பக்கம் எண் :

கட்சிக்காரரைக் காப்பாற்றிய விதம்443

Untitled Document
     “நீங்கள் தவறிழைத்தது      அரசாங்கத்திற்கேயன்றி எனக்கு
அன்று.   அப்படியிருக்க என்னிடம் குற்றத்தை ஒப்புக் கொள்ளுவது
மாத்திரம் எப்படிப்   போதும்?” என்று சாந்தமாக அவருக்குப் பதில்
சொன்னேன்.

     “உங்கள்          புத்திமதியின்படியே நடக்கிறேன். ஆனால்,
என்னுடைய பழைய வக்கீலான ஸ்ரீ ...... என்பவரிடம் நீங்கள்  கலந்து
ஆலோசிப்பீர்களா? அவரும் நண்பரே”   என்றார் பார்ஸி ருஸ்தம்ஜி.

     விசாரித்ததில், திருட்டுத்தனமாகச் சரக்குகளை      இறக்குமதி
செய்வது நீண்ட காலமாகவே        நடந்து வந்திருக்கிறது என்பது
தெரிந்தது. ஆனால், இப்பொழுது    கண்டுபிடிக்கப்பட்டது ஒரு சிறு
தொகையைப் பொறுத்ததேயாகும். அவருடைய வக்கீலிடம் போனோம்.
அவர் தஸ்தாவேஜு களைப் படித்துப் பார்த்தார். அவர்  கூறியதாவது:
“இந்த வழக்கு ஜூரிகளின் முன்னால் விசாரிக்கப்படும்.    நேட்டால்
ஜூரிகள் இந்தியரைத் தண்டிக்காமல்   விட மாட்டார்கள். ஆயினும்,
நான் நம்பிக்கையை இழந்து விடவில்லை” என்றார்.

     இந்த வக்கீலை எனக்கு      அவ்வளவு நன்றாகத் தெரியாது.
பார்ஸி ருஸ்தம்ஜி குறுக்கிட்டு,      “உங்களுக்கு என் நன்றி. இந்த
வழக்கில் ஸ்ரீ காந்தி கூறும் யோசனையின்படி நான் நடந்து கொள்ள
விரும்புகிறேன்.                அவர் என்னை நன்றாக அறிவார்.
அவசியமாகும்போது நீங்கள் அவருக்கு    ஆலோசனை கூறுங்கள்”
என்றார். வக்கீல் விஷயத்தை   இவ்விதமாக முடிவுசெய்து கொண்டு
நாங்கள் பார்ஸி ருஸ்தம்ஜியின் கடைக்குச் சென்றோம்.

     இது சம்பந்தமாக என் கருத்தை விளக்கி     அவரிடம் பின்
வருமாறு கூறினேன்: “இந்த வழக்குக் கோர்ட்டுக்கே போகக் கூடாது
என்று நினைக்கிறேன். உங்கள் மீது       வழக்குத் தொடருவதோ,
தொடராமல் விட்டுவிடுவதோ சுங்க அதிகாரியைப் பொறுத்திருக்கிறது.
அவரோ, அட்டர்னி ஜெனரலின்         ஆலோசனைப்படி நடக்க
வேண்டியவராக இருக்கிறார். இந்த இருவரையும்    சந்தித்துப் பேச
நான் தயாராயிருக்கிறேன்.      அவர்கள் விதிக்கும் அபராதத்தைச்
செலுத்திவிட நீங்கள் தயாராயிருக்க    வேண்டும். அநேகமாக இந்த
ஏற்பாட்டிற்கு அவர்கள் சம்மதித்துவிடக்கூடும்.    இதற்கு அவர்கள்
சம்மதிக்கவில்லை என்றால்     சிறை செல்வதற்கு நீங்கள் தயாராக
இருக்க வேண்டியதுதான். அவமானம்       குற்றம் செய்வதில்தான்
இருக்கிறதேயன்றி, அக்குற்றத்திற்காகச்   சிறை செல்லுவதில் அல்ல
என்பதே என் அபிப்பிராயம். அவமானத்திற்கான காரியமோ முன்பே
செய்யப்பட்டு விட்டது.            அதற்குப் பிராயசித்தம் என்றே
சிறைவாசத்தை நீங்கள் கருத வேண்டும்.       இதில் உண்மையான
பிராயச்சித்தம், இனி            திருட்டுத் தனமாகச் சரக்குகளைக்
கடத்துவதில்லை என்று தீர்மானித்துக்