பக்கம் எண் :

466சத்திய சோதனை

Untitled Document
செய்வதற்கு இங்கே சந்தர்ப்பம் ஏற்பட்டது.  மலத்தை மண் போட்டு
மூடிப் பிறகு அங்கிருந்து அகற்றிச் சுத்தம் செய்துவிடும் வேலையை
நாங்கள்    செய்வதாக முன்வந்தோம். டாக்டர் தேவ் மகிழ்ச்சியுடன்
இதை ஏற்றுக்கொண்டார். இந்த வேலையைச் செய்வதாகச் சொன்னது
நான்தான் என்றாலும் அதை       மகன்லால் காந்தியே நிறைவேற்ற
வேண்டியதாயிற்று. கூடாரத்தில்     உட்கார்ந்து கொண்டு ‘தரிசினம்’
கொடுப்பதும், என்னைப் பார்க்க            அங்கே வந்த அனேக
யாத்திரிகர்களுடன் மத சம்பந்தமாகவும்    மற்றவைகளைக் குறித்தும்
விவாதிப்பதுமே பெரும்பாலும் என்  வேலையாக இருந்தது. இதனால்,
என் வேலை எதையும்     கவனித்துக்கொள்வதற்கு எனக்கு நேரமே
இல்லை. என்னைப் பார்க்க வந்தவர்கள்,        நான் நீராட ஸ்நான
கட்டிடத்திற்குச் சென்ற போதும்             என்னை விடாது பின்
தொடர்ந்தார்கள். நான் சாப்பிடும் போதுகூட    அவர்கள் என்னைத்
தனியாக விட்டு வைப்பதில்லை. தென்னாப்பிரிக்காவில்  நான் செய்த
சாதாரணச்      சேவைக்கு இந்தியா முழுவதும் எவ்வளவு ஆழ்ந்த
கவர்ச்சியை             உண்டாக்கியிருந்தன என்பதை இவ்விதம்
ஹரித்துவாரத்திலேயே நான் அறியலானேன்.

     ஆனால், இது யாரும் பொறாமைப்பட    வேண்டிய நிலைமை
அன்று. இருதலைக்           கொள்ளி எறும்பின் நிலையில் நான்
இருப்பதாகவே எண்ணினேன். என்னை யாரும்  தெரிந்துகொள்ளாத
இடங்களில், ரெயில்வே பிரயாணம் போன்ற சமயங்களில்  இந்நாட்டு
மக்களில் கோடிக்கணக்கானவர்களுக்கு      ஏற்படும் கஷ்டங்களை
நானும்   அனுபவிக்க வேண்டியிருந்தது. ஆனால், என்னைப் பற்றிக்
கேள்விப்பட்டிருப்பவர்கள் என்னைச் சுற்றிக்கொண்டிருக்கும்  போது
அவர்களுடைய தரிசனப் பித்துக்குப்     பலியாக வேண்டியவனாக
இருக்கிறேன். இந்த             இரு நிலைமைகளில் எது அதிகப்
பரிதாபகரமானது என்பதை       எப்பொழுதுமே நிச்சயமாகக் கூற
என்னால் முடிந்ததில்லை.        ஆனால், ஒன்றை மாத்திரம் நான்
அறிவேன். இந்தத் தரிசனப்      பித்தர்களின் குருட்டு அன்பு, பல
தடவைகளிலும் எனக்குக்           கோபத்தையும் அடிக்கடி மன
வேதனையையுமே     உண்டாக்கி வந்திருக்கிறது. ஆனால், ரெயில்
பிரயாணமோ, மிகவும் கஷ்டமானதாகவே இருந்தபோதிலும், ஆன்மத்
தூய்மைதான்          அளித்துவந்ததேயன்றி எனக்கு ஒருபோதும்
கோபத்தை மூட்டியதில்லை.

     எவ்வளவு தூரமாயினும்       ஊரெல்லாம் சுற்றித் திரிவதற்கு
வேண்டிய பலம்,       அந்த நாளில் எனக்கு இருந்தது. அதிர்ஷ்ட
வசமாக நான் அவ்வளவு தூரம் ஊருக்கெல்லாம்  தெரிந்தவனாகவும்
ஆகிவிடவில்லை. ஆகையால்,            எவ்விதப் பரபரப்பையும்
உண்டாக்கிவிடாமல் அப்பொழுது    தெருவில் போய் கொண்டிருக்க
என்னால் முடிந்தது.             அவ்விதம் சுற்றித் திரிந்ததில் பல
விஷயங்களைக்