பக்கம் எண் :

தொழிலாளருடன் தொடர்பு511

Untitled Document
வழிகாட்டி நடத்தவேண்டும் என்ற      விருப்பம் எனக்கு இருந்தது.
இந்தச் சிறு காரியத்தையும் அவ்வளவு தூரத்தில்    இருந்துகொண்டு
நடத்தும் துணிவு எனக்கு       இல்லை. ஆகவே, முதல் வாய்ப்புக்
கிடைத்ததுமே           அகமதாபாத்துக்குப் போனேன். இந்த இரு
விஷயங்களையும்        சீக்கிரமாகவே முடித்துவிட்டு, சம்பராணில்
ஆரம்பிக்கப்பட்டிருந்த ஆக்க வேலையைக்      கண்காணிக்க நான்
அங்கே திரும்பிவிட முடியும் என்று நம்பியிருந்தேன்.

     ஆனால், நான் விரும்பியவாறு காரியங்கள்    துரிதமாக நடை
பெறவில்லை. நான் சம்பாரணுக்குத்      திரும்பவும் போக முடியாது
போயிற்று. இதன் பலனாகப்        பள்ளிக்கூடங்கள் ஒவ்வொன்றாக
மூடப்பட்டு விட்டன. என் சக ஊழியர்களும் நானும்   எத்தனையோ
ஆகாயக்         கோட்டைகளைக்     கட்டி வந்தோம். ஆனால்
அவைகளெல்லாம் அப்போதைக்கு மறைந்து போய்விட்டன.

     நாங்கள் கட்டிய      ஆகாயக் கோட்டைகளில் ஒன்று, கிராம
சுகாதாரத்துடன் கல்வியோடும்         சம்பாரணில் பசுப் பாதுகாப்பு
வேலையையும் கவனிப்பது என்பது. அங்கே      பசுப் பாதுகாப்பும்,
ஹிந்திப் பிரச்சாரமும் மார்வாரிகளுக்கே          தனி உரிமையான
வேலையாக இருந்து வந்ததை என்         பிரயாணங்களின் போது
கண்டேன். நான் பேதியாவுக்குச் சென்றபோது, ஒரு மார்வாரி நண்பர்,
தமது தருமசாலையில் நான்     தங்குவதற்கு இடம் கொடுத்திருந்தார்.
அவ்வூரிலிருந்த மற்ற மார்வாரிகள்,     தங்களுடைய கோசாலையை
(பால் பண்ணையை) எனக்குக் காட்டி, அதில்     எனக்குச் சிரத்தை
ஏற்படும்படி செய்தனர்.       பசுப் பாதுகாப்பைக் குறித்து எனக்குத்
திட்டமான      எண்ணங்கள் அப்பொழுதே தோன்றிவிட்டன. இந்த
வேலையைக் குறித்து அன்று ஏற்பட்ட எண்ணமே இன்றும்  எனக்கு
இருந்து வருகிறது. பசுப் பாதுகாப்பு என்பதில்    கால்நடை வளர்ப்பு,
பசுவின் இனத்தைச்          சிறந்ததாக்குவது,   காளை மாடுகளை
ஜீவகாருண்யத்துடன் நடத்துவது,            சிறந்த முறையில் பால்
பண்ணைகளை அமைப்பது ஆகியவைகளையும் அடக்கியிருக்கின்றன
என்பதே என் அபிப்பிராயம். இந்த வேலையில் தங்களுடைய   முழு
ஒத்துழைப்பையும்            அளிப்பதாக    மார்வாரி நண்பர்கள்
வாக்களித்திருந்தார்கள். ஆனால் சம்பாரணில் நான் நிலைத்துத் தங்க
முடியாது போய்விட்டதால், இத்திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

     பேதியாவில் கோசாலை   இன்னும் இருக்கிறது. ஆனால், அது
மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கக்கூடிய    பால் பண்ணையாக
இல்லை. சம்பாரண் காளை மாடுகளிடம்அவைகளின் சக்திக்கு மிஞ்சி,
இன்னும் வேலை       வாங்கியே வருகிறார்கள். ஹிந்துக்கள் என்று
சொல்லிக்கொள்ளுவோர், அப்பரிதாபகரமான பிராணிகளை  இன்னும்
அடித்துத் துன்புறுத்தித் தங்கள் மதத்திற்கே