பக்கம் எண் :

அது ஒரு பயமுறுத்தலா 453

Untitled Document
நிலை எதுவாக இருப்பினும்,              ஏழைகள் என்ன என்ன
கட்டுத்திட்டங்களுக்கு       உட்பட       வேண்டியிருக்கின்றதோ
அவைகளுக்கெல்லாம் அவர்களும் விரும்பிக்  கட்டுப்பட வேண்டும்.
அதிகாரிகளும் பாரபட்சம் காட்டாமல்    நடந்து கொள்ள வேண்டும்.
அதிகாரிகளோ, மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளும்   தம்மைப் போல
மனிதர்களே என்று கருதாமல் செம்மறி ஆடுகளாகப் பாவிக்கிறார்கள்
என்பதே என் அனுபவம்.       அப்பிரயாணிகளிடம் அவமதிக்கும்
தோரணையிலேயே பேசுகிறார்கள்.        அவர்கள் ஏதாவது பதில்
சொல்லிவிட்டாலோ,           விவாதித்து விட்டாலோ, அதிகாரிகள்
சகிப்பதில்லை. மூன்றாம் வகுப்புப் பிரயாணிகள்,      அதிகாரிகளின்
வேலைக்காரர்களைப்போல அவர்களுக்குக்      கீழ்ப்படிந்து நடக்க
வேண்டும். மூன்றாம்         வகுப்புப் பிரயாணிகளை அதிகாரிகள்
அடிக்கலாம்;பயமுறுத்திப் பணம் பறிக்கலாம்; சாத்தியமான எல்லாவித
அசௌகரியங்களையும் பிரயாணிகள் அனுபவிக்கும்படி செய்துவிட்ட
பிறகே அவர்களுக்கு        டிக்கெட்டும் கொடுக்கலாம். இவ்விதம்
டிக்கெட்டு வாங்குவதற்குள்      ரெயிலும் போய்விடும். என்றாலும்
இதற்கெல்லாம் கேள்வி முறையே இல்லை. இவற்றையெல்லாம்  நான்
என் கண்ணாலேயே           பார்த்திருக்கிறேன். படித்தவர்களும்
பணக்காரர்களுமான சிலர், ஏழைகளின் அந்தஸ்தை விரும்பி ஏற்றுக்
கொண்டு மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்தாலன்றி, ஏழைகளுக்கு
மறுக்கப்படும் வசதிகளை                  அனுபவிக்க இவர்கள்
மறுத்துவிட்டாலல்லாமல்,         தவிர்க்கக்கூடிய கஷ்டங்களையும்,
அவமதிப்புக்களையும்,    அநீதிகளையும் அனுபவிக்க வேண்டியதே
என்று சும்மா இருந்து       விடாமல் அவைகளை ஒழிப்பதற்காகப்
போராடினாலன்றி, இந்நிலைமையில் சீர்திருத்தமே    சாத்தியமில்லை.

     கத்தியவாரில் நான் சென்ற இடங்களிலெல்லாம்      வீரம்காம்
சுங்கத் தொல்லைகளைப் பற்றிய புகார்களையே கூறினர். ஆகையால்,
லார்டு வில்லிங்டன்           அளித்திருந்த வாக்குறுதியை உடனே
பயன்படுத்திக்கொள்ளுவது என்று          முடிவு செய்தேன். இது
சம்பந்தமாகக் கிடைத்த பிரசுரங்கள்       யாவற்றையும் சேகரித்துப்
படித்தேன். புகார்களெல்லாம்         உண்மையானவை என்று நான்
திருப்தியடைந்த பிறகு பம்பாய் அரசாங்கத்திற்குக்     கடிதம் எழுத
ஆரம்பித்தேன். லார்டு  வில்லிங்டனின் அந்தரங்கக் காரியதரிசியைக்
கண்டு பேசினேன். கவர்னரையும் சந்தித்தேன்.      கவர்னர் தமது
அனுதாபத்தைத் தெரிவித்தார். ஆனால்,           தவறுக்கு டில்லி
அரசாங்கத்தின்மீது பழி போட்டார். “இது எங்கள் கையில் இருந்தால்
சுங்கத்தை எடுத்திருப்போம். இந்திய    அரசாங்கத்தினிடமே நீங்கள்
போக வேண்டும்” என்றார், கவர்னர்.

     இந்திய அரசாங்கத்திற்கு எழுதினேன். ஆனால், என் கடிதம்