பக்கம் எண் :

ஆரம்பக் கஷ்டங்கள்477

Untitled Document
செய்ய விரும்புகிறேன். அதை  நீங்கள்    ஏற்றுக்கொள்ளுவீர்களா?”
என்று அவர் என்னைக் கேட்டார்.

     “நிச்சயமாக       ஏற்றுக்கொள்ளுவோம்.    எங்கள் கையில்
இருந்ததெல்லாம் செலவழிந்து       போய்விட்ட நிலையில் நாங்கள்
இருக்கிறோம் என்பதையும் உங்களிடம்      கூறுகிறேன்” என்றேன்.

     “நாளை இதே நேரத்தில்          இங்கு வருகிறேன். நீங்கள்
இருப்பீர்களல்லவா?” என்றார்.

     “ஆம்” என்று நான் சொன்னதும் அவர் போய்விட்டார்.

     அடுத்த நாள், சரியாக அந்த      நேரத்தில் நாங்கள் இருந்த
இடத்திற்கு அருகில் மோட்டார்          வந்து நின்றது. வந்ததற்கு
அறிகுறியாகச் சப்தம்   கொடுக்கப்பட்டது. குழந்தைகளும் ஓடிவந்து
சமாச்சாரத்தைச் சொன்னார்கள். சேத் உள்ளே வரவில்லை;  நானே
அவரைப் பார்க்க போனேன். அவர் என் கையில்    ரூ.13,000-க்கு
நோட்டுகளைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

     இந்த உதவியை நான் எதிர்பார்க்கவே இல்லை. எப்படிப்பட்ட
புதிய வகையில் உதவி!       அந்தக் கனவான் இதற்கு முன்னால்
ஆசிரமத்திற்கு வந்ததே இல்லை.    ஒரே ஒரு முறைதான் அவரை
நான் சந்தித்திருக்கிறேன் என்று எனக்கு ஞாபகம்.  உள்ளே வரவும்
இல்லை; விசாரிக்கவும் இல்லை!       உதவியை மாத்திரம் செய்து
விட்டுப் போய்விட்டார்.     எனக்கு இது ஒப்பற்றதோர் அனுபவம்.
தீண்டாதார் வசிக்கும்    இடத்திற்குப் போய்விடுவதை இந்த உதவி
தடுத்தது. இனி ஓர்         ஆண்டுக்குக் கவலை இல்லை என்று
இப்பொழுது உணர்ந்தோம்.

     வெளியில் புயல்             இருந்து வந்ததைப் போன்றே
ஆசிரமத்திற்குள்ளும் புயல் இருந்து வந்தது.  தீண்டாத வகுப்பைச்
சேர்ந்த நண்பர்கள் தென்னாப்பிரிக்காவில்   என் வீட்டிற்கு வந்து
இருப்பதுடன் என்னுடன்      சாப்பிடுவதும் வழக்கமாக இருந்தது.
இருந்தும் இங்கே ஆசிரமத்தில்          தீண்டாத நண்பர்களைச்
சேர்த்துக்கொண்டது என்      மனைவிக்கும் மற்ற பெண்களுக்கும்
அவ்வளவாகப் பிடிக்கவில்லை.       தானி பென்னிடம் அவர்கள்
கொண்டிருந்த வெறுப்பை, அல்லது அசிரத்தையை என் காதுகளும்
கண்களும் எளிதில் கண்டு கொண்டன. பணக் கஷ்டம்கூட எனக்கு
அவ்வளவு           கவலையை உண்டுபண்ணவில்லை. ஆனால்,
உள்ளுக்குள்ளேயே இருந்த          இப்புயலை என்னால் சகிக்க
முடியவில்லை. தானி பென்       ஒரு சாதாரணப்பெண். தூதாபாய்
கொஞ்சம் படிப்பு உள்ளவர்; அதோடு    நல்ல அறிவும் உள்ளவர்.
அவருடைய பொறுமை எனக்குப்  பிடித்திருந்தது. சில சமயங்களில்
அவர் கோபமடைந்து விடுவதும் உண்டு. என்றாலும்,  மொத்தத்தில்
அவருடைய சகிப்புத்தன்மை என் மனத்தைக் கவர்ந்தது.  சில்லறை
அவமதிப்புகளையெல்லாம்       பொருட்படுத்த வேண்டாம் என்று