பக்கம் எண் :

ஒப்பந்தத் தொழிலாளி முறை ஒழிப்பு 481

Untitled Document
‘உடனே’ என்ற சொல்லுக்கு         ஒவ்வொருவரும் அவரவர்கள்
இஷ்டம்போல் வியாக்கியானம் செய்துகொள்ளுவார்கள்.  அரசாங்கம்
ஒரு வழியிலும், மக்கள்  மற்றொரு வழியிலும் பொருள் கொள்ளுவர்.
‘ஜூலை 31-ஆம் தேதிக்குள்’          என்பதை யாரும் தவறாகப்
புரிந்துகொண்டு விடுவதற்கில்லை.        அதே தேதிக்குள் ஒன்றும்
செய்யப்படவில்லையென்றால்,         நாம் மேற்கொண்டும் செய்ய
வேண்டியதைக் கவனிக்க முடியும்.  என்னுடைய வாதத்தில் நியாயம்
இருப்பதை டாக்டர் ரீட் கண்டுகொண்டார். முடிவாக ஸ்ரீ லல்லுபாயும்
சம்மதித்தார். அம்முறையை       ரத்துச் செய்வதை அறிவித்துவிட
வேண்டும்.       என்பதற்கு ஜூலை 31-ஆம் தேதியை இறுதியாக
நிர்ணயித்தோம். அதேமாதிரி பொதுக்கூட்டத்திலும்   ஒரு தீர்மானம்
நிறைவேறியது. இந்தியா முழுவதிலும் நடந்த   பொதுக்கூட்டங்களும்
இதேபோன்று தீர்மானம் செய்தன.

     வைசிராயிடம் பெண்கள்     தூதுகோஷ்டி ஒன்று போவதற்கு
ஏற்பாடு செய்வதில் முழுச் சிரத்தையையும்   ஸ்ரீமதி ஜெய்ஜி பெடிட்
எடுத்துக்கொண்டார். பம்பாயிலிருந்து தூது சென்ற பெண்களில் லேடி
டாட்டா, காலஞ்சென்ற தில்ஷாத் பீகம்      ஆகியோரின் பெயர்கள்
எனக்கு ஞாபகம் இருக்கின்றது.     அத் தூது கோஷ்டி சென்றதால்
அதிக  நன்மை ஏற்பட்டது. நம்பிக்கை ஏற்படும் வகையில் வைசிராய்
அத் தூது கோஷ்டிக்குப் பதில் சொன்னார்.

      கராச்சி, கல்கத்தா முதலிய      அநேக இடங்களுக்கு நான்
சென்றேன். அங்கெல்லாம் சிறப்பான   பொதுக்கூட்டங்கள் நடந்தன.
எங்கும் எல்லையற்ற       உற்சாகம் இருந்தது. இது போலெல்லாம்
இருக்கும் என்று, கிளர்ச்சியை       ஆரம்பித்தபோது நான் எதிர்
பார்க்கவில்லை.

     அந்த நாளில் நான் தனியாகவே       பிரயாணம் செய்தேன்.
ஆகையால், அற்புதமான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன. ரகசியப்
போலீஸார் என் பின்னால்     வந்துகொண்டே இருந்தனர். ஆனால்,
ஒளிப்பதற்கு என்னிடம் எதுவுமே இல்லாததால், அவர்கள் என்னைத்
தொந்தரவு செய்யவில்லை. அவர்களுக்கும் நான்    எந்த விதமான
கஷ்டமும் கொடுக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக     நான் அப்போது
‘மகாத்மா’ பட்ட முத்திரையைப்       பெற்றுவிட வில்லை. ஆனால்,
என்னைத் தெரிந்த        இடங்களில் மக்கள் அப்பெயர் சொல்லிக்
கோஷிப்பது சர்வ சாதாரணமாக இருந்தது.

     ஒரு சமயம் ரகசியப் போலீஸார்       பல ஸ்டேஷன்களிலும்
என்னைத் தொந்தரவு          செய்துவிட்டார்கள். என்னிடமிருந்த
டிக்கெட்டைக் காட்டச் சொல்லி, அதன்        நம்பரைக் குறித்துக்
கொண்டனர். நானோ, அவர்கள் கேட்ட     கேள்விகளுக்கெல்லாம்
உடனே பதில் சொல்லி வந்தேன். என்னுடன்     அந்த வண்டியில்