பக்கம் எண் :

496சத்திய சோதனை

Untitled Document

இவர்களின்       ஒத்துழைப்புடன் நிலைமையை  ஆராயவே நான்
வந்திருக்கிறேன். இதைத் தவிர        எனக்கு வேறு எந்தவிதமான
நோக்கமும் இல்லை. நான் வந்திருப்பதால்  பொது ஜன அமைதிக்குப்
பாதகம் ஏற்படும் என்றோ, உயிர்ச்சேதம்   ஏற்பட்டு விடும் என்றோ
நான் நம்ப முடியாது. இத்தகைய விஷயங்களில்      எனக்கு அதிக
அனுபவம் உண்டு. ஆனால்,          அதிகாரிகளோ, வேறுவிதமாக
எண்ணிவிட்டார்கள்.       அவர்களுக்குள்ள கஷ்டங்களையும் நான்
முற்றும் உணருகிறேன்.        தங்களுக்குக் கிடைத்த தகவல்களைக்
கொண்டே       அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது
என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்.        சட்டத்திற்கு கட்டுப்பட்டு
நடக்கும் பிரஜை   நான். ஆகவே, எனக்குப் பிறப்பிக்கப்பட்டிருக்கும்
உத்தரவுக்குக்      கீழ்ப்படிய வேண்டும் என்பதே எனக்கு ஏற்படும்
முதல் எண்ணம். ஆனால், நான் யாருக்காக      வந்திருக்கிறேனோ
அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை நான் சட்டத்தை மீறாமல்
செய்துவிட முடியாது. அவர்களுக்கு நடுவில் நான் இருப்பதனாலேயே
அவர்களுக்கு     நான் இப்பொழுது சேவை செய்ய முடியும் என்று
உணருகிறேன். ஆகையால், இங்கிருந்து   நானாக வலியப் போய்விட
முடியாது. இவ்வாறு முரண்பட்ட கடமைகள்   ஏற்பட்டிருக்கும்போது,
அவர்களிடமிருந்து என்னை அப்புறப்படுத்திவிடும் பொறுப்பை  நான்
அதிகாரிகளின் மீதே போட முடியும்.           இந்தியாவின் பொது
வாழ்க்கையில்  என்னைப் போன்றதோர் நிலையில் இருப்பவன், பிறர்
பின்பற்றுவதற்கான காரியத்தைச் செய்வதில்   அதிக ஜாக்கிரதையாக
இருக்க வேண்டும் என்பதை முற்றும் அறிந்தே இருக்கிறேன். நாங்கள்
இன்று ஒரு சிக்கலான      அரசியல் அமைப்பின் கீழ் வாழ்கிறோம்.
இதில் சுயமதிப்புள்ள ஒருவன்,   எனக்கு ஏற்பட்டிருப்பதைப் போன்ற
சந்தர்ப்பத்தில், அனுசரிக்கக் கூடிய பத்திரமான, கௌரவமான முறை,
நான் செய்ய முடிவு செய்திருப்பதைப் போன்று தடை உத்தரவை மீறி,
அதற்குரிய தண்டனையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுவதேயாகும்.

     “இந்த வாக்குமூலத்தைக் கொடுக்க    நான் முற்பட்டிருப்பதன்
நோக்கம், எனக்குக்        கொடுக்கவிருக்கும் தண்டனையை எந்த
விதத்திலும் குறைத்துக்கொள்ளும்  முயற்சி அன்று. தடை உத்தரவை
மதிக்க நான் மறுத்திருப்பது,            சட்டப்படி ஏற்பட்டிருக்கும்
அதிகாரத்தினிடம் எனக்கு           மதிப்பு இல்லாததனால் அல்ல;
சட்டங்களுக்கெல்லாம்        மேலான சட்டமாகிய மனச்சாட்சியின்
குரலுக்குக் கீழ்ப்படிந்தே        இவ்விதம் செய்கிறேன் என்பதைக்
காட்டுவதற்கேயாகும்.”

     இவ்விதம் நான் வாக்குமூலம்          கொடுத்துவிட்ட பிறகு
விசாரணையை ஒத்தி வைப்பதற்குக் காரணமில்லை. ஆனால்