பக்கம் எண் :

52சத்திய சோதனை

Untitled Document
பி.ஜே. மேத்தா, ஸ்ரீ தளபத்ராம் சுக்லா, ராஜகுமாரர்   ரஞ்சித்  சிங்ஜி,
தாதாபாய் ஆகிய நால்வருக்குமே     அக்கடிதங்கள்.    லண்டனில்
விக்டோரியா ஹோட்டலில் போய்த்    தங்கும்படி கப்பலில்  யாரோ
ஒருவர் சொன்னார். அதன்படி நானும்     ஸ்ரீ மஜ்முதாரும்  அங்கே
போனோம். நான் ஒருவனே        வெள்ளையுடையுடன்  இருப்பது
எனக்குப் பெரிய அவமானமாக               இருந்தது.  மறுநாள்
ஞாயிற்றுக்கிழமை. ஆகையால், என் சாமான்களைக்     கிரிண்ட்லே
கம்பெனியார் அதற்கு      மறுநாளே கொண்டுவந்து  சேர்ப்பார்கள்
என்று    ஹோட்டலில் கூறியதும் எனக்கு  ஆத்திரம் வந்துவிட்டது.

     டாக்டர் மேத்தாவுக்குச்         சௌத்தாம்டனிலிருந்து தந்தி
கொடுத்திருந்தேன். அன்றிரவு எட்டு மணிக்கு     அவர் என்னைப்
பார்க்க வந்தார். மிக்க அன்புடன் எனக்கு முகமன்  கூறினார். நான்
வெள்ளைக் கம்பளி உடை  தரித்திருப்பதைப்   பார்த்துச் சிரித்தார்.
நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது அவருடைய உயரத் தொப்பியை
எடுத்தேன். அது எவ்வளவு மிருதுவாக இருக்கிறது என்பதை அறிய
அதைத் தடவிப் பார்த்தேன்.    தெரியாமல்  எதிர்ப்புறமாகத் தடவி
விட்டேன். அது ஒரு பிராணியின் மிருதுவான  ரோமத்தால்  ஆனது.
எனவே,    நான்     தடவியதனால்   அந்த      ரோமமெல்லாம்
கலைந்துவிட்டது. நான்           செய்ததையெல்லாம் ஒரு  மாதிரி
கோபத்துடன் டாக்டர் மேத்தா  பார்த்துவிட்டு, என்னைத்  தடுத்தார்.
ஆனால்,        விஷமம் நடந்தது நடந்துவிட்டது.     இச்சம்பவம்
வருங்காலத்திற்கு எனக்கு ஓர்      எச்சரிக்கையாயிற்று. ஐரோப்பிய
மரியாதைச் சம்பிரதாயங்களில் நான் கற்ற முதல் பாடம் இது. அந்தச்
சம்பிரதாய விவரங்களைப் பற்றி டாக்டர் மேத்தா வேடிக்கையாகவே
எனக்குப் பாடம் கற்பித்தார். “பிறருடைய சாமான்களைத் தொடாதீர்”
என்றார். “ஒருவர் முதன்முதலில்     அறிமுகமானதும் இந்தியாவில்
கேட்பதுபோல் அவரிடம்       கேள்விகளெல்லாம் போடாதேயும் ;
இரைந்து பேசக்கூடாது ;    பேசிக்கொண்டிருக்கையில் இந்தியாவில்
நாம் கூப்பிடுவதைப்போல யாரையும், ‘ஸார்’ என்று கூப்பிடக்கூடாது.
வேலைக்காரர்களும் கீழிருப்பவர்களும்      மாத்திரமே  அப்படிக்
கூப்பிடுவார்கள்” என்றார். இப்படியெல்லாம்     பல விஷயங்களை
எனக்கு போதித்தார். ஹோட்டலில்   தங்கினால் செலவு அதிகமாகும்
என்றும், தனிப்பட்ட ஒரு       குடும்பத்தினருடன்  தங்கியிருப்பதே
நல்லது என்றும்       சொன்னார்.  அதைப் பற்றித்  திங்கட்கிழமை
யோசிப்பதென்று ஒத்திவைத்தோம்.

     ஹோட்டல் வாசம் - எனக்கும் சரி,   ஸ்ரீ மஜ்முதாருக்கும் சரி,
சங்கடமானதாக இருந்தது.   அதோடு, செலவும்      அதிகமாயிற்று.
மால்டாவிலிருந்து எங்களுடன் கப்பலில் வந்த ஒரு சிந்திக்காரர்  ஸ்ரீ
மஜ்முதாருக்கு     நண்பரானார்.    லண்டன் அவருக்குப் புதிதல்ல.
ஆகவே, நாங்கள் தங்குவதற்கு அறை பார்த்துத்   தருவதாக அவர்