பக்கம் எண் :

505

Untitled Document
மராத்தி மொழிகளின் எழுத்துக்களுக்கு வித்தியாசம் அதிகம் இல்லை.
ஆரம்ப வகுப்புக்களைப்     பொறுத்த வரையில், எழுத்துக்களையும்
எண்களையும் சொல்லிக்கொடுப்பது கஷ்டமான      காரியம் அல்ல
என்றும் விளக்கினேன்.       இதன் பலன் என்னவென்றால், இந்தப்
பெண்கள் சொல்லிக்              கொடுத்த வகுப்புக்களே மிகவும்
வெற்றிகரமானவைகளாக இருந்தன.          இந்த அனுபவத்தினால்
அவர்களுக்கு நம்பிக்கையும், வேலையில்   சிரத்தையும் உண்டாயின.
ஸ்ரீ மதி அவந்திகா பாயின்          பள்ளிக்கூடம், மற்றப் பள்ளிக்
கூடங்களுக்கு உதாரணமாக விளங்கியது.   அவர் தமது வேலையில்
முழு மனத்துடன் ஈடுபட்டார். தமக்கு இருந்த   அரிய ஆற்றல்களை
அவர்      இவ்வேலையில் உபயோகித்தார். இப் பெண்களின் மூலம்
கிராமப் பெண்களை நாங்கள் ஓரளவுக்கு அணுக முடிந்தது.

     ஆனால், ஆரம்பக் கல்வியை  அளிப்பதோடு நின்றுவிட நான்
விரும்பவில்லை. கிராமங்களில்       சுகாதாரம் மிகவும் சீர்கேடான
நிலையில் இருந்தது;            சந்துகளிலெல்லாம் ஒரே ஆபாசம்.
கிணறுகளைச் சுற்றிலும் ஒரே சேறும் கும்பி நாற்றமும். முற்றங்களோ
சகிக்க முடியாத அளவுக்கு ஒரே   ஆபாசமாக இருந்தன. சுத்தமாக
இருக்க வேண்டும் என்பதில் முதியவர்களுக்குப்  போதனை மிகவும்
அவசியமாக இருந்தது.         எல்லோருமே பல வகையான சரும
நோய்களால் பீடிக்கப்பட்டிருந்தனர்.      ஆகையால், சாத்தியமான
வரையில் சுகாதார சம்பந்தமான      வேலையைச் செய்து, மக்கள்
வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் புகுந்து    வேலை செய்வது
என்று முடிவு செய்தோம்.

     இந்த வேலைக்கு டாக்டர்கள் தேவைப்பட்டனர். காலஞ்சென்ற
டாக்டர் தேவின் சேவையைக் கொடுத்து உதவுமாறு இந்திய ஊழியர்
சங்கத்தைக்       கேட்டுக்கொண்டேன். நாங்கள் இருவரும் சிறந்த
நண்பர்கள். ஆறு மாதங்கள் வந்திருந்து சேவை செய்வதாக உடனே
ஒப்புக் கொண்டார். உபாத்தியாயர்களான  ஆண்களும், பெண்களும்
அவருக்குக் கீழிருந்து வேலை செய்ய வேண்டும்.

     தோட்ட முதலாளிகளிடம் அம் மக்களுக்கு  இருந்த குறைகள்
சம்பந்தமாகவோ, ராஜீய விஷயங்களிலோ  தலையிடவே வேண்டாம்
என்று அவர்கள் எல்லோருக்கும்    தெளிவாக அறிவித்திருந்தோம்.
ஜனங்களில் யாருக்காவது ஏதாவது    குறை இருந்தால், அவர்களை
என்னிடம் அனுப்பிவிட வேண்டும்.     தங்களுக்கு விதித்திருக்கும்
வேலைக்கு அப்பாற்பட்டதில்           தலையிடக்கூடாது என்றும்
தெரிவித்திருந்தோம். இந்தக்       கட்டளையெல்லாம் அற்புதமான
விசுவாசத்துடன் அவர்கள் நிறைவேற்றி      வைத்தார்கள். கட்டுத்
திட்டங்களுக்கு மீறிய காரியம் ஒன்றாவது      நடந்ததாக நினைவு
இல்லை.