பக்கம் எண் :

மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளின் துயரங்கள்459

Untitled Document
சட்டமாக இருந்தது. பலமுள்ளவர்களும்,       மற்றவர்களைப்பற்றிய
கவலையே    இல்லாதவர்களுமான      பிரயாணிகள், ஒருவர் பின்
மற்றொருவராக வந்து என்னை இடித்து வெளியே தள்ளிக் கொண்டே இருந்தனர். ஆகையால், முதல் கும்பலில்       கடைசியாக டிக்கெட்
வாங்கியவன் நான்தான்.

     ரெயில் வந்து நின்றது.      அதில் ஏறுவது மற்றொரு பெரும்
சோதனையாகிவிட்டது. ரெயிலுக்குள் முன்பே இருந்த பிரயாணிகளும்,
ஏற முயன்றவர்களும் பரஸ்பரம் திட்டுவதும்,பிடித்துத் தள்ளுவதுமாக
இருந்தார்கள். பிளாட்பாரத்தில் மேலும்   கீழும் ஓடினோம். ஆனால்,
“இங்கே இடம் இல்லை”என்ற ஒரே பதில்தான் எங்களுக்கு எங்குமே
கிடைத்தது. கார்டிடம் போனேன். “முடிந்தால் ஏறிக்கொள்ள முயற்சி
செய்யுங்கள் முடியாது போனால் அடுத்த     ரெயிலில் வாருங்கள்”
என்று அவர் கூறினார்.

     “எனக்கு அவசரமான வேலை இருக்கிறதே”     என்று நான்
மரியாதையுடன் பதில் சொன்னேன். ஆனால்,   நான் சொன்னதைக்
கேட்டுக்கொண்டிருக்க        அவருக்கு அவகாசமில்லை. இன்னது
செய்வது என்று தெரியாமல் திகைத்தேன்.      எங்கே சாத்தியமோ
அங்கே ஏறிக்கொள்ளுமாறு மகன்லாலிடம்   கூறிவிட்டு நானும் என்
மனைவியும் இன்டர் வகுப்பு வண்டியில் ஏறிக்கொண்டோம். நாங்கள்
அவ்வண்டியில்          ஏறுவதைக் கார்டு பார்த்தார். அஸன்ஸால்
ஸ்டேஷனை அடைந்ததும், எங்களிடம்   அதிகப்படிக் கட்டணத்தை
வசூலிப்பதற்காக அவர் எங்களிடம் வந்தார். அவரிடம் பின்வருமாறு
கூறினேன்: “எங்களுக்கு இடம்     தேடித் தர வேண்டியது உங்கள்
கடமை.        எங்களுக்கு இடம் கிடைக்காததால் நாங்கள் இங்கே
உட்கார்ந்திருக்கிறோம். மூன்றாம் வகுப்பு வண்டியில்    எங்களுக்கு
இடம் கொடுப்பதானால்             நாங்கள் அங்கே போய்விடச்
சந்தோஷத்துடன் தயாராயிருக்கிறோம்.”

     இதற்குக் கார்டு, “உம்முடன் விவாதிக்க  நான் தயாராயில்லை.
உமக்கு நான் இடம் தேடிக்கொடுக்க முடியாது.     அதிகப்படியான
கட்டணத்தை நீர் செலுத்த வேண்டும்.      இல்லாவிட்டால் இறங்கி
விடும்” என்றார்.

     எப்படியும் புனா போய்ச்         சேர்ந்துவிட விரும்பினேன்.
ஆகையால், கார்டுடன்      சண்டை போட்டுக்கொண்டிருக்க நான்
தயாராக இல்லை.        அவர் கேட்ட அதிகப்படிக் கட்டணத்தை,
அதாவது புனாவரையில்    கொடுத்து விட்டேன். என்றாலும், அந்த
அநியாயத்தைக் குறித்து ஆத்திரம் அடைந்தேன்.

     காலையில் மொகல்ஸாரைக்குப் போய்ச்சேர்ந்தோம்.  மூன்றாம்
வகுப்பில் மகன்லால் இடம் பிடித்துவிட்டதால்     அந்த வண்டியில்
போய் ஏறிக்கொண்டேன்.          டிக்கெட் பரிசோதகருக்கு இந்த
விஷயங்களையெல்லாம் கூறினேன்.     மொகல்ஸாரையில் மூன்றாம்