பக்கம் எண் :

குட்டிச் சத்தியாக்கிரகம்423

Untitled Document
பேச்சினால் உங்களை   ஏமாற்றி விடுவார்கள். ஏமாற்றி விட்டார்கள்
என்பது கடைசியாக உங்களுக்குத் தெரியும்போது  சத்தியாக் கிரகம்
செய்யும்படி            எங்களிடம் கூறுவீர்கள். இவ்விதம் நீங்கள்
துன்பப்படுவதோடு உங்களோடு சேர்ந்து      நாங்கள் எல்லோரும்
துன்பப்பட நேரும்” என்று அவர் சிரித்துக்கொண்டே   சொன்னார்.

     “நீங்கள் என்னுடன் சேர்ந்துவிட்டபிறகு   துன்பத்தைத் தவிர
வேறுஎதை எதிர்பார்க்கிறீர்கள்?     சத்தியாக்கிரகி ஏமாற்றப்படவே
பிறந்திருக்கிறான்.        இப்பிரதம அதிகாரி நம்மை ஏமாற்றட்டும்.
‘ஏய்ப்பவனே முடிவில் ஏமாற்றப்படுகிறான்’      என்று உங்களுக்கு
எத்தனையோ முறை நான் சொல்லவில்லையா?”         என்றேன்.

     சோராப்ஜி உடனே உரக்கச் சிரித்தார்.   “அப்படியானால் சரி,
தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வாருங்கள். என்றாவது ஒரு நாள் நீங்கள்
சத்தியாக்கிரகத்திலேயே          மரணமடைவீர்கள். அப்பொழுது
எங்களைப்போன்ற அப்பாவிகளையும்      உங்களுக்குப் பின்னால்
இழுத்துக்கொண்டு போவீர்கள்” என்றார்.

     இந்தச் சொற்கள்,     ஒத்துழையாமையைக் குறித்துக் குமாரி
எமிலி ஹாப்ஹவுஸ் எனக்கு எழுதியதை       என் நினைவிற்குக்
கொண்டு வருகின்றன. “சத்தியத்திற்காக      என்றாவது ஒரு நாள்
நீங்கள் தூக்குமேடைக்குப் போக நேர்ந்தால்   நான் ஆச்சரியப்பட
மாட்டேன். கடவுள் உங்களுக்குச்      சரியான வழியைக் காட்டிப்
பாதுகாப்பாராக” என்று அவர் எழுதினார்.

     தலைமை அதிகாரி      நியமிக்கப்பட்டவுடனேயே எனக்கும்
சோராப்ஜிக்கும் இடையே மேற்கண்ட        பேச்சு நடந்தது. சில
தினங்களுக்கெல்லாம் அவருடன்        எங்களுக்கிருந்த சம்பந்தம்
துண்டித்துப் போய்விடும் கட்டம் ஏற்பட்டது.      பதினான்கு நாள்
உண்ணாவிரதத்தில் இழந்த பலத்தை நான்     இன்னும் பெற்றுவிட
வில்லை. எனினும் கவாத்தில் நான்    பங்கெடுத்துக் கொண்டதோடு
நான் குடியிருந்த இடத்திலிருந்து       அதற்கென குறிப்பிட்டிருந்த
இடத்திற்கு இரண்டு மைல் தூரம்     நடந்தே போவேன். இதனால்
நுரையீரலில் புண் ஏற்பட்டு நான்      நோய்வாய்ப்பட்டேன். இந்த
நிலைமையில் வாரக் கடைசியில்         நடக்கும் முகாம்களுக்கும்
போகவேண்டியிருந்தது. மற்றவர்கள்   அங்கேயே தங்கிவிடுவார்கள்;
நான் மட்டும் வீடு திரும்புவேன். இங்கேதான்   சத்தியாக்கிரகத்திற்கு
ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது.

     தலைமை அதிகாரி தம்முடைய      அதிகாரத்தைக் கண்டபடி
எல்லாம் பிரயோகிக்க ஆரம்பித்தார். ராணுவ சம்பந்தமானது, ராணுவ
சம்பந்தமில்லாதது ஆகிய எல்லா          விஷயங்களிலும் அவரே
எங்களுக்குத் தலைவர் என்று நாங்கள் அறிந்து கொள்ளும்படி அவர்
செய்ததோடு, தமது அதிகாரம்       எப்படி இருக்கும் என்பதையும்
எங்களுக்குக் காட்டத் தொடங்கிவிட்டார்.