பக்கம் எண் :

ஒப்பந்தத் தொழிலாளி முறை ஒழிப்பு 483

Untitled Document
வாலிபப் போர்ட்டர்           என்னைக் கேட்டார்.  நான் உடனே
சம்மதித்தேன். என்னை அவர் அப்படியே தூக்கி  ஜன்னல் வழியாக
உள்ளே தள்ளினார். இவ்வாறு    உள்ளே புகுந்தேன்;  போர்ட்டரும்
பன்னிரெண்டு அணா சம்பாதித்துவிட்டார்.

     இரவு பெரும் சோதனையாகிவிட்டது.     மற்றப் பிரயாணிகள்
எப்படியோ சமாளித்து        உட்கார்ந்திருந்தார்கள். மேல் தட்டின்
சங்கிலியைப் பிடித்துக்கொண்டு        இரண்டு மணி நேரம் நின்று
கொண்டே இருந்தேன். இதன்           நடுவில் சில பிரயாணிகள்
இடைவிடாமல்  என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தனர்.
“கீழே         உட்காருகிறதுதானே?” என்று என்னைக் கேட்டனர்.
உட்காருவதற்கு இடமே இல்லை என்று அவர்களுக்குச்   சமாதானம்
கூற முயன்றேன். அவர்கள் மேல் தட்டுகளில்     நன்றாகக் காலை
நீட்டிக்கொண்டு           படுத்திருந்தபோதிலும்,     நான் நின்று
கொண்டிருப்பதை அவர்களால்      சகிக்க முடியவில்லை. என்னை
ஓயாமல் தொந்தரவு செய்து       கொண்டே இருந்தார்கள். நானும்
சளைக்காமல் சாந்தமாக அவர்களுக்குப்  பதில் சொல்லிக்கொண்டே
வந்தேன். கடைசியில் ஒருவாறு         சமாதானம் அடைந்தார்கள்.
அவர்களில் சிலர், என் பெயர் என்ன    என்று விசாரித்தனர். நான்
அதைச் சொன்னதும் வெட்கமடைந்தனர்.     என்னிடம் மன்னிப்புக்
கேட்டுக்கொண்டதோடு எனக்கு      இடமும் ஒளித்துத் தந்தார்கள்.
இவ்விதம் பொறுமைக்குப் பலன் கிடைத்தது.         நான் அதிகக்
களைப்படைந்து விட்டேன். தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது.  உதவி
மிகவும் தேவையாக          இருந்த நேரத்தில் கடவுள் உதவியை
அனுப்பினார்.

     இவ்விதமாக ஒருவாறு           டில்லி சேர்ந்தேன்; பின்னர்
கல்கத்தாவுக்குப்போய்ச் சேர்ந்தேன்.           கல்கத்தாப் பொதுக்
கூட்டத்திற்குத் தலைமை வகித்த        காஸிம்பஜார் மகாராஜாவின்
விருந்தினனாகத் தங்கியிருந்தேன். கராச்சியில் இருந்ததைப் போன்றே
இங்கும்       மக்கள் அளவில்லாத உற்சாகம் கொண்டு இருந்தனர்.
அக்கூட்டத்திற்கு அநேக ஆங்கிலேயர்களும் வந்திருந்தார்கள்.

     இந்தியாவிலிருந்து       ஒப்பந்தத்தின் பேரில் தொழிலாளரை
அனுப்புவது நிறுத்தப்பட்டுவிட்டது என்று ஜூலை 31-ஆம் தேதிக்கு
முன்னாலேயே அரசாங்கம் அறிவித்துவிட்டது.

     இம் முறையை ஆட்சேபித்து         நான் முதல் மனுவைத்
தயாரித்தது 1894-ஆம் ஆண்டில்;      இம்முறையைக் குறித்து ஸர்
ஹன்டர் கூறி வந்ததுபோல் ‘பாதி அடிமைத்தனமான’     இது ஒரு
நாளைக்கு ஒழிக்கப்பட்டே            ஆகவேண்டும் என்று நான்
அப்பொழுதே நம்பினேன்.

     1894-இல் ஆரம்பமான     கிளர்ச்சிக்கு உதவி செய்தவர்கள்