பக்கம் எண் :

464சத்திய சோதனை

Untitled Document
பிரயாணம் செய்தேன்.      ஸ்ரீ போஸின் வீட்டில் அதிகப் படியான
உபசாரம் எங்களுக்குச் சங்கடமாக இருந்தது.     ஆனால் கப்பலில்
எங்களுக்கு ஏற்பட்ட   கதியோ? மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளின்
சாதாரண வசதிகளைக்கூட        கவனிப்பார் இல்லாமல் இருந்தது.
குளிக்கும் அறை என்று சொல்லப்பட்ட இடம்,      சகிக்க முடியாத
வகையில் ஆபாசமாக இருந்தது.      கக்கூசு ஒரே நாற்றமெடுத்தது.
கக்கூசுக்குப் போவதாக இருந்தால்     மலத்தையும் மூத்திரத்தையும்
மிதித்துக்கொண்டுதான் போக          வேண்டும். இல்லையானால்,
தாண்டிக்கொண்டு செல்ல வேண்டும்.

     இந்த ஆபாசங்களைச் சகித்துக்கொண்டு    என்னால் இருக்க
முடியவில்லை. கப்பலின் பிரதம       அதிகாரியிடம் முறையிட்டும்
பயனில்லை. இந்த விதமான ஆபாசங்களும்          நாற்றங்களும்
போதாதென்று பிரயாணிகளும்           தங்களுடைய புத்திகெட்ட
பழக்கங்களினால் மேலும்      ஆபாசப்படுத்தினார்கள். உட்கார்ந்த
இடத்தில் இருந்தபடி துப்பி     வைத்தனர். சாப்பிட்டதில் மிஞ்சியது,
புகையிலை, வெற்றிலை               ஆகியவைகளைக் கழித்தது
ஆகியவற்றையெல்லாம் சுற்றிலும் போட்டார்கள்.  அவர்கள் போட்ட
கூச்சல்களுக்கோ முடிவே இல்லை. முடிந்த அளவு அதிக இடத்தைப்
பிடித்துக்கொண்டு விட ஒவ்வொருவரும் முயன்றனர். அவர்களைவிட
அவரவர்களுடைய சாமான்களே அதிக       இடத்தை அடைத்துக்
கொண்டுவிட்டன. இவ்விதம் இரண்டு நாட்கள் எங்களுக்கு   மிகவும்
கடுமையான சோதனையாகி விட்டது.

     ரங்கூனுக்குப் போனதும் கப்பல்   கம்பெனியின் ஏஜெண்டுக்கு
எழுதினேன். இருந்த நிலைமை          முழுவதையும் அவருக்குத்
தெரிவித்தேன். இந்தக் கடிதத்தினாலும்,        டாக்டர் மேத்தாவின்
முயற்சியினாலும், திரும்புகையில் மூன்றாம்      வகுப்புப் பிரயாணம்
அவ்வளவு மோசமாக இல்லை.

     எனது பழ ஆகார விரதம் ரங்கூனிலும்   டாக்டர் மேத்தாவின்
வீட்டினருக்கு அதிகப்படியான சங்கடத்தை   விளைவித்தது. டாக்டர்
மேத்தாவின் வீடு என்       சொந்த வீடு மாதிரி. ஆகவே, ஆகார
வகைகள் மிக அதிகமாகப்         போய் விடாதவாறு ஓரளவுக்குக்
கட்டுப்படுத்த என்னால் முடிந்தது. என்றாலும்,  இத்தனை வகையான
உணவுதான்    சாப்பிடுவது என்பதற்கு நான் இன்னும் ஒரு வரம்பை
விதித்துக்கொள்ள வில்லை. ஆகவே,       பரிமாறப் பட்டவைகளை
ஓரளவோடு நிறுத்திக்கொள்ளுவதற்கு என் சுவை      உணர்ச்சியும்
கண்களும் மறுத்துவிட்டன. சாப்பாட்டுக்குக்        குறிப்பிட்டநேரம்
என்பதும் இல்லை. என்னைப்         பொறுத்த வரையில் கடைசிச்
சாப்பாட்டை    இருட்டுவதற்கு முன்னால் முடித்துக்கொண்டு விடவே
நான் விரும்பினேன். ஆனால்,