பக்கம் எண் :

470சத்திய சோதனை

Untitled Document
நானும் அப்படிச்        செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
கத்தியவாரிலிருக்கும்        வைசியக் குடும்பத்தினர் அக்காலத்தில்
சாதாரணமாகப் பூணூல்அணிந்து  கொள்ளுவதில்லை. ஆனால், முதல்
மூன்று வருணத்தினரும்      பூணூல் அணிய வேண்டியது அவசியம்
என்று              வற்புறுத்தும் இயக்கம் ஒன்று அப்பொழுதுதான்
ஆரம்பமாகியிருந்தது.   இதன் காரணமாகக் காந்தி சாதியைச் சேர்ந்த
பலர் பூணூல் போட்டுக் கொண்டனர். எங்களில்     இரண்டு மூன்று
சிறுவர்களுக்கு ராம ரட்சை போதித்துவந்த  பிராமணர், எங்களுக்கும்
பூணூல் போட்டு விட்டார். நான் சாவிக்கொத்து   வைத்துக்கொள்ளச்
சந்தர்ப்பம் ஏற்படாவிட்டாலும், ஒரு சாவிக் கொத்தைச்   சம்பாதித்து
என் பூணூலில் மாட்டிக்கொண்டேன்.        பிறகு பூணூல் அறுந்து
போய்விட்டது. அது போய்விட்டதே என்று       அப்பொழுது நான்
வருத்தப்பட்டேனா என்பது எனக்கு      ஞாபகம் இல்லை. ஆனால்
புதிதாகப் பூணூலைத் தேடி        நான் போட்டுக் கொள்ளவில்லை
என்பதை அறிவேன்.

     நான் பெரியவன்           ஆகிவிட்ட பிறகு, இந்தியாவிலும்
தென்னாப்பிரிக்காவிலும் பலர், நல்ல எண்ணத்தின் பேரிலேயே, நான்
பூணூல் போட்டுக்கொள்ளும்படி     செய்ய முயன்றார்கள். ஆனால்,
அவர்கள் முயற்சிவெற்றியடையவில்லை.       சூத்திரர்கள் பூணூல்
போட்டுக் கொள்ளக்கூடாது என்றால்,       மற்ற வருணத்தினருக்கு
மாத்திரம் அதைப்        போட்டுக்கொள்ளுவதற்கு என்ன உரிமை
இருக்கிறது என்று விவாதித்தேன். பூணூல்    போட்டுக்கொள்ளுவது
அனாவசியமான பழக்கம் என்பது என்  கருத்து. ஆகையால், அதை
அணிய வேண்டும் என்பதற்குப் போதுமான    நியாயம் இருப்பதாக
எனக்குத் தோன்றவில்லை. பூணூலைப் பொறுத்த வரையில்  எனக்கு
எந்தவித ஆட்சேபமும் இல்லை. ஆனால், அதை அணிய வேண்டும்
என்பதற்குரிய நியாயம்தான் எனக்குத் தென்படவில்லை.

     வைஷ்ணவன் என்ற முறையில் என் கழுத்தில்  துளசி மாலை
அணிந்திருந்தேன். குடுமி வைத்திருப்பது  அவசியம் என்று வீட்டில்
பெரியவர்கள் கருதி வந்தார்கள்.    ஆயினும், நான் இங்கிலாந்துக்கு
புறப்படவிருந்த தருணத்தில்     உச்சிக் குடுமியை எடுத்துவிட்டேன்.
எடுக்காமல் இருந்தால், தலையில்     தொப்பியில்லாத போது அதை
யாராவது பார்த்துவிட்டால்    பரிகாசம் செய்வார்கள் என்றும், நான்
ஒரு காட்டுமிராண்டி என்று ஆங்கிலேயருக்குத் தோன்றும்   என்றும்
அப்பொழுது நான் எண்ணினேன்.            இந்தக் கோழைத்தன
உணர்ச்சியின் காரணமாக  தென்னாப்பிரிக்காவில் மதநம்பிக்கையுடன்
குடுமி வைத்திருந்த என்  சகோதரரின்         மகனான சகன்லால்
காந்தியையும் அதை      எடுத்துவிடும்படி செய்தேன். அவருடைய
பொதுஜன சேவைக்கு அக்குடுமி