பக்கம் எண் :

லட்சுமணன் பாலம்471

Untitled Document
இடையூறாக இருக்கும் என்று அஞ்சினேன்.      ஆகையால், அவர்
மனத்துக்குக் கஷ்டமாக இருக்குமே என்பதைக் கூடக் கவனிக்காமல்,
அவர் அக்குடுமியை எடுத்துவிடும்படி செய்தேன்.

     எனவே, எல்லா விவரங்களையும்     சுவாமிக்கு எடுத்துக்கூறி
விட்டு நான் மேலும் கூறியதாவது: “கணக்கற்ற   ஹிந்துக்கள் பூணூல்
அணியாமலேயே ஹிந்துக்களாக இருந்துவ        முடிகிறது. பூணூல்
போட்டுக்கொண்டாக வேண்டும்        என்பதற்கு எந்த நியாயமும்
இருப்பதாக நான் காணவில்லை.           ஆகையால், அதை நான்
போட்டுக்கொள்ளப்  போவதில்லை. மேலும், பூணூல் ஆன்மிகப்புனர்
வாழ்வுக்குச் சின்னமாக இருக்க வேண்டும்.      அதை அணிகிறவர்,
உயரிய தூய வாழ்க்கை நடத்துவதற்கு முயல்பவராகவும்     இருக்க
வேண்டுவது அவசியம். ஆனால்,      ஹிந்து சமயமும் இந்தியாவும்
இன்றுள்ள நிலைமையில், அத்தகைய      பொருளோடு கூடிய ஒரு
சின்னத்தை அணிந்துகொள்ளத் தங்களுக்கு    உரிமை உண்டென்று
ஹிந்துக்கள் காட்டமுடியுமா    என்பதைச்  சந்தேகிக்கிறேன். ஹிந்து
சமயத்திலிருந்து        தீண்டாமை ஒழிந்து, உயர்வு,  தாழ்வு என்ற
பேதங்களெல்லாம் போய், அதில்    இப்பொழுது  மலிந்து கிடக்கும்
பலவிதமான            தீமைகளும் வேஷங்களும்  நீங்கிய பிறகே
ஹிந்துக்களுக்கு அந்த உரிமை ஏற்படமுடியும்.  ஆகையால், பூணூல்
போட்டுக்கொள்ளுவது என்ற கருத்தையே என்  மனம் வெறுக்கிறது.
ஆனால், குடுமியைப்பற்றி நீங்கள்      கூறும் யோசனை சிந்திக்கத்
தக்கதே. ஒரு  சமயம் குடுமி வைத்திருந்து, வெட்கம் என்று தவறான
எண்ணத்தால் அதை எடுத்துவிட்டேன். ஆகவே, திரும்பவும்  அதை
வளர்த்து விட வேண்டும் என்று உணர்கிறேன். என் தோழர்களுடன்
இதைக் குறித்து விவாதிக்கிறேன்.”

     பூணூலைக் குறித்து       என்னுடைய நிலையைச் சுவாமியார்
ஒப்புக்கொள்ளவில்லை. அதை அணியவேண்டியதில்லை  என்பதற்கு
எனக்கு எவை நியாயங்களாகத் தோன்றியனவோ அவையே அணிய
வேண்டும் என்பதற்குக் காரணங்களாக      அவருக்குத் தோன்றின.
இவ்விஷயத்தில் ரிஷிகேசத்தில் நான் கொண்டிருந்த கருத்து எதுவோ
அதுவே இன்றும் என்     கருத்தாகும். சமயங்கள் பல இருந்துவரும்
வரையில், ஒவ்வொரு சமயத்திற்கும்      வெளிப்படையான சின்னம்
ஏதாவது அவசியமாக இருக்கலாம். ஆனால்,      அந்தச் சின்னமே
பிரமாதமாக்கப்பட்டு, இன்னொரு         மதத்தைவிடத் தன் மதமே
உயர்வானது என்று காட்டுவதற்கு     அது பயன்படுத்தப்படுமாயின்,
அப்பொழுது அச்சின்னம்      புறக்கணிக்கப்படுவதற்கே ஏற்றதாகும்.
ஹிந்து சமயத்தை மேன்மைப்படுத்துவதற்கான   சாதனமாகப் பூணூல்
இன்று எனக்குத் தோன்றவில்லை. ஆகையால்,     அதில் எனக்குச்
சிரத்தையும் இல்லை.