பக்கம் எண் :

460சத்திய சோதனை

Untitled Document
வகுப்பு வண்டியில் நான்         ஏறிக்கொண்டு விட்டதாக எனக்கு
அத்தாட்சி கொடுக்குமாறு அவரிடம் கேட்டேன்.   ஆனால், அதைக்
கொடுக்க அவர்     மறுத்துவிட்டார். இதில் பரிகாரம் பெறுவதற்காக
ரெயில்வே அதிகாரிகளுக்கு எழுதினேன்.     அதற்குப் பின்வருமாறு
எனக்குப் பதில் வந்தது: “அத்தாட்சியை அனுப்பி     இருந்தாலன்றி
அதிகப் படியாக வசூலித்திருந்த கட்டணத்தைத் திருப்பிக் கொடுப்பது எங்களுக்கு வழக்கமில்லை. ஆனால்,     உங்கள் விஷயத்தில் ஒரு
விதிவிலக்குச்          செய்கிறோம். என்றாலும், பர்த்வானிலிருந்து
மொகல்ஸாரை வரையில் வாங்கிய      அதிகப்படிக் கட்டணத்தைத்
திருப்பிக் கொடுப்பது சாத்தியமில்லை.”

     மூன்றாம் வகுப்புப் பிரயாணத்தைக் குறித்து எனக்கு  ஏற்பட்ட
இந்த முதல் அனுபவத்தை எல்லாம் நான் எழுதுவதாக   இருந்தால்
அதுவே ஒரு பெரிய புத்தகமாகி விடும்.           ஆனால், அந்த
அனுபவங்களைக் குறித்து இந்த    அத்தியாயங்களில் ஆங்காங்கே
குறிப்பாகச் சிலவற்றையே      நான் சொல்ல முடியும். உடல் நிலை
சரியாக   இல்லாததன் காரணமாக மூன்றாம் வகுப்புப் பிரயாணத்தை
நான் கைவிடநேருவது, எனக்கு    அதிகத்துயரம் அளித்திருக்கிறது.
இது எப்பொழுதும் எனக்கு        அதிகத் துயரம் அளிப்பதாகவே
இருக்கும்.

     மூன்றாம் வகுப்புப்     பிரயாணிகளின்    துயரங்களெல்லாம்
ரெயில்வே அதிகாரிகளின் திமிரினால்தான் ஏற்படுகின்றன என்பதில்
சந்தேகமே இல்லை. ஆயினும்,      பிரயாணிகளின் முரட்டுத்தனம்,
ஆபாசமான பழக்கங்கள், சுயநலம், அறியாமை  ஆகியவைகளையும்
குற்றம் கூறாமல் இருப்பதற்கில்லை.           இதிலுள்ள பரிதாபம்
என்னவென்றால்,            தாங்கள் தவறாகவும், ஆபாசமாகவும்
சுயநலத்தோடும்        நடந்துகொள்ளுவதை அவர்கள் உணராமல்
இருப்பதே. தாங்கள் செய்வதெல்லாம் இயல்பானதே என்று அவர்கள்
கருதுகிறார்கள். இவைகளுக்கெல்லாம்        முக்கியமான காரணம்,
படித்தவர்களாகிய நாம் அவர்களிடம் கொள்ளும்    அசிரத்தையே
ஆகும்.

     மிகவும் களைத்துப் போய்விட்ட          நிலையில் நாங்கள்
கல்யாண்போய்ச் சேர்ந்தோம்.       மகன்லாலும் நானும் ஸ்டேஷன்
தண்ணீர்க் குழாயிலிருந்து கொஞ்சம் தண்ணீர் பிடித்துக் குளித்தோம்.
என் மனைவி குளிப்பதற்கு வேண்டிய    ஏற்பாட்டைச் செய்வதற்கு
நான் போய்க்கொண்டிருந்தபோது      இந்திய ஊழியர் சங்கத்தைச்
சேர்ந்த ஸ்ரீ கௌல் எங்களைத்         தெரிந்துகொண்டார். அவர்
எங்களிடம் வந்தார். அவரும்            புனாவுக்குத்தான் போய்க்
கொண்டிருந்தார். இரண்டாம் வகுப்புப்      பிரயாணிகள் குளிக்கும்
இடத்திற்கு என் மனைவியை         அழைத்துப் போவதாக அவர்
சொன்னார். மரியாதையோடு அவர்        அளிக்க முன்வந்த இந்த