பக்கம் எண் :

கும்ப மேளா467

Untitled Document
கவனித்தேன். யாத்திரிகர்களிடம்     பக்தியைக் காட்டிலும் கவனக்
குறைவும், வெளிவேஷமும்,  ஒழுங்கீனமுமே அதிகமாக இருந்ததைப்
பார்த்தேன். சாதுக்கள்  கூட்டம் கூட்டமாக அங்கே வந்திருந்தார்கள்.
உலக வாழ்க்கையின் இன்பங்களையெல்லாம்  அனுபவிப்பதற்கென்று
பிறந்திருப்பவர்களாகவே அவர்கள் தோன்றினர்.

     இங்கே ஐந்து கால்களோடு கூடிய ஒரு பசுவையும் பார்த்தேன்!
நான் ஆச்சரியப்பட்டுப் போனேன்.             ஆனால், விஷயம்
தெரிந்தவர்கள் சீக்கிரத்தில் எனக்கு     ஏற்பட்டிருந்த பிரமையைப்
போக்கிவிட்டனர். அந்தப்     பரிதாபகரமான      ஐந்து கால் பசு,
கொடியவர்களின்  பேராசைக்குப்    பலியானதேயன்றி வேறு அல்ல.
உயிருடன்    இருந்த ஒரு கன்றின் காலைத் துண்டித்து, இப்பசுவின்
தோலில் பொருத்தியிருந்தார்கள். அதுதான் இந்த   ஐந்தாவது காலே
ஒழிய வேறு ஒன்றும் இல்லை என்பதை       அறிந்தேன்! இவ்வித
இரட்டைக் கொடுமையின்             பலனைக் கொண்டு, ஒன்றும்
அறியாதவர்களின் பணத்தைப் பறித்து வந்தார்கள். இந்த  ஐந்து கால்
பசுவைப்      பார்க்க ஆவல் கொள்ளாத ஹிந்துவே இல்லை. இந்த
அற்புதப் பசுவிற்குத் தாராளமாக       தருமம் செய்யாத ஹிந்துவும்
இல்லை.

     உற்சவ தினமும் வந்தது.      அது எனக்கு மிக முக்கியமான
தினமாகவும் ஆயிற்று. நான்          ஹரித்துவாரத்திற்கு யாத்திரை
நோக்கத்துடன் போகவில்லை. புண்ணியத்தை      நாடி   யாத்திரை
ஸ்தலங்களுக்குப்      போய்க்கொண்டிருக்க வேண்டும் என்று நான்
எண்ணியதே இல்லை. ஆனால், அங்கே கூடியிருந்ததாகக் கூறப்பட்ட
பதினேழு லட்சம் மக்களில் எல்லோருமே வெளி வேஷக்காரர்களோ,
வெறும் வேடிக்கை பார்க்க      வந்தவர்களோ அல்ல. அவர்களில்
எண்ணற்றவர்கள், புண்ணியத்தைத் தேடவும்,  ஆன்மத் தூய்மையை
அடையவுமே வந்தார்கள் என்பதில் எனக்கு   எவ்விதச் சந்தேகமும்
இல்லை. ஆனால், இப்படிப்பட்ட        நம்பிக்கை எந்த அளவுக்கு
ஆன்மாவை        மேன்மைப்படுத்துகிறது என்பதைச் சொல்லுவது
இயலாதது அல்ல என்றாலும், சொல்லுவது கஷ்டம்.

     ஆகையால், ஆழ்ந்த            சிந்தனையில் மூழ்கியவாறே
அன்றிரவைக் கழித்தேன்.          தங்களைச் சூழ்ந்திருக்க வெளி
வேஷத்திற்கு நடுவில் பக்தியுள்ள      ஆன்மாக்களும்   இருந்தன.
ஆண்டவனின் சந்நிதானத்தில்         அவர்கள் குற்றமற்றவர்களே.
ஹரித்துவாரத்திற்கு வந்ததே, அதனளவில்   பாவச் செயல் என்றால்,
ஹரித்துவார    யாத்திரையை நான் பகிரங்கமாகக் கண்டித்துக் கூறி
விட்டுக் கும்பதினத்தன்றே அங்கிருந்து   புறப்பட்டிருக்க வேண்டும்.
ஹரித்துவார யாத்திரையை   மேற்கொண்டதும், கும்ப உற்சவத்திற்கு
வந்ததும் பாவச் செயலன்று என்றால்,            அங்கே நடக்கும்
அக்கிரமங்களுக்குப் பிராயச்சித்தமாக      நான் ஏதேனும் எனக்கு
நானே மறுத்துக்கொண்டு            என்னைத் தூய்மைப்படுத்திக்
கொள்ளவேண்டும். இது எனக்கு மிகவும்