பக்கம் எண் :

கும்ப மேளா465

Untitled Document
அனேகமாக இரவு எட்டு,    ஒன்பது மணிக்கு முன்னால் சாப்பிட்டு
முடிவதில்லை.

     அது 1915-ஆம் ஆண்டு.   கும்ப உற்சவம் நடக்க வேண்டிய
ஆண்டு    அது. இந்தத் திருவிழா பன்னிரண்டு   ஆண்டுகளுக்கு
ஒரு முறை ஹரித்துவாரத்தில் நடக்கிறது. அத்திருவிழாவைப் பார்க்க
வேண்டும்என்ற ஆர்வம்     எனக்கு இல்லை. என்றாலும், மகாத்மா
முன்ஷிராம்ஜியை, அவருடைய குருகுலத்திற்குப்    போய்ப் பார்க்க
வேண்டும் என்ற ஆவலுடன் இருந்தேன்.     கும்பத் திருவிழாவில்
சேவை செய்வதற்கென்று கோகலேயின் சங்கத்தினர் ஒரு தொண்டர்
படையை அனுப்பியிருந்தார்கள்.  அத்தொண்டர் படைக்குப் பண்டித
ஹிருதயநாத குன்ஸ்ரு தலைவர்;       காலஞ்சென்ற டாக்டர் தேவ்,
வைத்திய அதிகாரி. தங்களுக்கு         உதவி செய்யப் போனிக்ஸ்
கோஷ்டியினரை அனுப்புமாறு என்னைக் கேட்டிருந்தார்கள். எனவே,
மகன்லால் காந்தி எனக்கு முன்னாலேயே     அங்கே போயிருந்தார்.
ரங்கூனிலிருந்து திரும்பியதும்               நானும் அவர்களுடன்
சேர்ந்துகொண்டேன்.

     கல்கத்தாவிலிருந்து ஹரித்துவாரத்திற்கு     ரெயில் பிரயாணம்
மிகவும் கஷ்டமாக இருந்தது.        சில சமயங்களில் வண்டிகளில்
விளக்குகளே இல்லை.  சகரன்பூரிலிருந்து நாங்கள், சாமான்களையும்
கால்நடைகளையும் ஏற்றும்   வண்டிகளில் அடைக்கப்பட்டிருந்தோம்.
இந்த வண்டிகளுக்கு மேல் கூரை இல்லை. மேலே தகிக்கும் வெயில்;
கீழேயோ கொதிக்கும் இரும்புத் தளம். இவற்றிற்கு   நடுவே நாங்கள்
வறுபட்டுப்        போனவர்கள் போல் ஆகிவிட்டோம். இத்தகைய
பிரயாணத்தினால் ஏற்பட்ட           நீர் வேட்கையில்கூட வைதிக
ஹிந்துக்கள், முஸ்லிம்களிடமிருந்து       தண்ணீர் வாங்கிக் குடிக்க
மறுத்தனர். ‘ஹிந்து’ தண்ணீர்       கிடைக்கும் வரையில் அவர்கள்
காத்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால்,     இதே ஹிந்துக்கள்
நோயுற்றுவிடும்போது டாக்டர்            தங்களுக்குக் கொடுக்கும்
சாராயத்தையும் மாட்டிறைச்சிச் சூப்பையும் குடிக்கத் தயங்குவதில்லை.
தங்களுக்கு மருந்துத்            தண்ணீர் கொடுப்பவர் கிறிஸ்தவக்
கம்பவுண்டரா, முஸ்லிம்          கம்பவுண்டரா என்பதைக் குறித்து
விசாரிப்பதும் இல்லை என்பது கவனிக்க வேண்டியதாகும்.

     தோட்டி வேலையே இந்தியாவில்      எங்களுடைய விசேஷ
வேலையாக இருக்க வேண்டும் என்பதைச்      சாந்திநிகேதனத்தில்
தங்கியதிலிருந்து நாங்கள்    அறிந்துகொண்டோம். ஹரித்துவாரத்தில்
தொண்டர்கள் தங்குவதற்கு       ஒரு தரும சாலையில் கூடாரங்கள்
அமைக்கப்பட்டிருந்தன. கக்கூசுகளாக     உபயோகிப்பதற்கு டாக்டர்
தேவ் அங்சே சில குழிகளைத்    தோண்டியிருந்தார். அவைகளைச்
சுத்தம் செய்வதற்கு,           கூலி பெறும் தோட்டிகளையே அவர்
எதிர்பார்க்கவேண்டியிருந்தது.     போனிக்ஸ் கோஷ்டியினர் வேலை