகிறவர்களும்          போர்க் குற்றத்திலிருந்து விடுபட்டவர்கள்
ஆகமுடியாது.

     போலக்கிடமிருந்து தந்தி வருவதற்க      முன்னாலேயே இந்த
வகையில் இதையெல்லாம் குறித்து            என்னுள்ளேயே நான்
விவாதித்துக்கொண்டேன். அத்தந்தி வந்த   பிறகும் இதைக் குறித்துப்
பல நண்பர்களுடன் விவாதித்தேன்.     போரில் சேவை செய்ய முன்
வருவது என் கடமை என்ற        முடிவுக்கே வந்தேன். பிரிட்டிஷ்
உறவுக்குச்    சாதகமாக நான் அப்பொழுது கொண்டிருந்த கருத்தைக்
கொண்டு கவனிக்கும்போது, அந்த விதமான      விவாதப் போக்கில்
எந்தத் தவறும் இருப்பதாக இன்றும் நான்  கருதவில்லை. அப்பொழுது
நான் செய்ததற்காக வருத்தப்படவும் இல்லை.

     என் நிலைமை சரியானதே என்பதை         என் நண்பர்கள்
எல்லோருமே ஒப்புக்கொள்ளும்படி செய்ய என்னால்   அப்பொழுதும்
முடியவில்லை என்பதே அறிவேன்.           இப்பிரச்சனை மிகவும்
நுட்பமானது. இதில் கருத்து வேற்றுமை         இருந்து தான் தீரும்.
ஆகையால், அகிம்சையில்            நம்பிக்கையுள்ளவர்களுக்கும்,
வாழ்க்கையின்  ஒவ்வொரு துறையிலும் அதை அனுசரிக்கத் தீவிரமாக
முயன்று வருகிறவர்களுக்கும் என்னால்    இயன்ற அளவு தெளிவாக
என்னுடைய வாதங்களை எடுத்துக் கூறினேன்.   சத்தியத்தின் பக்தர்,
சம்பிரதாயம் என்பதற்காக எதையும்     செய்து விட முடியாது. தாம்
திருத்தப்படுவதற்கு அவர் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும்.
தாம்             செய்தது தவறானது என்பதைக் கண்டுகொள்ளும்