பக்கம் எண் :

424சத்திய சோதனை

Untitled Document
உடனே சோராப்ஜி என்னிடம் வந்தார்.         அந்த அதிகாரியின்
எதேச்சாதிகாரத்திற்கு உடன் பட்டுவிட       அவர் கொஞ்சங்கூடத்
தயாராயில்லை. அவர் சொன்னதாவது:          “எங்களுக்கு வரும்
உத்தரவுகள் எல்லாம்       உங்கள் மூலமே வரவேண்டும். நாங்கள்
இன்னும் பயிற்சி         முகாமிலேயே இருக்கிறோம். இப்பொழுதே
எங்களுக்கு எல்லாவித          அபத்தமான உத்தரவுகள் எல்லாம்
இடப்படுகின்றன. நமக்கும்,             நமக்கு இடையே சொல்லிக்
கொடுப்பதற்கென்று நியமிக்கப்பட்டிருக்கும் அந்த இளைஞர்களுக்கும்,
எரிச்சலை மூட்டும் பாரபட்சமான            வேற்றுமைகளெல்லாம்
காட்டப்படுகின்றன. இதைக் குறித்துத்     தலைமை அதிகாரி உடன்
பேசி ஒரு முடிவுக்கு வந்தாக  வேண்டும். இல்லையானால் எங்களால்
மேற்கொண்டு             எதுவும் செய்ய முடியாது. நம் படையில்
சேர்ந்திருக்கும் இந்திய   மாணவர்களும் மற்றவர்களும், அபத்தமான
உத்தரவுகளுக்கெல்லாம் கீழ்படியப் போவதில்லை.   சுயமரியாதையை
முன்னிட்டு மேற்கொண்டு இருக்கும் ஒரு கடமையில் சுயமரியாதையை
இழப்பது என்பதைச் சகித்துக் கொண்டிருக்கவே முடியாது.

     தலைமை அதிகாரியிடம் போனேன்.     எனக்கு வந்திருக்கும்
புகார்களைக் குறித்து அவரிடம் கூறினேன்.  இப்புகார்களை எழுத்து
மூலம் தமக்குத் தெரிவிக்கும்படி       அவர் சொன்னார். அதோடு,
“இப்பொழுது நியமிக்கப்பட்டிருக்கும்   படைப் பகுதித் தலைவர்கள்
மூலம் புகார்களைத் தெரிவிக்க வேண்டும்.     அவர்கள் அவற்றை
எனக்கு அறிவிப்பார்கள். இதுதான் புகார்களை    அனுப்புவதற்கான
சரியான வழி என்பதைப் புகார் கூறுவோர்    அறியச் செய்யுங்கள்”
என்றும் அவர் எனக்குக் கூறினார்.

     இதற்கு நான், “எனக்கு அதிகாரம் எதுவும்  இருப்பதாக நான்
உரிமை கொண்டாடவில்லை.       ராணுவ ரீதியில் மற்றவர்களைப்
போலவே நானும். ஆயினும்,    இத்தொண்டர் படையின் தலைவன்
என்ற முறையில் அவர்கள்          பிரதிநிதியாக நடந்துகொள்ள
உத்தியோகச் சார்பற்ற முறையில் நான்      அனுமதிக்கப்படுவேன்
என்று    நம்பி வந்தேன்” என்று சொன்னேன். என் கவனத்திற்குக்
கொண்டு வரப்பட்ட குறைகளையும் கோரிக்கைகளையும்   எடுத்துக்
கூறினேன். படையைச் சேர்ந்தவர்களின்     உணர்ச்சியைச் சிறிதும்
மதிக்காமலேயே படைப்           பகுதித் தலைவர்கள் நியமிக்கப்
பட்டிருக்கிறார்கள். அவர்களை           எடுத்துவிட்டுத் தலைமை
அதிகாரியின்     அங்கீகாரத்திற்கு உட்பட்டுப் படையினரே படைப்
பிரிவுத் தலைவர்களைத்       தேர்ந்தெடுத்துக் கொள்ளச் சொல்ல
வேண்டும் என்பவையே அந்தக் குறைகளும்      கோரிக்கைகளும்.

     இது தலைமை அதிகாரிக்குப்    பிடிக்கவில்லை. படையினரே
படைப் பகுதித் தலைவர்களைத்       தேர்ந்தெடுத்துக்கொள்ளுவது