பக்கம் எண் :

452சத்திய சோதனை

Untitled Document
உங்களை இங்கே தாமதிக்கச்      செய்யும் உத்தேசம் எங்களுக்கு
இல்லை. ஆனால், திரும்பும்போது இங்கே     தங்கிச் செல்லுவதாக
வாக்குறுதியளிக்க வேண்டும்.      நமது வாலிபர்கள் செய்து வரும்
வேலையையும் அவர்களுக்குள்ள உணர்ச்சியையும் பார்த்து  நீங்கள்
மகிழ்ச்சியடைவீர்கள். எங்களுக்குக் கட்டளையிட்ட    மாத்திரத்தில்
நாங்கள் முன்வருவோம் என்பதை நீங்கள் நம்பலாம்.”

     மோதிலால் என்னைக் கவர்ந்துவிட்டார்.      அவரைப் பற்றி
அவருடைய தோழர் ஒருவர் பின்வருமாறு     பாராட்டிக் கூறினார்:
“இந்த நண்பர் சாதாரணத்   தையற்காரரே. தமது தொழிலில் மிகவும்
திறமைசாலி. ஆகையால், தமக்குத் தேவையான ரூபாய் பதினைந்தை,
தினத்திற்கு ஒரு மணி நேரம் வேலை செய்து, ஒரு       மாதத்தில்
சம்பாதித்துக்கொண்டு             விடுகிறார்.    மீதமுள்ள தமது
நேரத்தையெல்லாம்           பொதுச் சேவைக்குச் செலவிடுகிறார்.
எங்களுக்கெல்லாம் அவர்தான் தலைவர். படித்தவர்களாகிய நாங்கள்
அவரைக் கண்டு வெட்கமடைகிறோம்.”

     பின்னால் மோதிலாலுடன் நான்  நெருங்கிப் பழக நேர்ந்ததும்,
இந்தப் பாராட்டுரையில்      மிகைப்படுத்திக் கூறப்பட்டது எதுவும்
இல்லை என்பதைக் கண்டேன். ஆசிரமத்தை ஆரம்பித்த காலத்தில்,
ஒவ்வொரு மாதமும் சில நாட்கள்        அவர் அங்கே தங்குவார்.
ஆசிரமக் குழந்தைகளுக்கு அவர்       தையல் வேலை சொல்லிக்
கொடுத்ததோடு ஆசிரமத்திற்கு       வேண்டிய துணிமணிகளையும்
தைத்துக் கொடுப்பார். ஒவ்வொரு நாளும்       வீரம்காமைப் பற்றி
என்னிடம் பேசுவார். பிரயாணிகளின்  துயரங்களையும் சொல்லுவார்.
அக் கஷ்டங்கள் அவருக்கு முற்றும்      சகிக்க முடியாதவையாகி
விட்டன. திடீரென்று நோயுற்று, அவர்        நல்ல இளம் வயதில்
காலமானார்.  வத்வானின் பொதுவாழ்வுக்கு அவருடைய பிரிவினால்
அதிக நஷ்டம் ஏற்பட்டது.

     ராஜ்கோட் போய்ச் சேர்ந்ததும்    மறுநாள் காலை வைத்திய
அதிகாரியிடம் போனேன். அங்கே      எல்லோருக்கும் என்னைத்
தெரிந்திருந்தது. நான் தம்மிடம்   வர நேர்ந்ததைக் குறித்து டாக்டர்
வெட்கப்பட்டதோடு         இன்ஸ்பெக்டர்மீதும் கோபமடைந்தார்.
இன்ஸ்பெக்டர் தமது கடமையையே செய்தாராகையால்  இக்கோபம்
அனாவசியமானது. அவருக்கு      என்னைத் தெரியாது; என்னைத்
தெரிந்திருந்தாலும் அவர்     வேறு விதமாக நடந்து கொண்டிருக்க
முடியாது. இனித் தம்மிடம் வர  வேண்டியதில்லை என்று வைத்திய
அதிகாரி கூறி விட்டார். அதற்குப்         பதிலாக என்னிடம் ஓர்
இன்ஸ்பெக்டரை அனுப்பினார்.

     அத்தகைய சந்தர்ப்பங்களில்    சுகாதாரக் காரணங்களுக்காக
மூன்றாம் வகுப்புப்               பிரயாணிகளைப் பரிசோதிப்பது
அவசியமேயாகும். பெரிய மனிதர்கள்,         மூன்றாம் வகுப்பில்
பிரயாணம் செய்ய            முற்படுவார்களாயின், வாழ்க்கையில்
அவர்களுடைய