பக்கம் எண் :

482சத்திய சோதனை

Untitled Document
இருந்த பிரயாணிகள், நான் யாரோ  ‘சாது’ அல்லது ‘பக்கிரி’ என்று
எண்ணிக்கொண்டு விட்டனர்.      ஒவ்வொரு ஸ்டேஷனிலும் நான்
தொந்தரவு    செய்யப்படுகிறேன் என்பதைக் கண்டதும்  அவர்கள்
ஆத்திரமடைந்து ரகசியப்           போலீஸாரைத் திட்டினார்கள்:
“அனாவசியமாக அந்தச் சாதுவை ஏன் தொந்தரவு  செய்கிறீர்கள்?”
என்றும் கேட்டனர். “இந்தப் பாதகர்களிடம் உங்கள் டிக்கெட்டைக்
காட்டாதீர்கள்” என்றும் அவர்கள் எனக்குக் கூறினர்.

     “என்னுடைய டிக்கெட்டை        அவர்களிடம் காட்டுவதில்
எனக்குக் கஷ்டம் எதுவும் இல்லை.     அவர்கள், அவர்களுடைய
கடமையைச் செய்கிறார்கள்” என்று நான் சாந்தமாக அவர்களுக்குச்
சமாதானம் கூறினேன். ஆனால்,          பிரயாணிகள் சமாதானம்
அடையவில்லை. என்னிடம்            மேலும் மேலும் அனுதாபம்
கொண்டார்கள். ஒரு பாவமும் அறியாதவர்கள் இவ்விதம் தொந்தரவு
செய்யப்படுவதைப் பலமாகக் கண்டித்தார்கள்.

     ஆனால், ரகசியப் போலீஸாரின் தொல்லை  பெரிய தொல்லை
அல்ல. உண்மையான     கஷ்டமெல்லாம்      மூன்றாம் வகுப்புப்
பிரயாணந்தான். லாகூரிலிருந்து      டில்லிக்குப் போன போதுதான்
எனக்கு மிகுந்த கஷ்டமான அனுபவம் ஏற்பட்டது. கராச்சியிலிருந்து
லாகூர் வழியாகக் கல்கத்தாவுக்குப்      போய்க் கொண்டிருந்தேன்.
லாகூரில் வண்டி மாறி ஏற வேண்டும். வண்டியில் கொஞ்சமும் இடம்
கிடைக்கவில்லை. வண்டி நிறையக்   கூட்டம் இருந்தது. வண்டிக்குள்
ஏற முடிந்தவர்கள், இடித்துத்       தள்ளிக் கொண்டு பலவந்தமாக
ஏறியவர்களே. கதவுகள் பூட்டப்பட்டிருந்த    வண்டிகளில் ஜன்னல்
வழியாகச் சிலர் ஏறிக் குதித்தனர்.         பொதுக் கூட்டத்திற்குக்
குறிப்பிட்டிருந்த தேதியில் நான் கல்கத்தாவுக்குப் போய்ச் சேர்ந்தாக
வேண்டும். இந்த வண்டியை நான் விட்டு விட்டால் உரிய காலத்தில்
நான் கல்கத்தா  போய்ச் சேர முடியாது. உள்ளே புகுந்துவிடமுடியும்
என்ற              நம்பிக்கையையெல்லாம் விட்டுவிட்டேன். நான்
ஏறிக்கொள்ளுவதை அனுமதிக்க       யாரும் தயாராயில்லை. நான்
இவ்விதம் திண்டாடு வதைக் கண்ட     ஒரு போர்ட்டர், என்னிடம்
வந்து, “எனக்குப் பன்னிரெண்டு        அணாக் கொடுங்கள். நான்
உங்களுக்கு ஓர் இடம் தேடித்  தருகிறேன்” என்றார். “சரி; எனக்கு
இடம் தேடிக் கொடுத்து விட்டால் உமக்கு     பன்னிரண்டு அணா
தருகிறேன்” என்றேன். அந்த வாலிபர்,        வண்டி வண்டியாகப்
போனார். பிரயாணிகளைக்           கெஞ்சிக் கேட்டார். ஆனால்,
ஒருவர்கூட     அவர் கெஞ்சலுக்குச் செவி சாய்க்கவில்லை. ரெயில்
புறப்படவிருந்த சமயத்தில்        சில பிரயாணிகள், “இங்கே இடம்
கிடையாது; வேண்டுமானால், அவரை உள்ளே தள்ளு;  அவர் நின்று
கொண்டுதான் வரவேண்டும்”                என்றார்கள். “என்ன
சொல்லுகிறீர்கள்?” என்று