பக்கம் எண் :

50சத்திய சோதனை

Untitled Document
என்னால் பதில்    சொல்ல  முடியவில்லை.   பேசுவதற்கு முன்னால்
ஒவ்வொரு வாக்கியத்தையும் மனத்திற்குள் நான்  சொல்லிப் பார்த்துக்
கொள்ள வேண்டியிருந்தது.   கத்தியையும்    முள்ளையும்  கொண்டு
எடுத்துச் சாப்பிடவும் எனக்குத் தெரியாது. பரிமாறப் போகும்  உணவு
வகையைக் குறிப்பிடும் சீட்டில்   கண்டவைகளில்  மாமிசம்  கலவாத
பண்டம் எது என்று கேட்டுத்    தெரிந்து  கொள்ளவும் அப்பொழுது
எனக்குத் தைரியமில்லை. ஆகையால், சாப்பாட்டு அறைக்குச் சென்று
உட்கார்ந்து நான் சாப்பிடவே இல்லை. என் அறையிலேயே சாப்பிட்டு
விடுவேன்.   நான்         சாப்பிட்டதெல்லாம்  பெரும்பாலும் நான்
உடன்கொண்டு வந்திருந்த  மிட்டாயும் பழங்களுமே.ஸ்ரீ மஜ்முதாருக்கு
இத்தகைய சங்கடம் எதுவுமே தோன்றவில்லை. அவர் எல்லோருடனும்
சகஜமாகப்      பழகிக்       கொண்டிருந்தார்.  நாளெல்லாம் நான்
அறைக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பேன். மேல் தளத்தில் அதிகம்
பேர் இல்லாதபோதுதான் அங்கே   போகத் துணிவேன்.    ஆனால்,
ஸ்ரீ      மஜ்முதாரோ மேல் தளத்திற்கு அடிக்கடி போய் உலாவுவார்.
பிரயாணிகளுடன் கூடிப் பழகி, அவர்களுடன் தாராளமாகப் பேசும்படி
அவர் எனக்கு    அடிக்கடி சொல்லுவார்  வக்கீல்களுக்குப் பேச்சுச்
சாமர்த்தியம் இருக்க   வேண்டும் என்பார்; வக்கீல் தொழிலில் தமது
அனுபவங்களையும்     எடுத்துக் கூறுவார். ஓர்  அந்நிய மொழியில்
பேசும்போது தவறு ஏற்படுவது சகஜம் என்றும், ஆகையால், அதைப்
பெருட்படுத்தாமல்   சாத்தியமான   ஒவ்வொரு    சந்தர்ப்பத்திலும்
ஆங்கிலத்திலேயே   பேசும்படியாகவும் எனக்கு    அவர் புத்திமதி
கூறினார்.   ஆனால்,   அவர் என்ன சொல்லியும் எனக்கு இருந்த
கூச்சத்தை மாத்திரம் போக்கடிக்கவே முடியவில்லை.

     ஆங்கிலப் பிரயாணி    ஒருவர், என்மீது   பிரியம் கொண்டு
என்னைப் பேச்சுக்கு இழுத்தார். அவர் என்னைவிட மூத்தவர். நான்
என்ன சாப்பிட்டேன்.   நான் யார்,  நான் எங்கே போகிறேன், நான்
இப்படிக்     கூச்சப்படுவது    ஏன் என்றெல்லாம் அவர் என்னை
விசாரித்தார்.    சாப்பாட்டு   அறைக்கு வந்து,    எல்லோருடனும்
சாப்பிடும்படியும் சொன்னார். மாமிசம் சாப்பிடுவதில்லை என்று நான்
பிடிவாதமாகக் கூறியதைக் கேட்டுச் சிரித்தார். நாங்கள் செங்கடலை
அடைந்ததும்   அவர்   நட்பு முறையில்   பின்வருமாறு கூறினார்:
“அதெல்லாம்      இது வரை  மிகவும் சரி.   ஆனால்,  பிஸ்கே
குடாக்கடல்    போய்ச்  சேர்ந்ததும்               உம்முடைய
தீர்மானத்தையெல்லாம் மாற்றிக் கொண்டுவிட    வேண்டியதுதான்.
இங்கிலாந்தில் குளிர் அதிகமாகையால்       மாமிசம் சாப்பிடாமல்
அங்கே யாருமே உயிர் வாழ முடியாது.”

     “அங்கும்    மாமிசம்  சாப்பிடாமல் மனிதர் இருக்க முடியும்
என்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றேன்.

     “அதெல்லாம் வெறும் கதை. இதை நிச்சயமாக நம்பும். புலால்