பக்கம் எண் :

492சத்திய சோதனை

Untitled Document
தெரிவித்தேன். மேற்கொண்டும் நான் செல்ல முடியாதபடி அரசாங்கம்
என்னைத்              தடுத்துவிடக்கூடும் என்றும், ஆகவே நான்
எதிர்பார்த்ததற்கும் முன்னாலேயே நான் சிறை சென்று விட நேரலாம்
என்றும், நான் கைது செய்யப்பட்டால்,     அப்படிச் செய்யப்படுவது
பேதியாவில்            சாத்தியமானால் நடக்க வேண்டும்; அல்லது
மோதிகாரியில் நடப்பது        மிகச் சிறந்தது என்றும் சொன்னேன்.
ஆகையால் சாத்தியமான வரையில்     சீக்கிரத்திலேயே நான் அந்த
இடங்களுக்குப் போவதே நல்லது என்றும் கூறினேன்.

     திர்ஹு த் டிவிஷனில் சம்பாரண் ஒரு ஜில்லா; மோதிகாரி அதன்
தலைநகரம்.    ராஜ்குமார் சுக்லாவின் ஊர் பேதியாவுக்குப் பக்கத்தில்
இருந்தது. அதற்குப்         பக்கத்திலிருந்த கிராமங்களைச் சேர்ந்த
விவசாயிகளே, அந்த ஜில்லாவில் மிகவும் ஏழைகள். அவர்களை நான்
பார்க்க வேண்டும் என்று     ராஜ்குமார் சுக்லா விரும்பினார்; நானும்
அவர்களைப் பார்க்க வேண்டும் என்று      ஆவலுடன் இருந்தேன்.

     ஆகவே, அன்றே என்            சக ஊழியர்களுடன் நான்
மோதிகாரிக்குப் புறப்பட்டேன்.         அங்கே பாபு கோரக் பிரசாத்
எங்களுக்குத் தம் வீட்டில் தங்க இடம்  கொடுத்தார். இதனால் அவர்
வீடு ஒரு சத்திரம் போல் ஆகிவிட்டது.        நாங்கள் எல்லோரும்
தங்குவதற்கு அந்த வீட்டில் இடம் போதவில்லை.      மோதிகாரிக்கு
ஐந்து மைல் தூரத்தில் ஒரு     விவசாயி துன்புறுத்தப்பட்டார் என்று
அன்றே நாங்கள் கேள்விப்பட்டோம். அடுத்த நாள்   காலையில் பாபு
தரணீதர் பிரசாத்துடன்    நான் அங்கே போய் அந்த விவசாயியைப்
பார்ப்பது என்று முடிவு செய்தோம்.      அதன்படி யானை மீது ஏறி
நாங்கள் அவ்விடத்திற்குப் புறப்பட்டோம். குஜராத்தில்  மாட்டு வண்டி
எப்படிச் சர்வ சாதாரணமோ அதேபோலச் சம்பாரணில் யானை சர்வ
சாதாரணம். பாதி தூரம்கூடப்      போயிருக்க மாட்டோம், அதற்குள்
போலீஸ் சூப்பரின்டெண்டென்டிடமிருந்து வந்த ஓர் ஆள் எங்களைப்
பிடித்தார். போலீஸ்       சூப்பரின்டெண்டென்ட் தமது வந்தனத்தை
எனக்கு அனுப்பியதாக அந்த ஆள்      கூறினார். அவர் கூறியதன்
கருத்தை நான்     அறிந்துகொண்டேன். போக இருந்த இடத்திற்குத்
தரணீதர் பிரசாத்தை        மாத்திரம் போகச் சொல்லிவிட்டு, அந்த
ஆள் கொண்டு வந்திருந்த வாடகை வண்டியில்         நான் ஏறிக்
கொண்டேன். சம்பாரணிலிருந்து நான்    போய்விட வேண்டும் என்ற
உத்தரவைப் பிறகு அந்த ஆள் எனக்குச்   சாதரா செய்து, என்னை
நான் தங்கியிருந்த இடத்துக்குக் கொண்டு     வந்து விட்டுவிட்டார்.
உத்தரவைப் பெற்றுக் கொண்டதற்குக்      கையெழுத்துப் போட்டுத்
தரும்படி     அவர் கேட்டார். அந்த உத்தரவுக்கு நான் கீழ்ப்படியப்
போவதில்லை என்றும், என்     விசாரணை முடியும் வரையில் நான்
சம்பாரணிலிருந்து