பக்கம் எண் :

முடிவாக லண்டனில்51

Untitled Document
உண்ணாமல் அங்கே இருப்பவர் எனக்குத் தெரிந்த வரையில் யாருமே
இல்லை. நான் குடிக்கிறேன். ஆனால், உம்மையும் குடிக்குமாறு  நான்
சொல்லவில்லையல்லவா? மாமிசம் சாப்பிடாமல் அங்கே   உயிர் வாழ
முடியாதாகையால் நீர்         புலால் உண்டே ஆக வேண்டும் என
நினைக்கிறேன்” என்றார்.

     “உங்கள் அன்பான       புத்திமதிக்கு என் நன்றி.  ஆனால்,
புலாலைத் தீண்டுவதில்லை என்று என் அன்னைக்கு  நான் சத்தியம்
செய்து கொடுத்துவிட்டு     வந்திருக்கிறேன்.  ஆகையால்  அதைத்
தின்னுவது என்பதை நான்      நினைப்பதற்கும் இல்லை.   அதைத்
தின்னாமல் இருப்பது         சாத்தியமில்லை என்று கண்டால் நான்
இந்தியாவுக்குத் திரும்பி விடுவேனேயன்றி அங்கே  இருக்கவேண்டும்
என்பதற்காக மாமிசம் தின்னமாட்டேன்” என்றேன்.

     பிஸ்கே    குடாக்கடலை  அடைந்தோம்.   மாமிசம் திண்பதும்
குடிப்பதும் அவசியம் என்ற       உணர்ச்சி அப்பொழுதும் எனக்கு
ஏற்படவில்லை. மாமிசமே சாப்பிடாமல்      இருந்ததற்கு அத்தாட்சிப்
பத்திரங்களைச்   சேகரித்து              வைத்துக் கொள்ளுமாறு
சொல்லியிருந்தார்கள். ஆதலால் அத்தகைய       அத்தாட்சி ஒன்று
எழுதித் தருமாறு    அந்த ஆங்கில நண்பரிடம் கேட்டேன். அவரும்
மகிழ்ச்சியுடன் கொடுத்தார். அதைக்      கொஞ்ச காலம் பத்திரமாக
வைத்தும் இருந்தேன்.   ஆனால்,   மாமிசம்    சாப்பிடுகிறவர்களும்
அத்தகைய அத்தாட்சியைப்      பெற்றுவிட முடியும் என்பதை நான்
பின்னால் கண்டதும் அத்தாட்சிப் பத்திர விஷயத்தில்    எனக்கிருந்த
மோகம்          போய் விட்டது.    என் வார்த்தையில் நம்பிக்கை
இல்லையென்றால் இவ்விஷயத்தில்            அத்தாட்சிப் பத்திரம்
வைத்திருந்துதான் என்ன பயன்?

     முடிவாக, சௌத்தாம்டன்    துறைமுகம் போய்ச் சேர்ந்தோம்.
அன்று சனிக்கிழமை என்றே எனக்கு ஞாபகம்.    கப்பலில் இருந்த
போது கறுப்பு உடை  தரித்திருந்தேன். என் நண்பர்கள் தயாரித்துக்
கொடுத்த வெள்ளைக் கம்பளி உடையைக் கப்பலிலிருந்து  இறங்கும்
போது       போட்டுக்கொள்ளுவது      என்று வைத்திருந்தேன்.
இறங்கும்போது வெள்ளை உடை      அணிந்தால் அழகாயிருக்கும்
என்று நினைத்தேன்.

     ஆகவே,     வெள்ளைக் கம்பளி ஆடை உடுத்திக் கொண்டு
இறங்கினேன். அப்பொழுது செப்டம்பர் மாதக் கடைசி.   அத்தகைய
உடை உடுத்தியவன் நான் ஒருவனே        என்பதைக் கண்டேன்.
மற்றவர்களெல்லாம் கிரிண்ட்லே கம்பெனியின் ஏஜெண்டிடம் தங்கள்
சாமான்களை எல்லாம் ஒப்படைத்து விட்டு இறங்கினார்கள்.  நானும்
அப்படியே செய்ய வேண்டும் என்று என் சாமான்களை -    சாவி
உட்பட அந்த ஏஜெண்டிடம் ஒப்பித்தேன்.

     என்னிடம் நான்கு அறிமுகக் கடிதங்கள் இருந்தன.   டாக்டர்