பக்கம் எண் :

478சத்திய சோதனை

Untitled Document
அவரைக் கேட்டுக்கொண்டேன்.       இதற்கு அவர் உடன்பட்டது
மாத்திரம் அல்ல,            அவர் மனைவியையும் அதேபோலப்
பொறுமையுடன் இருக்கும்படி செய்தார்.

     இந்தக் குடும்பத்தைச்   சேர்த்துக் கொண்டது, ஆசிரமத்திற்கு
சிறந்ததொரு படிப்பினையாயிற்று.       ஆசிரமம் தீண்டாமையைப்
பாராட்டாது என்பதை       ஆரம்பத்திலேயே உலகிற்கு எடுத்துக்
காட்டினோம். ஆசிரமத்திற்கு உதவ விரும்பியவர்களுக்கு  இவ்விதம்
எச்சரிக்கை செய்துவிட்டோம்.  இவ் வழியில்        ஆசிரமத்தின்
வேலைகள் அதிக அளவுக்குச்    சுலபமாகி விட்டன. தினந்தோறும்
அதிகரித்துக் கொண்டே போன      ஆசிரமத்தின் செலவுகளுக்கு
எல்லாம், உண்மையில்        வைதிகர்களான ஹிந்துக்களே பணம்
கொடுத்து வந்தார்கள்,            இந்த உண்மை, தீண்டாமையின்
அடிப்படையே ஆட்டங்கண்டு விட்டது    என்பதற்குத் தெளிவான
அறிகுறியாகவும் இருக்கக் கூடும். உண்மையில்  இதற்கு மற்றும் பல
சான்றுகளும் உண்டு. என்றாலும், தீண்டாதாருடன் சேர்ந்து சாப்பிடும்
அளவுக்குகூடப் போய்விடும் ஓர் ஆசிரமத்திற்கு     உதவி செய்ய
நல்ல ஹிந்துக்கள் தயங்குவதில்லை          என்பது மிகச் சிறந்த
சான்றாகும்.

     இந்த விஷயத்தைப் பற்றிய       அநேக சமாச்சாரங்களைக்
கூறாமல்       விட்டுவிட்டு மேலே போக வேண்டி இருப்பதற்காக
வருந்துகிறேன். முக்கியமான        இவ்விஷயத்தின் மீது எழுந்த
கஷ்டமான பிரச்னைகளையெல்லாம்      எப்படிச் சமாளித்தோம்?
எதிர்பாராத சிலகஷ்டங்களையெல்லாம்      எவ்விதம் சமாளித்துச்
சென்றோம் என்பன போன்ற          பல விஷயங்களை, சத்திய
சோதனையில் விவரிப்பதற்குப்    பொறுத்தமானவைகளை, கூறாமல்
விட்டுவிட்டே நான் மேலே போக வேண்டியிருக்கிறது.  இனி வரும்
அத்தியாயங்களிலும் இதேபோன்ற குறைகள் இருக்கும். முக்கியமான
விவரங்களை நான் விட்டுவிடவே வேண்டியிருக்கும்.    ஏனெனில்,
இவ்வரலாற்றில்    சம்பந்தமுடையவர்களில்     அநேகர் இன்னும்
உயிருடன்        இருக்கிறார்கள்.      அவர்கள் சம்பந்தப்பட்ட
சம்பவங்களைக் கூறும்போது,       அவர்களுடைய அனுமதியைப்
பெறாமல்  அவர்கள் பெயரை           உபயோகிப்பது சரியல்ல.
அவர்களுடைய சம்மதத்தைப்    பெறுவதென்பதோ, சம்பந்தப்பட்ட
அத்தியாயங்களை அப்போதைக்கப்போது அவர்களுக்குக்  காட்டிச்
சரிபார்த்து வெளியிடுவதோ,     அனுபவ சாத்தியமானதும் அன்று.
மேலும் அத்தகைய முறையை அனுசரிப்பது இந்தச் சுய சரிதையின்
எல்லைக்குப்           புறம்பான காரியமும் ஆகும். ஆகையால்,
மீதமிருக்கும் வரலாறு,           சத்தியத்தை நாடுவோருக்கு மிக
முக்கியமானது என்பதே என் கருத்தாயினும்,    தவிர்க்க முடியாத
விலக்குகளுடனேயே அதைக்        கூறவேண்டியிருக்கும் என்று