பக்கம் எண் :

472சத்திய சோதனை

Untitled Document
     குடுமியைப் பற்றியவரையில் அதை  நான் எடுத்துவிட்டதற்குக்
கோழைத்தனமே காரணமாக இருந்ததால்,    நண்பர்களுடன் கலந்து
ஆலோசித்த பிறகு திரும்பவும்    குடுமி வளர்க்க முடிவு செய்தேன்.

     இப்பொழுது லட்சுமண ஜூலாவைக்   குறித்துக் கவனிப்போம்.
ரிஷீகேசம், லட்சுமண ஜூலா ஆகியவற்றின்   இயற்கைக் காட்சிகள்
என் மனத்தைக் கவர்ந்தன.   இயற்கை அழகை அனுபவிக்கும் நமது
மூதாதையர்களின் உணர்ச்சிக்குத் தலை வணங்கினேன்.   ஏனெனில்,
இயற்கையின் அழகிய            தோற்றங்களுக்கு அவர்கள் முன்
யோசனையின் பேரில்             சமய பூர்வமான முக்கியத்துவம்
அளித்திருந்தார்கள்.

     ஆனால், இயற்கைக்காட்சிகள்      மிகுந்த இந்த இடங்களை
மனிதர் உபயோகித்து வந்த விதங்கள் என் மனத்திற்குச் சங்கடத்தை
உண்டாக்கின.    ஹரித்துவாரத்தைப் போல ரிஷீகேசத்திலும் மக்கள்
ரஸ்தாக்களையும் அழகிய கங்கைக் கரைகளையும்   ஆபாசப்படுத்தி
வந்தனர். கங்கையின் புனித நீரையும்     அசுத்தப்படுத்த அவர்கள்
தயங்கவில்லை. கொஞ்சதூரம் போனால்      ஜன நடமாட்டமில்லாத
இடங்களுக்கு எளிதாகப்     போயிருக்கக் கூடுமெனினும், அப்படிச்
செய்யாமல்     பாட்டைகளிலும் நதிக்கரைகளிலும் மக்கள் மலஜலம்
கழித்ததைக் கண்டு என் மனம் அதிக வேதனையடைந்தது.

     லட்சுமண ஜூலா என்பது       கங்கைமீது போடப்பட்டிருந்த
தொங்கும் இரும்புப் பாலமே தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதைக்
கண்டேன். முன்பு அந்த இடத்தில்    சிறந்த கயிற்றுப் பாலம் ஒன்று
இருந்ததாம். ஆனால், தரும சிந்தனையுள்ள       ஒரு மார்வாரியின்
மூளையில், அக் கயிற்றுப் பாலத்தை நாசப்படுத்தி விட்டு   அதற்குப்
பதிலாக ஓர் இரும்புப் பாலத்தைப் போடும்    யோசனை எப்படியோ
பிறந்துவிட்டது. ஏராளமான செலவில் அப்பாலத்தைப் போட்டு, அதன்
சாவியை அவர்     அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டார். கயிற்றுப்
பாலத்தை நான் பார்த்ததில்லை. ஆகையால்,   அதைக் குறித்து நான்
எதுவும் சொல்லுவதற்கில்லை. ஆனால்,          இரும்புப் பாலமோ
அங்கிருக்கும்                       சூழ்நிலைக்குக் கொஞ்சமும்
பொருத்தமில்லாததாவதோடு        அங்கிருக்கும் அழகையும் அது
கெடுத்துவிடுகிறது. யாத்திரிகர்கள்          செல்வதற்கு என்றுள்ள
அப்பாலத்தின் சாவியை    அரசாங்கத்தினிடம் கொடுத்து விட்டதை,
எனக்கு அதிக ராஜவிசுவாசம் இருந்த அந்த நாளில் கூட, என்னால்
பொறுக்க முடியவில்லை.

     பாலத்தைக் கடந்தால்            சுவர்க்காசிரமம் போகலாம்.
சுவர்க்காசிரமம் என்பது மிகவும் மோசமான இடம்.       இரும்புத்
தகட்டுக் கூரை போட்ட சில ஆபாசமான  கொட்டகைகளைத் தவிர
அங்கே வேறு எதுவுமே இல்லை.     அவை சாதகர்களுக்கு என்று