பக்கம் எண் :

குட்டிச் சத்தியாக்கிரகம்425

Untitled Document
என்பது எல்லாவித ராணுவக் கட்டுத் திட்டங்களுக்கும் விரோதமானது
என்றார். நியமிக்கப்பட்டுவிட்டவர்களை நீக்கி விட வேண்டும்  என்று
கேட்பது   எல்லாக் கட்டுத் திட்டங்களையும் கவிழ்ப்பதாகும் என்றும்
சொன்னார்.

     எனவே, நாங்கள் ஒரு      கூட்டம் போட்டுப் படையிலிருந்து
விலகிக்கொண்டு விடுவது என்று         தீர்மானித்தோம். சத்தியாக்
கிரகத்தினால் ஏற்படக் கூடிய    மோசமான விளைவுகளைக் குறித்து
எல்லோருக்கும் எடுத்துக் கூறினேன். ஆயினும்        மிகப் பெரும்
பகுதியினர் தீர்மானத்தை            ஆதரித்தார்கள். இதுவரையில்
நியமிக்கப்பட்டிருக்கும்       கார்ப்பொரல்களை நீக்காவிடில், தங்கள்
சொந்தக் கார்ப்பொரல்களைத்            தேர்ந்தெடுத்துக்கொள்ளப்
படையினருக்குச்          சந்தர்ப்பம் அளிக்காது போனால், இதைச்
சேர்ந்தவர்கள் மேற்கொண்டும் கவாத்துக்களுக்கும்,    வாரக் கடைசி
முகாம்களுக்கும் போகாமல் இருக்கவே நேரும்     என்று தீர்மானம்
கூறியது.

     பிறகு, நான் தலைமை அதிகாரிக்கு   ஒரு கடிதம் எழுதினேன்.
என் யோசனையை நிராகரித்து அவர் எழுதியது எவ்வளவு  பெரிய
ஏமாற்றத்தை உண்டாக்கிவிட்டது       என்பதை அதில் கூறினேன்.
அதிகாரம் செலுத்த வேண்டும் என்னும் ஆசை     எதுவும் எனக்கு
இல்லை என்றும், சேவை செய்ய வேண்டும் என்றே    நான் மிகுந்த
ஆர்வத்துடன்     இருப்பதாகவும் அவருக்கு உறுதி கூறினேன். என்
யோசனையைப் போல் முன்னால் நடந்தது    ஒன்றையும் அவருக்கு
எடுத்துக் காட்டினேன். போயர் யுத்தத்தின் போது  தென்னாப்பிரிக்க
இந்திய வைத்தியப் படையில் உத்தியோக ஸ்தானம்   எதையும் நான்
வகிக்காதிருந்தாலும், கர்னல் கால்வேக்கும் படைக்கும் எந்த விதமான
தகாராறுமே இருந்ததில்லை என்றும்,       படையினரின் கருத்தைத்
தெரிந்து கொள்ளுவதற்காக என்னைக்     கலந்து ஆலோசிக்காமல்
அக் கர்னல் எதுவுமே செய்ததில்லை       என்றும் குறிப்பிட்டேன்.
முந்திய நாள் மாலையில் நாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தின் பிரதி
ஒன்றையும் அக்கடிதத்தோடு அனுப்பினேன்.

     அந்த அதிகாரியின் விஷயத்தில்       இக்கடிதம் எந்த நல்ல
பலனையும் உண்டாக்கவில்லை.      கூட்டம் போட்டதும், தீர்மானம்
செய்ததும் கட்டுத் திட்டங்களை     மீறிய பெருங் குற்றங்கள் என்று
அவர் கருதினார்.

     அதன்பேரில் இந்திய மந்திரிக்கு     ஒரு கடிதம் எழுதினேன்.
எல்லா விவரங்களையும் அவருக்குத் தெரிவித்ததோடு  தீர்மானத்தின்
பிரதி ஒன்றையும்   அனுப்பினேன். அவர் எனக்கு எழுதிய பதிலில்,
தென்னாப்பிரிக்காவில் நிலைமை வேறு என்று     விளக்கியிருந்தார்.
விதிகளின்படி, படைப்பிரிவுத் தலைவர்கள் தலைமை