பக்கம் எண் :

498சத்திய சோதனை

Untitled Document
நான் சம்பாரணில் இருப்பதை    அங்கீகரித்துவிட்ட அரசாங்கத்தின்
போக்கு,           தோட்ட முதலாளிகளுக்கு அதிக அதிருப்தியை
உண்டாக்கிவிட்டது என்பதை  அறிவேன். அதிகாரிகள், பகிரங்கமாக
எதுவும் சொல்ல முடியாவிட்டாலும், இந்த நிலைமையை  அவர்களும்
உள்ளூர விரும்பமாட்டார்கள்         என்பதும் எனக்குத் தெரியும்.
ஆகையால், தவறான,                 தப்பான அபிப்பிராயத்தை
உண்டாக்கிவிடக்கூடிய  செய்திகள் பிரசுரமாவதால், அவர்களுடைய
குரோதமே மேலும் அதிகமாகும். அவர்களுடைய    ஆத்திரம் என்
மீது பாய்வதற்குப் பதிலாக,         இப்பொழுதே  பயந்து நடுங்கிக்
கொண்டிருக்கும் ஏழை விவசாயிகள் மீதே பாய்ந்துவிடும்.   அதோடு
அங்கிருக்கும் நிலைமையைப் பற்றிய உண்மையைக்  கண்டு கொள்ள
நான் முற்பட்டிருப்பதற்கும் இடையூறு ஏற்படும்.

     இவ்வளவு தூரம்       முன்னெச்சரிக்கையுடன் நான் நடந்து
கொண்டும், தோட்டக்காரர்கள் எனக்கு        எதிராக விஷமமான
கிளர்ச்சிகளையெல்லாம் செய்தார்கள்.  என்னைப் பற்றியும், என் சக
ஊழியர்களைக்         குறித்தும்     எல்லாவிதமான புளுகுகளும்
பத்திரிகைகளில் பிரசுரமாயின. ஆனால், நான்    மிகவும் தீவிரமான
முன்  ஜாக்கிரதையுடன் இருந்ததாலும், மிகச் சிறிய விஷயத்தில் கூட
உண்மையை நான் வற்புறுத்தி வந்ததாலும், அவர்களுடைய பிரச்சாரம்
அவர்களுக்கே தீமையாக முடிந்துவிட்டது.

     பிரஜ்கிஷோர் பாபுவின் பெயரைக்     கெடுத்துவிடத் தோட்ட
முதலாளிகள் சகலவிதமான முயற்சிகளையும் செய்தார்கள்.  ஆனால்,
அவர் மீது எவ்வளவுக்கெவ்வளவு       அவர்கள் அவதூறுகளைக்
கூறினார்களோ அவ்வளவுக்கவ்வளவு     அவருக்கு மக்களிடையே
மதிப்பு அதிகரித்தது.

     இப்படி அதிக             ஜாக்கிரதையாகக் காரியம் செய்ய
வேண்டியிருந்த    நிலையில், மற்ற மாகணங்களிலிருந்த தலைவர்கள்
யாரையும் அழைப்பது சரியல்ல      என்று எண்ணினேன். தமக்குத்
தகவல் அனுப்பியதும், நான் விரும்பும்போது உடனே வரத் தாயாராக
இருப்பதாகப் பண்டித மாளவியா எனக்கு       வாக்குறுதி அனுப்பி
இருந்தார்.   ஆனால், அவருக்கு நான் தொந்தரவு கொடுக்கவில்லை.
இப்போராட்டம் ஒரு           ராஜீயப் போராட்டம் ஆகிவிடாதபடி
பார்த்துக்கொண்டேன். ஆனால், தலைவர்களுக்கும்,     முக்கியமான
பத்திரிகைகளுக்கும் -         பிரசுரிப்பதற்காக அல்ல - அவர்கள்
அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக,        அப்போதைக்கப்போது
சமாச்சாரத்தை அறிவித்து      வந்தேன். ராஜீயக் கலப்பில்லாத ஒரு
போராட்டத்தின் முடிவு,     ராஜீயப் பலனுடையதாகவே இருக்கலாம்.
ஆயினும், அப்போராட்டத்திற்கு              ராஜீயத் தோற்றத்தை
அளித்துவிடுவதானால், அதற்குத்          தீமையையே உண்டாக்கி
விடுகிறோம் என்பதைப் பார்த்திருக்கிறேன். ஆகவே ராஜீயக்