பக்கம் எண் :

அகிம்சையுடன் நேருக்குநேர் 493

Untitled Document
போகப்போவதில்லை என்றும் எழுதிக் கொடுத்தேன்.  அதன் பேரில்
சம்பாரணை விட்டுப் போய்விடவேண்டும் என்ற உத்தரவை மீறிவிட்ட
குற்றத்திற்காக விசாரிப்பதற்கு,       மறுநாள் கோர்ட்டுக்கு வருமாறு
எனக்குச் சம்மன் வந்தது.

     அன்று இரவு முழுவதும்            விழித்திருந்து கடிதங்கள்
எழுதினேன்;    பாபு பிரஜ்கிஷோர் பிரசாத்துக்கு      அவசியமான
யோசனைகளை எல்லாம் கூறினேன்.

     எனக்கு உத்தரவிடப்பட்டதும் சம்மன்          வந்திருப்பதும்
காட்டுத்தீபோல் எங்கும் பரவிவிட்டன. மோதிகாரி, இதற்கு  முன்னால்
என்றுமே கண்டறியாத காட்சியை           அன்று கண்டது என்று
சொன்னார்கள். கோரக் பாபுவின்   வீட்டிலும், கோர்ட்டிலும் சொல்ல
முடியாத அளவுக்கு ஒரே ஜனக் கூட்டம்.     அதிர்ஷ்டவசமாக என்
வேலைகளையெல்லாம் இரவிலேயே செய்து      முடித்து விட்டதால்
அப்பெரும் கூட்டத்தைச் சமாளிக்க        என்னால் முடிந்தது. என்
சகாக்கள் எனக்கு அதிக உதவியாக      இருந்தார்கள். நான் போன
இடத்திற்கெல்லாம் கூட்டம்          பின் தொடர்ந்து வந்துகொண்டு
இருந்ததால் அக் கூட்டத்தை      ஒழுங்குபடுத்தும் வேலையில் என்
சகாக்கள் ஈடுபட்டிருந்தனர்.

     கலெக்டர், மாஜிஸ்டிரேட், போலீஸ்     சூப்பரின்டெண்டென்ட்
ஆகிய அதிகாரிகளுக்கும் எனக்கும் இடையே ஒரு வகையான நட்பு
ஏற்பட்டது. எனக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்த       உத்தரவைச் சட்ட
ரீதியில் நான் ஆட்சேபித்திருக்கலாம். ஆனால், அதற்கு மாறாக நான்
அவற்றை எல்லாம் பெற்றுக் கொண்டேன்.  அதிகாரிகள் விஷயத்தில்
நான் தவறில்லாமலும் நடந்து கொண்டேன்.   இதிலிருந்து தனிப்பட்ட
வகையில் தங்களை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை என்றும்,
அவர்களுடைய உத்தரவைச்        சாத்விகமாக எதிர்க்கவே நான்
விரும்புகிறேன் என்றும்       அவர்கள் கண்டு கொண்டனர். இந்த
வகையில் அவர்கள் கவலையற்றவர்களாயினர். என்னைத் தொந்தரவு
செய்வதற்குப் பதிலாகக் கூட்டத்தை      ஒழுங்குபடுத்துவதற்கு என்
ஒத்துழைப்பையும்,             என் சகாக்களின் ஒத்துழைப்பையும்
மகிழ்ச்சியுடன்           பயன்படுத்திக் கொண்டார்கள். என்றாலும்,
தங்களுடைய   அதிகாரம் ஆட்டம் கண்டு விட்டது என்பதற்கு அது
கண்கூடான சாட்சியாக அவர்களுக்கு    இருந்தது. அந்த நேரத்தில்
மக்கள், தண்டனையைப்                பற்றிய பயத்தையெல்லாம்
இழந்துவிட்டார்கள். தங்கள்     புதிய நண்பர்கள் காட்டிய அன்பின்
சக்திக்கே பணிந்தனர்.

     சம்பாரணில் யாருக்கும்        என்னைத் தெரியாது என்பதை
ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.   விவசாயிகள் எல்லோரும்
ஒன்றுமே அறியாதவர்கள். சம்பாரண்,    கங்கைக்கு வடக்கில் வெகு
தூரத்திலும், இமயமலை அடிவாரத்தில் நேபாளத்திற்குப்