பக்கம் எண் :

504சத்திய சோதனை

Untitled Document
முடிவு செய்தேன். கிராமத்தினருக்கு நாங்கள் விதித்த நிபந்தனைகளில்
ஒன்று, உபாத்தியாயர்களுக்கு இருக்க    இடத்திற்கும் சாப்பாட்டிற்கும்
அவர்கள்    ஏற்பாடு செய்ய வேண்டும், மற்றச் செலவுகளை நாங்கள்
பார்த்துக்கொள்ளுகிறோம் என்பதாகும்.      கிராம மக்களிடம் பணம்
என்பதே கிடையாது. என்றாலும்,             அவர்களால் உணவுப்
பொருள்களைத் தாராளமாகக்        கொடுக்க முடியும். உண்மையில்
தானியங்களும் மற்றப் பொருள்களும்   கொடுக்கத் தயாராயிருப்பதாக
முன் கூட்டியே      அவர்கள் தங்கள் சம்மதத்தைக் கூறி விட்டனர்.

     ஆனால், உபாத்தியாயர்களுக்கு     எங்கே போவது என்பதே
பெரிய பிரச்னையாக இருந்தது.       சம்பளம் என்பதே இல்லாமல்
சாப்பாட்டுக்கு வேண்டியதை மாத்திரமே   பெற்றுக்கொண்டு வேலை
செய்ய, உள்ளூரில் உபாத்தியாயர்களைக் கண்டு பிடிப்பது கஷ்டமாக
இருந்தது. சாதாரணமாக        உபாத்தியாயர்களிடம் குழந்தைகளை
ஒப்படைக்கவே கூடாது என்பது என் கருத்து.   உபாத்தியாயர்களின்
ஒழுக்க உறுதி தான் முக்கியமேயன்றி அவர்களுடைய    இலக்கியத்
தகுதி முக்கியம் அன்று.

     ஆகவே, தொண்டு செய்ய       முன்வரும் உபாத்தியாயர்கள்
வேண்டும் என்று பொதுக்கோரிக்கை       ஒன்றை வெளியிட்டேன்.
உடனே பலர்  முன் வந்தார்கள். பாபா ஸாகிப் ஸோமன், புண்டலீகர்
ஆகிய இருவரையும் ஸ்ரீ கங்காதர ராவ் தேஷ்பாண்டே அனுப்பினார்.
பம்பாயிலிருந்து ஸ்ரீமதி அவந்திகாபாய்           கோகலே வந்தார்.
புனாவிலிருந்து        ஸ்ரீமதி ஆனந்திபாய் வைஷம்பாயண் வந்தார்.
சோட்டாலால், சுரேந்திரநாத், என் மகன் தேவதாஸ்  ஆகியவர்களை
வருமாறு ஆசிரமத்திற்கு எழுதினேன்.  இதற்குள் மகாதேவ தேசாயும்,
நரஹரி பரீக்கும் தத்தம் மனைவியர்களுடன்     என்னோடு இருந்து
வேலை செய்ய வந்துவிட்டார்கள். கஸ்தூரிபாயும்   இவ்வேலைக்காக
அழைக்கப்பட்டாள்.      இவ்விதம்      நல்ல தொண்டர் கூட்டம்
சேர்ந்துவிட்டது. ஸ்ரீமதி அவந்திகா பாயும்  ஸ்ரீ மதி ஆனந்தி பாயும்
போதிய அளவு படித்தவர்கள். ஆனால்,          ஸ்ரீ மதி துர்க்கா
தேசாய்க்கும் ஸ்ரீ மதி மணிபென் பரீக்கும்     குஜராத்தி மாத்திரமே
எழுதப் படிக்கத் தெரியும்.      கஸ்தூரிபாய்க்கு அதுவும் தெரியாது.
இப் பெண்கள் குழந்தைகளுக்கு ஹிந்தியில் எப்படிப் போதிப்பது?

     இலக்கணமும், எழுதப் படிக்கவும்,       கணக்குப் போடவும்
குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது   அவ்வளவு முக்கியமல்ல
என்றும் சுத்தமாக இருக்கவேண்டியதையும்,           நல்ல பழக்க
வழக்கங்களையும் அவர்களுக்குப்   போதிப்பதே முக்கியம் என்றும்
அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன். எழுத்துக்களைச்   சொல்லிக்
கொடுப்பதில்     கூட, அவர்கள் நினைக்கிறபடி, குஜராத்தி, ஹிந்தி,