பக்கம் எண் :

512சத்திய சோதனை

Untitled Document
அவமானத்தை உண்டு பண்ணுகின்றனர்.

     இந்த வேலை நிறைவேறாது போனது  எனக்கு எப்பொழுதுமே
மன வருத்தத்தை        அளித்து வருகிறது.    சம்பாரணுக்கு நான்
போகும்போதெல்லாம் அங்குள்ள மார்வாரி,       பீகாரி நண்பர்கள்,
கண்ணியமாக இதற்காக என்னைக் கண்டிக்கின்றனர்.     திடீரென்று
கைவிட்டுவிட நேர்ந்த அவ்வேலைத்     திட்டத்தை எண்ணி நானும்
பெருமூச்சு விடுகிறேன்.

     படிப்புச் சம்பந்தமான வேலை மாத்திரமே      ஏதேனும் ஒரு
வகையில் இன்னும் பல இடங்களில்   நடந்துகொண்டுதான் வருகிறது.
ஆனால், பசுப் பாதுகாப்பு                 வேலை நன்றாக வேர்
கொள்ளவில்லையாகையால்,       உத்தேசித்திருந்தபடி அவ்வேலை
முன்னேறவில்லை.

     கேடா விவசாயிகளின் பிரச்னை       விவாதிக்கப்பட்டு வந்த
சமயத்திலேயே அகமதாபாத் மில்   தொழிலாளரின் விஷயத்தை நான்
எடுத்துக்கொண்டு விட்டேன்.        நான் மிகவும் தரும சங்கடமான
நிலையிலேயே இருந்தேன்.    ஆலைத் தொழிலாளரின் கட்சி மிகவும்
நியாயமானது. ஸ்ரீ மதி அனுசூயா பாய், தமது   சொந்தச் சகோதரரும்,
மில் சொந்தக்காரர்களின் சார்பாக       அப்போராட்டத்தை நடத்தி
வந்தவருமான ஸ்ரீ அம்பாலால் சாராபாயை       எதிர்த்துப் போராட
வேண்டியதாயிற்று. ஆலை முதலாளிகளுடன் நான் சிநேகமாகப் பழகி
வந்தேன். இதனாலேயே        அவர்களுடன் போராடுவது அதிகக்
கஷ்டமாக இருந்தது. அவர்களுடன் கலந்தாலோசித்தேன். இத்தகராறை
மத்தியஸ்தர் முடிவுக்கு விட்டுவிடுமாறு       அவர்களைக் கேட்டுக்
கொண்டேன். ஆனால், மத்தியஸ்தர்       முடிவுக்கு விடுவது என்ற
கொள்கையை அங்கீகரிக்கவே அவர்கள் மறுத்துவிட்டார்கள்.

     ஆகையால், வேலை நிறுத்தம் செய்யும்படி   தொழிலாளருக்கு
நான் ஆலோசனை கூற வேண்டியதாயிற்று.      அப்படி அவர்கள்
வேலை நிறுத்தம்     செய்வதற்கு முன்னால்,      அவர்களுடனும்
அவர்களுடைய தலைவர்களோடும் நான்        மிகவும் நெருங்கிய
தொடர்பு வைத்துக்கொண்டேன். வேலை நிறுத்தம் வெற்றிகரமாவதற்கு
உள்ள கீழ்க்கண்ட     நிபந்தனைகளையும் அவர்களுக்கு விளக்கிச்
சொன்னேன்.

1.  எந்த நிலைமையிலும் பலாத்காரத்தில்  இறங்கிவிடவே கூடாது.
2.  கட்டுப்பாட்டை மீறி வேலைக்குப்         போகிறவர்களைத்
 தொந்தரவு செய்யக்கூடாது.
3.  பிறர் இடும் பிச்சையை         எதிர்பார்த்திருக்கக் கூடாது.
4.  வேலை நிறுத்தம் எவ்வளவு  காலம் நீடிப்பதாக இருந்தாலும்
 உறுதியுடன் இருக்க வேண்டும்.  யோக்கியமாக வேறு எந்த
 வகையிலாவது உடலை உழைத்து        வேலை நிறுத்தக்
 காலத்தில்